Published:Updated:

வேகன்-R & சான்ட்ரோ: 2 Star, ரெடி-கோ: 1 Star, எர்டிகா: 3 Star... க்ராஷ் டெஸ்ட்டில் எது டாப்... எது ஃப்ளாப்?

இதில் எதுவுமே 5 ஸ்டார் ரேட்டிங்கைப் பெறாதது ஒருபுறம் வருத்தமளித்தாலும், 'இந்தியாவில் 5 ஸ்டார் Safety ரேட்டிங் கொண்ட கார்களைத் தயாரிக்க முடியும்' என்பதை உலகுக்கு உரக்கச் சொல்லியிருக்கும் நெக்ஸான் கிடைத்திருப்பது ஆறுதல்தான்!

#SaferCarsForIndia
#SaferCarsForIndia ( Global NCAP )

தனது #SaferCarsForIndia பிரசாரத்தின் தொடர்ச்சியாக, சமீபத்தில் அறிமுகமான சில கார்களை க்ராஷ் டெஸ்ட்டுக்கு உட்படுத்தியிருக்கிறது, சர்வதேச அமைப்பான Global NCAP. மாருதி சுஸூகியின் எர்டிகா மற்றும் வேகன்-ஆர், ஹூண்டாய் சான்ட்ரோ, டட்ஸன் ரெடி-கோ ஆகியவை இந்தப் பட்டியலில் அடக்கம். இதில் எதுவுமே 5 ஸ்டார் ரேட்டிங்கைப் பெறாதது ஒருபுறம் வருத்தமளித்தாலும், 'இந்தியாவில் 5 ஸ்டார் Safety ரேட்டிங் கொண்ட கார்களைத் தயாரிக்க முடியும்' என்பதை உலகுக்கு உரக்கச் சொல்லியிருக்கும் நெக்ஸான் கிடைத்திருப்பது ஆறுதல்தான்! இதற்கு முன்பே பல கார்களை Global NCAP அமைப்பு க்ராஷ் டெஸ்ட் செய்திருந்தாலும், ABS - சீட்பெல்ட் ரிமைண்டர் - ஸ்பீடு வார்னிங் சிஸ்டம் - ஓட்டுநர் காற்றுப்பை ஆகியவை கார்களில் கட்டாயமாக்கப்பட்ட பிறகு, நடத்தப்பட்டிருக்கும் க்ராஷ் டெஸ்ட் இதுதான் என்பது ஸ்பெஷல்!

மாருதி சுஸூகி எர்டிகா - 3 ஸ்டார்கள்

Maruti Suzuki Ertiga
Maruti Suzuki Ertiga
Global NCAP

இங்கிருக்கும் கார்களிலே விலை அதிகமான கார் என்பதுடன், க்ராஷ் டெஸ்ட்டில் குறிப்பிடத்தக்க மதிப்பெண்களைப் பெற்றிருப்பதும் எர்டிகாதான்; Adult Occupant Protection மற்றும் Child Occupant Protection ஆகியவற்றில் தலா 3 ஸ்டார் ரேட்டிங்கை, இந்த எம்பிவி பெற்றிருக்கிறது. இதன் பிரதான போட்டியாளரான மஹிந்திரா மராத்ஸோ, 4 ஸ்டார் ரேட்டிங்கைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. க்ராஷ் டெஸ்ட்டுக்குப் பிறகான காரின் கட்டுமானம், 'Borderline Unstable' என அறிவிக்கப்பட்டுள்ளது. கேபினின் முன்பகுதியில் கால்கள் இருக்குமிடம் Unstable எனக் கூறப்பட்டதால், விபத்தின்போது முன்பக்க இருக்கைகளில் இருப்பவர்களின் கால்கள் காயமடைவதற்கான வாய்ப்பிருக்கிறது.

இந்த நேரத்தில் முன்னே இருப்பவர்களின் தலைப்பகுதி மற்றும் கழுத்துப் பகுதிக்கான பாதுகாப்பு நன்றாக இருந்தாலும், ஓட்டுநரின் நெஞ்சுப்பகுதிக்கான பாதுகாப்பு கொஞ்சம் ஓகே ரகம்தான். நடுவரிசை இருக்கையில் ISOFIX மவுன்ட் வழங்கப்பட்டிருப்பது ப்ளஸ். எனவே, க்ராஷ் டெஸ்ட்டில் பயன்படுத்தப்பட்ட 3 வயது Dummy குழந்தை, போதுமான பாதுகாப்பைப் பெற்றிருந்தது. ஆனால், 18 மாத Dummy குழந்தையின் தலைப்பகுதி மற்றும் நெஞ்சுப்பகுதி பெரும் தாக்கத்தை அடைந்திருந்தன. இந்த Child Restraint System வழக்கமான Rearward Facing பாணியிலிருந்து விலகி, Forward Facing பொசிஷனில் இருந்ததே இதற்கான காரணமாக இருக்கலாம்.

மாருதி சுஸூகி வேகன்-ஆர்: 2 ஸ்டார்கள்

Maruti Suzuki Wagon-R
Maruti Suzuki Wagon-R
Global NCAP
`வைஃபை முதல் பேட்டரி கார் வரை..!' - ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் பளபளக்கும் பாண்டி பஜார்

Heartect பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டிருக்கும் புதிய வேகன்-ஆர், Adult Occupant Protection மற்றும் Child Occupant Protection ஆகியவற்றில் தலா 2 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றிருக்கிறது. க்ராஷ் டெஸ்ட்டுக்குப் பிறகு, காரின் BodyShell மற்றும் Footwell ஆகியவை Unstable எனக் கூறியுள்ளது Global NCAP. முன்பக்கப் பயணிகளின் தலைப்பகுதி மற்றும் கழுத்துப் பகுதியில் போதுமான பாதுகாப்பு இருந்தாலும், நெஞ்சுப்பகுதியில் பாதுகாப்பு குறைவுதான்; முழங்கால் பகுதிக்கான பாதுகாப்பு சுமார் ரகம். காரின் Child Restraint System-ல் இருந்த 3 வயது Dummy குழந்தை, க்ராஷ் டெஸ்ட்டின்போது உடைந்துவிட்டது! அதேபோல 18 மாத Dummy குழந்தையின் நெஞ்சுப்பகுதி, அந்த நேரத்தில் சேதத்தைச் சந்தித்திருந்தது.

ஹூண்டாய் சான்ட்ரோ - 2 ஸ்டார்கள்

Hyundai Santro
Hyundai Santro
Global NCAP

Adult Occupant Protection மற்றும் Child Occupant Protection ஆகியவற்றில் தலா 2 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றிருக்கிறது புதிய சான்ட்ரோ. க்ராஷ் டெஸ்ட்டுக்குப் பிறகு, இந்த காரின் BodyShell மற்றும் Footwell பகுதியையும் Unstable என அறிவித்துவிட்டது Global NCAP. முன்பக்கப் பயணிகளின் தலைப்பகுதி மற்றும் கழுத்துப் பகுதியில் பாதுகாப்பு நன்றாக இருந்தாலும், விபத்தின்போது டிரைவர் நெஞ்சுப்பகுதியில் அடிபடுவதற்கான வாய்ப்பிருக்கிறது. டிரைவருடன் ஒப்பிட்டால், அவருக்கு அருகே அமர்ந்திருப்பவரின் நெஞ்சுப்பகுதிக்குக் கொஞ்சம் பாதுகாப்பு இருக்கிறது. சான்ட்ரோவுக்கு எனப் பிரத்யேகமான Child Restraint System-யை ஹூண்டாய் பரிந்துரைக்கப்படாததால், க்ராஷ் டெஸ்ட்டின்போது பயன்படுத்தப்பட்ட 3 வயது Dummy குழந்தை, வழக்கத்தைவிட அதிகமான அளவில் குதியாட்டம் போட்டது. ஆனால், 18 மாத Dummy குழந்தைக்குப் போதுமான பாதுகாப்பு கிடைத்தது சிறப்பு.

டட்ஸன் ரெடி-கோ: 2 ஸ்டார்கள்

Datsun Redigo
Datsun Redigo
Global NCAP
`இந்தியாவின் முதல் BS-6 பைக்' - ஹீரோ ஸ்ப்ளெண்டர் i-Smart-ல் என்ன ஸ்பெஷல்?

Adult Occupant Protection-ல் 1 ஸ்டார் மற்றும் Child Occupant Protection-ல் 2 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றிருக்கிறது ரெடி-கோ. க்ராஷ் டெஸ்ட்டுக்குப் பிறகு, காரின் BodyShell மற்றும் Footwell பகுதி Unstable எனக் கூறிவிட்டது Global NCAP. முன்பக்கப் பயணிகளின் தலைப்பகுதி மற்றும் கழுத்துப் பகுதியில் பாதுகாப்பு சிறப்பாக இருந்தது. என்றாலும், விபத்தின்போது டிரைவர் நெஞ்சுப்பகுதி காயமடைவதற்கான சாத்தியம் உள்ளது. இங்கிருக்கும் கார்களிலே, சீட் பெல்ட் ரிமைண்டர் இல்லாத ஒரே கார் ரெடி-கோதான்! கட்டாயமாக்கப்பட்ட பாதுகாப்பு வசதிகள் காரில் இடம்பெற்றாலும், மார்ச் 2020 வாக்கில் காரின் கட்டுமானத்தில் மாற்றங்களைச் செய்து, ஃபேஸ்லிஃப்ட் மாடலை டட்ஸன் விற்பனைக்குக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரின் பின்பக்கத்தில் Static Reel சீட் பெல்ட் இருந்ததால், 3 மாத Dummy குழந்தை மற்றும் 18 மாத Dummy குழந்தை என இரண்டுமே தலைப்பகுதியில் அதிக தாக்கத்தை உள்வாங்கியிருந்தன.