Published:Updated:

சத்தமே இல்லாமல் ரூ.8,000 ரூபாய் விலை அதிகமான வேகன்-R... ஒரு சின்ன அப்கிரேட் மட்டும் உண்டு!

மாருதி சுஸூகியின் வேகன்-R மாடலில் புது 1.0 லிட்டர் K12B இன்ஜின் விற்பனைக்கு வந்துள்ளது.

வேகன்-R
வேகன்-R

மாருதி சுஸூகி சத்தமே இல்லாமல் தனது வேகன்-R மாடலில் சிறிய 1.0 லிட்டர் பிஎஸ்-6 பெட்ரோல் இன்ஜின் பொருத்திய வேரியன்ட்டை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. தற்போது விற்பனையில் இருக்கும் பிஎஸ்-4 வேகன்-R மாடலைவிட இந்த வேரியன்ட்கள் 8,000 ரூபாய் விலை அதிகம்.

wagon R
wagon R

மாருதியின் புதிய பிஎஸ்-6 வேகன்-R 1.0 மாடலில் இருப்பது மாருதி எஸ்-ப்ரெஸ்ஸோவில் இருக்கும் அதே 998cc K10B இன்ஜின். 68bhp பவரில் எந்த மாற்றமும் இல்லை. பழைய பிஎஸ்-4 இன்ஜின் 22.5 கி.மீ மைலேஜ் கொடுத்த நிலையில் இந்த இன்ஜின் லிட்டருக்கு 0.71 கி.மீ குறைவாக, அதாவது 21.79 கி.மீ மைலேஜ் கொடுக்கும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் எஸ்-ப்ரெஸ்ஸோவின் பிஎஸ்-6 இன்ஜினை விட வேகன்-R இன்ஜினின் மைலேஜ் அதிகம்.

மாருதி சுஸூகி எஸ்-ப்ரஸ்ஸோ
மாருதி சுஸூகி எஸ்-ப்ரஸ்ஸோ

தற்போது வேகன்-ஆர், உங்களுக்கு 14 வேரியன்ட்டில் கிடைக்கும். இதில் மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் கொண்ட 1.0 லிட்டர் பிஎஸ்-6 இன்ஜினில் 6 வேரியன்ட்கள், இரண்டு பிஎஸ்-4 CNG இன்ஜின் வேரியன்ட்கள், ஏற்கெனவே இருக்கும் 1.2 லிட்டர் K12B பிஎஸ்-6 பெட்ரோல் இன்ஜினுடனும் 6 வேரியன்ட்கள் கிடைக்கும்.

எஸ் - ப்ரஸ்ஸோ : க்விட் கோதாவில் தாதா ஆகுமா?

புதிய வேகன்-R 1.0 இப்போது 5,32,822 ரூபாய் எனும் விலையில் இருந்து ஆரம்பித்து 6,45,241 ரூபாய் விலை வரை கிடைக்கும். வேகன் -R 1.2 லிட்டர் மாடலின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கம்போல 6,16,622 ரூபாய் விலையிலிருந்து தொடங்கி 7,09,265 ரூபாய் வரை கிடைக்கும். குறிப்பிடப்பட்டிருக்கும் விலைகள் எல்லாமே சென்னை ஆன்ரோடு விலை.