Published:Updated:

ஒரே நாளில் 250 டிராக்டர் வாங்கினர்! - ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விவசாயிகள்

பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விற்பனை வீழ்ச்சியில் தவித்துக்கொண்டிருக்கையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த வெங்காய விவசாயிகள் ஒரே நாளில் 250 டிராக்டர்கள் வாங்கி ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்கள்.

டிராக்டர்
டிராக்டர் ( IANS )

நாஸிக் நகரில், கல்வான் தாலுக்காவில் இந்த ஆண்டு வெங்காய விற்பனை களைகட்டியுள்ளதாம். இதனால், கடந்த செப்டம்பர் 29 -ம் தேதி, இந்த ஊரில் ஒரே நாளில் 250 டிராக்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாம்.

வெங்காயம்
வெங்காயம்

கடந்த 5 ஆண்டுகளாக ஒரு குவிண்டாலுக்கு 100 முதல் 500 ரூபாய் வரை இருந்த வெங்காய விற்பனை கடைசி இரண்டு மாதங்களில் 2000 முதல் 4000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்தியாவில் வெங்காய வளர்ப்புக்கு முக்கிய இடமான கல்வானில் விவசாயிகள் நல்ல லாபம் அடைந்துள்ளார்கள்.

இதனால், இந்த இடத்தில் 250 டிராக்டர்கள் மட்டுமில்லை, 21 கார் மற்றும் 400 முதல் 500 வரையிலான 2 வீலர்களும் விற்பனையாகியுள்ளதாக அங்கிருக்கும் டீலர்கள் சொல்கிறார்கள். ஒரு நாளில் மட்டும் தோராயமாக 30 கோடி ரூபாய்க்கு கல்வானில் ஆட்டோமொபைல் விற்பனை நடந்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.

டிராக்டர்
டிராக்டர்

இதில், 70 சதவிகிதம் ரொக்கத் தொகை கொடுத்தே வாங்கப்பட்டுள்ளனவாம். வாங்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், சில ஆட்டோமொபைல் நிறுவனங்களில் உயர் பதவியில் இருப்பவர்களே இந்த ஊருக்குச் சென்று ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நேரடியாக மக்களிடம் வாகனத்தை டெலிவரி செய்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆட்டோமொபைல் நிறுவனத்தினர் விவசாயிகளை டர்பன் கட்டி வரவேற்றார்களாம்.