Published:Updated:

உங்கள் சாதா காரை சொகுசு காராக மாற்ற 7 ஆக்சஸரீஸ்...! #LongRead

நாம் விரும்பி வாங்கிய கார் என்னதான் அதிக திறனோடு, சொகுசாகவும் பாதுகாப்பாகவும் இருந்தாலும் காலப்போக்கில் அவை, வசதிகள் குறைபாடால் நம்மை முகம் சுளிக்க வைப்பது சகஜம். அதற்காகவே ஆக்சஸரீஸ்!

ஆக்சஸரீஸ்

டாக்ஸி பயன்பாட்டுக்கு வாங்கப்படும் கார்களும் பழைய யூஸ்டு கார்களும் நவீன கார்களைவிட வசதிகள் குறைவாகவே இருக்கும். யூஸ்டு கார் சந்தையில் 2010 டொயோட்டா கரோலா, புதிய மாருதி டிசையரின் விலைக்குக் கிடைக்கும். ஆனால், டிசையரின் வசதிகள் இதில் இருக்காது. இதுபோன்ற கார்களில் அதிக திறன், சொகுசு, பாதுகாப்பு, இருந்தாலும் காலப்போக்கில் இவை வசதிகள் குறைபாடால் நம்மை முகம் சுளிக்க வைப்பது சகஜம். இந்தக் குறையைப் போக்கத்தான் ஆக்சஸரீஸ் இருக்கின்றன.

தீபாவளிக்கு கார் பயணமா... இந்த விஷயங்களில் கவனம் தேவை! #safetravels

விலை குறைவு, பொருத்துவது சுலபம், பக்க விளைவுகள் எதுவும் இல்லை, வசதிகளை அதிகரிக்கும்... இந்த நான்கு கட்டங்களையும் டிக் அடித்தால் அதுவே ஒரு சிறந்த ஆக்சஸரி. அடிப்படை வசதிகள் மட்டுமே இருக்கும் ஒரு பழைய கார் வைத்திருக்கிறீர்கள் அல்லது வாடகைக்கோ, சொந்தமாகவோ டாக்ஸி வைத்திருக்கிறீர்கள் என்றால் உங்கள் காரின் வசதிகளை அதிகரிக்க உங்களுக்கு இந்த ஆக்சஸரீஸ் கைகொடுக்கலாம்.

1
கார் ஆக்சஸரீஸ்

குயிக் சார்ஜ் 3.0 USB கார் சார்ஜர்

USB சார்ஜிங் என்பது கடந்த 5 ஆண்டுகளாக பல கார்களில் தவிர்க்க முடியாத வசதியாக மாறிவிட்டது. அதிலும், ஷயோமி முதல் ஆப்பிள் வரை இப்போது வரும் அனைத்து மொபைல்களிலும் குயிக் சார்ஜிங் வசதிகள் வந்துவிடுகின்றன. மொபைலில் வசதிகள் இருந்து உங்கள் கார் சார்ஜர் பொறுமையாக இருந்தால் நல்லாயிருக்குமா. இந்தக் குறையைப் போக்கத்தான் USB 3.0 Quick Charger விற்கப்படுகிறது.

கார் ஆக்சஸரீஸ்

மோட்டோரோலா, ஒன்பிளஸ், MI, போட், MiVi எனப் பெரும்பாலான மொபைல் ஆக்சஸரி நிறுவனங்களே இந்த கார் சார்ஜரை விற்பனை செய்யத் தொடங்கிவிட்டார்கள். எல்லா மொபைல்களுக்கும் இந்த சார்ஜர் செட் ஆகும், 30 நிமிடத்தில் 80 சதவிகிதம் சார்ஜ் செய்யும் திறன் கொண்டது, வாரன்ட்டியோடு கிடைக்கக்கூடிய பொருள்.

பெரும்பாலானவர்கள் காரில் ஏறியதும் சார்ஜரைத் தேடும் பழக்கம் கொண்டவர்கள் என்பதால் டாக்ஸி டிரைவர்களுக்கு மிகவும் தேவையான ஆக்சஸரி இது.

விலை - ரூ.500 முதல் 1000வரை.

குறிப்பு : குவால்காம் நிறுவனத்தின் சர்டிஃபிகேட் இருந்தால் பாதுகாப்பானது என நம்பலாம்.
2
கார் ஆக்சஸரீஸ்

சோலர் பவர் டயர் ப்ரெஷர் மானிட்டர்

காரில் அதிகம் கவனிக்கப்படாத பாகங்களில் டயரும் ஒன்று. பலபேருக்குத் தங்கள் காரின் மேனுவலில் கொடுக்கப்பட்டுள்ள டயர் பிரஷர் என்ன என்பதே தெரியாது. டயரில் காற்று குறைவாக இருந்தால் டயரின் தேய்மானம் அதிகமாக இருக்கும், மைலேஜ் மற்றும் பர்ஃபாமன்ஸ் பாதிக்கும், சில நேரங்களில் பாதுகாப்புக்கும் இது பங்கம் விளைவிக்கும். அதனால், டயர் பிரஷர் மானிட்டர் என்பது நிச்சயம் ஒவ்வொரு காருக்கும் அவசியமான ஆக்சஸரி.

ஒரு டிஸ்பிளே-ஹப் மற்றும் 4 குட்டி சென்சார்கள் இந்த கிட்டில் வரும். சென்சார்களை டயரின் மவுத்தில் பொருத்திவிட்டால், நான்கு டயர்களிலும் பிரஷர் எவ்வளவு இருக்கிறது என லைவாக டிஸ்பிளே-ஹப்பில் பார்க்கலாம். இந்த டிஸ்பிளே-ஹப் சோலார் பவர் மூலம் இயங்குவதால் பேட்டரியை அவ்வப்போது மாற்றவேண்டிய அவசியம் கிடையாது.

கார் ஆக்சஸரீஸ்
95 கி.மீ ரேஞ்ச், ரெட்ரோ டிசைன், மெட்டல் பாடி... எலெக்ட்ரிக் சேட்டக் பர்ஃபாமன்ஸ் எப்படி?

சோலார் ஹப் எல்லாம் பழைய ஸ்டைல் என யோசித்தால் ஸ்மார்ட்ஃபோன் மூலம் சென்ஸ் செய்யக்கூடிய டயர் பிரஷர் மானிட்டரை வாங்கிக்கொள்ளலாம். சென்சார்களை கார் டயரில் பொருத்திவிட்டு ப்ளூடூத் மூலும் மொபைலுடன் இணைத்தால் ஒவ்வொரு டயரிலும் எவ்வளவு பிரஷர் இருக்கிறது என்பதை மொபைல் ஆப்பிலேயே பார்த்துக்கொள்ளலாம்.

டிஸ்பிளே-ஹப் விலை  - ரூ. 3,000 - 6,000;

மொபைல் மானிட்டர்- ரூ. 2,000

குறிப்பு சில டயர் பிரஷர் மானிட்டர் மட்டுமே வாட்டர்ப்ரூஃபாக இருக்கும். வாட்டப்ரூஃப் இல்லையென்றால் மழைநேரங்களில் கழற்றிவிட்டு, தேவையானபோது எடுத்து மாட்டிக்கொள்ளும் நிலை ஏற்படும். சென்சார்களைக் கழற்றி மாட்டுவது மிகவும் சுலபம். 2 நிமிடம்கூட தேவைப்படாது.
3
கார் ஆக்சஸரீஸ்

ப்ளூடூத் ரிசிவர்

பழைய கார்களில் 2 Din ஆடியோ சிஸ்டம் மட்டுமே வரும். அதில், AUX கேபில் மற்றும் USB பென்டிரைவ் மட்டுமே பாடல்களுக்கான சோர்ஸ். உங்கள் மொபைலில் இருக்கும் பாடல்களை எந்த ஒயரும் இல்லாமல் இதே ஆடியோ சிஸ்டத்தில் கேட்கவும், மொபைலைக் கையில் எடுக்காமலேயே அழைப்புகளுக்குப் பதில் அளிக்கவும் உதவும் ஒரு கருவிதான் ஒயர்லெஸ் ரிசீவர்/ப்ளூடூத் ரிசிவர்.

இந்த ப்ளூடூத் ரிசீவர் கைவிரல் அளவுக்கு இருக்கும் ஒரு சின்னக் கருவி. இதை காரில் இருக்கும் 3.5மிமீ ஜாக்கில் செருகிவிட்டு ப்ளூடூத் மூலம் மொபைலை கனெக்ட் செய்து பாட்டை ஒலிக்கச்செய்து தெறிக்கவிடலாம்.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > https://bit.ly/2KccySR

கார் ஆக்சஸரீஸ்

அழைப்புகள் வந்தால் 'ஓகே கூகுள்' 'ஹாய் சிரி' 'ஹலோ அலெக்ஸா' என வாய்ஸ் அசிஸ்டென்ட் மூலம் கட்செய்வதோ, கனெக்ட் செய்வதோ உங்கள் விருப்பம். இந்தக் கருவியில் இருக்கும் பட்டம் மூலமும் அழைப்புகளை ஏற்கலாம். ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 மணிநேரம் முதல் 16 மணிநேரம் வரை தொடர்ந்து இயங்கக்கூடிய கருவி இது.

டாக்ஸி வைத்திருப்பவர்கள் இதை ஆன் செய்தால் மட்டும் போதும். கஸ்டமர்கள் அவர்களின் மொபைலை இணைத்து அவர்களே அவர்களுக்குப் பிடித்தமான இசையைக் கேட்கலாம். ஓலா மியூசிக்குக்கு செம டஃப் கொடுப்

விலை - ரூ.1,500 - 3,000

குறிப்பு : காரில் மட்டுமல்ல உங்களுடைய ஸ்பீக்கரில், ஹெட்செட்டில், டிவியில் என எல்லாவற்றிலும் இதைப் பொருத்திக்கொள்ளலாம். சமீபகால மொபைல்களுக்கு ஏற்றபடி ப்ளூடூத் 4.1 வசதியுடன் வருகிறது, 30 அடி தூரத்தில் இருந்தால் ப்ளூடூத் ரேஞ்ச் கிடைக்கும்.
4
கார் ஆக்சஸரீஸ்

கார் டிராக்கிங்

On Board Diagnostics (OBD) கருவியை வைத்திருந்தால் காரின் செயல்பாட்டில் சின்ன வித்தியாசம் இருப்பதை உணர்ந்தாலும் ஒரே நிமிடத்தில் காரில் பிரச்னை இருக்கிறதா, இல்லையா என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். எல்லா கார் சர்வீஸ் சென்டர்களிலும் இந்த OBD கருவி நிச்சயம் இருக்கும். முன்பெல்லாம் ODB படிப்பதற்கே ஒரு தனி திறமை வேண்டும் ஆனால், சமீபத்திய தொழில்நுட்பங்களின் உதவியால் இந்தக் கருவியைப் பயன்படுத்துவது ரொம்பவே சுலபமாகிவிட்டது. கனெக்டட் தொழில்நுட்ப கார்களான ஹூண்டாய் வென்யூ, கியா செல்ட்டோல், எம்ஜி ஹெக்டார் போன்றவற்றில் இது ஸ்டாண்டர்ட் வசதியாகவே வருகிறது.

உங்கள் கார் கனெக்டட் காராக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. OBDII கனெக்ட்டிவிட்டி இருந்தால் இந்தக் கையடக்க அடாப்டரை வாங்கி செருகி உங்கள் காரின் மொத்த தகவல்களையும் மொபைல் ஃபோனிலேயே பார்த்துக்கொள்ளலாம்.

கார் ஆக்சஸரீஸ்
Vikatan

ஆட்டோமேட்டிக் ப்ரோ, ஆட்டோ விஸ் போன்ற அடாப்டர்கள் OBD-யிலேயே கொஞ்சம் அட்வான்ஸ் வகையைச் சேர்ந்தவை. இதில் 3ஜி கனெக்ட்டிவிட்டி வருவதால் கிட்டத்தட்ட கியாவின் கனெக்டட் தொழில்நுட்பத்தில் இருக்கும் அனைத்து வசதிகளும் இதில் வந்துவிடுகின்றன. இதை உங்கள் அமேசான் எக்கோவில் இருந்தே கூட ஆப்ரேட் செய்துகொள்ளும் வசதியையும் கொடுக்கிறார்கள்.

விலை - ரூ.400 - 1,000

அட்வான்ஸ் அடாப்டர்கள் - ரூ.6,000

குறிப்பு : எந்த சென்சார் சரியாக வேலை செய்யவில்லை, இன்ஜின் வெப்பம் எவ்வளவு, RPM வேகம் என்ன, இன்டேக் பிரஷர் என்ன, ஸ்பார்க்/இன்ஜக்‌ஷன் டைமிங் என்ன என்பதையெல்லாம் லைவாக உங்கள் ஆண்டிராய்டு மொபைல், ஐஃபோன் மற்றும் லேப்டாப்பில் பார்க்கலாம்.
5
கார் ஆக்சஸரீஸ்

டேஷ்கேம்

டேஷ்போர்டு கேமரா, கமர்ஷியல் வாகனங்களுக்கு மட்டுமல்ல பர்சனல் வாகனங்களுக்கும் தேவையான ஒரு ஆக்சஸரி. வெளிநாடுகளில் பெரும்பாலான கார்களில் இந்த டேஷ்கேம் (Dashcam) பார்க்கமுடியும். காரின் டேஷ்போர்டில் ஒரு சின்ன கேமராவைப் பொருத்திவிடுவார்கள். காருக்கு வெளியே என்ன நடக்கிறது, உள்ளே என்ன நடக்கிறது என்பதை இந்த கேமரா ரெக்கார்டு செய்யும்.

3 ஆண்டுகளுக்கு முன் மும்பையில் நடந்த விபத்து ஒன்றின் வீடியோ சமூகவலைதளங்களில் செம வைரல். ஒரு செடான் கார், வேகமாக வந்து சாலையின் நடுவில் இருக்கும் டிவைடரின் மீது ஏறி சம்மர்சால்ட் அடித்தபடி கவிழ்ந்தது. இதை அந்த ஹைவேயில் இருக்கும் கடை ஒன்றின் சிசிடிவி வீடியோ ரெக்கார்டு செய்திருந்தது. காரில் இருந்த டிரைவர் மரணித்துவிட்டார். வீடியோவின் கமென்டுகளில் வேகமாக வந்தால் இதுதான் கதி, கார் டிரைவரின் மீதுதான் தவறு, குடித்து விட்டு வாகனம் ஓட்டியுள்ளார் என பல கமென்ட்டுகள். அந்த காரில் இருந்த டேஷ்கேமை செக்செய்தபோதுதான் மும்பை போலீஸுக்கு உண்மையில் யார் மீது தவறு எனப் புரிந்தது.

கார் ஆக்சஸரீஸ்

விபத்து நடைபெறும் இடம் மேம்பாலம் முடியும் இடம். ஒரு வழிச்சாலையாக இருக்கும் அந்த ரோடு, மேம்பாலத்தின் முடிவில் இரண்டு வழிச் சாலையாகப் பிரிகிறது. அங்கு ஸ்டீரிட் லைட் எதுவும் கிடையாது. ஏற்கெனவே பல முறை அந்த இடத்தில் வாகனங்கள் மோதியுள்ளதால் டிவைடரின் முனை உடைந்திருந்தது. அதுமட்டுமல்ல அங்கே டிவைடர் இருப்பதற்கான அடையாளப் பலகையும் இல்லை. கார் ஓட்டுநருக்கு அந்த வழி புதிது. டிவைடர் இருக்கிறது எனத் தெரியாமல் பாலத்திலிருந்து வழக்கமான வேகத்திலேயே இறங்கியுள்ளார். ஹெட்லைட் வெளிச்சம் பட்டபிறகே டிவைடர் இருப்பது தெரிந்துள்ளது. அதற்குள் வாகனத்தை நிறுத்தமுடியவில்லை.

டேஷ்கேம் இதுபோன்ற பல சம்பவங்களை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது. காரில் அதிர்வுகள் ஏற்பட்டாலே இந்த கேமரா ஆன் ஆகிவிடும். இதனால், உங்கள் காரைத் திருட முயற்சி செய்தாலோ நீங்கள் இல்லாத நேரத்தில் காரை யாரேனும் சேதப்படுத்தினாலோ விபத்தின்போது தவறு உங்கள்மீது உள்ளது என யாராவது குற்றத்தைத் திணிக்கப்பார்த்தாலோ இந்த டேஷ்கேம் காப்பாற்றும். பல இடங்களுக்குப் பயணித்து வீடியோ பிளாக் செய்ய விரும்புபவர்களுக்கு டேஷ்கேம் வீடியோக்கள் உதவும்.

விலை - ரூ.2,000 முதல் 5,000வரை

குறிப்பு: Mirror Dashcam என்பது இந்த டேஷ்கேமிலேயே கொஞ்சம் அட்வான்ஸ். காரின் பின்பக்கம் ஒரு கேமரா வந்துவிடும். ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா போலவும் செயல்படும் இது உங்கள் காருக்குள் இருக்கும் ரியர்வியூ மிரரையே டிஸ்பிளோ ஆக்கிக்கொள்ளும். தனி டிஸ்பிளே தேவையில்லை.
6
கார் ஆக்சஸரீஸ்

Car Air Purifier

சாலையில் ஏற்படும் காற்று மாசு பற்றிக் கவலைப்பட்டு இருசக்கர வாகனத்திற்குப் பதில் காரில் செல்லும் பலர், வெளியில் இருக்கும் அதே அளவு மாசு காருக்குள்ளேயும் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதில்லை. US National center for Biotechnology information வெளியிட்டுள்ள ஆராய்ச்சியின்படி துர்நாற்றத்தை ஏற்படுத்தும் அரோமேட்டிக் ஹைட்ரோ-கார்பன் மட்டுமல்லாமல் காரின் PM உட்பட பல துகள்கள் இருக்கின்றன. காருக்குள் இருக்கும் மாசு நினைத்து கவலையாக இருந்தால் உங்களுக்காகத்தான் கார் ஏர்-ப்யூரிஃபயர் இருக்கின்றன.

சாதாரண கார் ஃபிரெஷ்னரில் வாசனை ஏற்படுத்தும் பொருள் மட்டுமே இருக்கும். ஆனால், கார் ஏர் ப்யூரிஃபையர் மூன்று விதமான ஃபில்ட்டர்கள் இருக்கும். 0.3 µm அளவுக்குள் இருக்கும் துகல்களைத் தடுக்க HEPA ஃபில்ட்டர்; கெமிக்கல்கள், கேஸ், துர்நாற்றம் போன்றவற்றை தடுக்க ஆக்டிவேட்டட் கார்பன் ஃபில்ட்டர்; காரில் இருக்கும் பெரிய தூசு துகள்களைச் சுவாசிப்பதைத் தடுக்க நெகட்டிவ் அயான் ஜெனரேட்டர் உள்ளன.

கார் ஆக்சஸரீஸ்

காரில் இருக்கும் சார்ஜிங் சாக்கெட் மூலம் பவர் எடுத்துக்கொள்ளும்படி இதை வடிவமைத்திருப்பார்கள் என்பதால் பொருத்துவது சுலபம். சமீபத்தில் வெளியான கியா செல்ட்டோஸ் காரில் இந்த ஏர்ஃபில்ட்டர் ஒரு வசதியாக வருகிறது. விரைவில் அனைத்து கார்களிலும் வந்துவிடும்.

விலை - ரூ.3500 முதல் 5000வரை

குறிப்பு : சில ப்யூரிஃபயர்களில் ஓசோன் ஜெனரேட்டர் இருக்கும். இந்த வகை ப்யூரிஃபயர்கள் ஆஸ்த்துமா போன்ற மூச்சுக் கோளாறு இருப்பவர்களுக்கு ஆபத்தானது. அதனால், வாங்கும்போது ஓசோன் ஜெனரேட்டர் இருக்கிறது என்றால் உஷார்.
7
கார் ஆக்சஸரீஸ்

பார்க்கிங் சென்சார்

Vikatan

கார்கள் பெரும்பாலும் முதல்முறை சேதமாவது பார்க்கிங் செய்யும்போதோ, நெரிசலான சாலையில் போகும்போதோதான். இதற்கு காரணம் பிளைண்டு ஸ்பாட். கார்களில் சில இடங்கள் எப்படிப் பார்த்தாலும் நம் கண்களுக்குத் தெரியாது. புது டிரைவர்களுக்கு அதை யூகித்து ஓட்டுவதும் சிரமமாகவே இருக்கும். இப்படிப்பட்ட நேரங்களில் நமக்கு பிளைண்டு ஸ்பாட் சென்சார் உதவிபுரிகிறது. ரேடார் தொழில்நுட்பத்தில் இயங்கும் நான்கு சின்ன சென்சார்கள் காரின் பின்பக்கம் பொருத்தப்படும். இரண்டு சென்சார்கள் காரின் பக்கவாட்டில் பொருத்தப்படும். டேஷ்போர்டு மீது வைக்க ஒரு சிறிய ஹப் கொடுக்கப்படும். கார் ஏதாவது தடுப்பை நெருங்குகிறது என்றால் இந்த ஹப் சத்தம் கொடுக்கும். அதுமட்டுமல்ல எவ்வளவு அருகில் நெருங்கிவிட்டது என்பதையும் காட்டும்.

டேஷ்கேம் மற்றும் பார்க்கிங் சென்சார்கள் பழைய கார்களுக்கும், வாடகை கார்களுக்கும் மிகவும் தேவையான அம்சம்.

விலை - ரூ.400 முதல் 1000வரை

குறிப்பு : இதை காரின் எலெக்ட்ரிக் ஒயர்களோடு இணைக்கவேண்டும் என்பதால் கார் எலெக்ட்ரிக்கல் வேலை செய்பவர்களிடமோ அல்லது நம்பகமான சர்வீஸ் சென்ட்டரிலோ இதைப் பொருத்துவது சிறப்பானது.
கிட்டத்தட்ட 30,000 ரூபாய் இருந்தால் போதும் தற்போது கிடைக்கும் அதிநவீன கார்களில் வருவதை விட சிறப்பான வசதிகளை நீங்களே உங்கள் காரில் பொருத்திவிடலாம். பார்க்கிங் சென்சார்கள் தவிர மற்ற கருவிகளைப் பொருத்த பெரிய தொழில்நுட்ப புரிதலோ, அதிக மெனக்கெடுதலோ எதுவுமே தேவையில்லை. ஒவ்வொரு பொருளுடன் வரும் பயன்படுத்த உதவும்கையேட்டைப் படித்தாலே போதுமானது.