Published:Updated:

இந்தியாவில் அறிமுகமாகியிருக்கும் BS-6 மெர்சிடீஸ் பென்ஸ் GLC எஸ்யூவியில் என்ன ஸ்பெஷல்?

எதிர்பார்த்தபடியே LED ஹெட்லைட் & டெயில் லைட், பம்பர்கள், க்ரில், 19 இன்ச் அலாய் வீல்கள், சஸ்பென்ஷன் செட்-அப் ஆகியவற்றில் கணிசமான மாற்றங்கள் நடந்திருக்கிறது.

GLC Facelift
GLC Facelift ( Mercedes Benz )

2019 - ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட GLC ஃபேஸ்லிஃப்ட்டின் பெட்ரோல் மாடலை 52.75 லட்சத்துக்கும் (GLC 200), டீசல் மாடலை 57.75 லட்சத்துக்கும் (GLC 220d 4Matic) அறிமுகப்படுத்தியுள்ளது மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம். இந்த விலைகள் அனைத்தும் இந்திய எக்ஸ்-ஷோரூம் என்பது கவனிக்கத்தக்கது. எதிர்பார்த்தபடியே ஹெட்லைட் & டெயில்லைட் (இரண்டுமே LED), பம்பர்கள், க்ரில், அலாய் வீல் (பெரிய 235/55 R19 டயர்), சஸ்பென்ஷன் செட்-அப் ஆகியவற்றில் கணிசமான மாற்றங்கள் நடந்திருக்கின்றன. இதனால் புத்தம் புதிய GLE/GLS எஸ்யூவியின் (பிப்ரவரி 2020-ல் இவை இந்தியாவுக்கு வரும்) மினி வெர்ஷனைப்போல காட்சியளிக்கிறது GLC ஃபேஸ்லிஃப்ட். காருக்குள்ளே நுழைந்தால், புதிய & மாடர்ன் 10.25 இன்ச் MBUX - NTG6 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் நம்மை வரவேற்கிறது.

GLC Facelift
GLC Facelift
Mercedes Benz

GLC வரலாற்றிலே முதன்முறையாக, `Hey Mercedes’ வாய்ஸ் கமான்ட் மற்றும் பெரிய Central Touchpad ஆகியவை இந்த மாடலில் இடம்பெற்றுள்ளன. கேபின் அப்ஹோல்சரி, வயர்லெஸ் சார்ஜர், பின்பக்க சீட்டுக்கான Window Blinds ஆகியவை புதிது. ஆடி Q5, பிஎம்டபிள்யூ X3, லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட், ஜாகுவார் F-Pace, வால்வோ XC60 ஆகிய கார்களுடன் போட்டிபோடும் GLC-யில், C-க்ளாஸ் மற்றும் E-க்ளாஸ் ஆகிய செடான்களில் இருக்கும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் (2WD) / டீசல் (4WD) BS-6 இன்ஜின்களே பொருத்தப்பட்டுள்ளன.

GLC Facelift
GLC Facelift
Mercedes Benz

இதில் பெட்ரோல் மாடல் 197bhp பவர் மற்றும் 32kgm டார்க்கைத் தந்தால், டீசல் மாடல் 194bhp பவர் மற்றும் 40kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இந்த 4 சிலிண்டர் இன்ஜின்கள், 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளன. மெர்சிடீஸ் பென்ஸின் மாடர்ன் OM654 சீரிஸ் டீசல் இன்ஜினைக் கொண்ட மாடல், 0-100 கிமீ வேகத்தை 7.9 விநாடிகளில் தொட்டுவிடுகிறது மக்களே!