Published:Updated:

`ஒரு நாள், ஒரு கார், ஒரு கனவு!'- மதுரையில் தொடங்கியது மோட்டார் விகடன் கார் டிசைனிங் பயிலரங்கம்

மோட்டார் விகடன் பயிலரங்கம்
மோட்டார் விகடன் பயிலரங்கம்

மதுரையில் தொடங்கியது மோட்டார் விகடன் கார் டிசைனிங் பயிலரங்கம்!

மோட்டார் விகடன் சார்பில் `ஒரு நாள், ஒரு கார், ஒரு கனவு' என்ற கார் டிசைன் உருவாக்கும் ஒரு நாள் பயிலரங்கம் இன்று காலை மதுரை தியாகராசர் பொறியியற் கல்லூரியில் தொடங்கியது. இப்பயிலரங்கில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.

பயிலரங்கம்
பயிலரங்கம்

தியாகராசர் கல்லூரி பொறியியல் துறை பேராசிரியர்கள், மோட்டார் விகடன் ஆசிரியர் குழுவினர் முன்னிலையில் நடந்த இப்பயிலரங்கை பயிற்சியாளர் சத்தியசீலன் விளக்கமாக நடத்தினார்.

மக்களுக்கு வாகனங்களின் தேவைகள் பற்றியும் மாறி வரும் வாகனங்களின் மாடல்கள் வசதிகள் பற்றியும் பல்வேறு வடிவங்களில், வாகனங்களை உருவாக்குவது பற்றியும் அதை அழகியல் மற்றும் வசதிகளுடன் உருவாக்குவது பற்றியும் அதற்காக காத்திருக்கும் வாய்ப்புகள் பற்றியும் பல்வேறு உதாரணங்களைக் கூறி பயிற்சி அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் 5-ம் வகுப்பு மாணவர் அபினவ் என்பவரும் கலந்துகொண்டுள்ளது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. கார் டிசைனிங்கில் இப்போதைய தலைமுறையினர் எந்தளவு ஆர்வமாக உள்ளனர் என்பது இப்பயிலரங்கில் காண முடிந்தது.

பின் செல்ல