Published:Updated:

கார் டிசைனர் ஆகவேண்டும் என்பது உங்கள் கனவா?: சென்னையில் ஒருநாள் பயிலரங்கம்

விகடன் டீம்

ஒரு இனோவா காரையே எடுத்துக்கொள்வோம். மூக்கு நீளமாக, பின் பக்கம் ஃப்ளாட்டாக, கோபமான கிரில்கொண்ட இந்த காரை ஒரு முழுமையான வாகனமாக்க எப்படியெல்லாம் யோசித்திருப்பார்கள்?

 car designer
car designer

காற்றைத் தவிர எல்லாவற்றுக்குமே உருவம் உண்டு. உருவத்தை உருவாக்குகிறவன் படைப்பாளி என்றால், டிசைனர்களும் அப்படியே! ஓர் உளுந்துவடைக்கு நடுவே ஓட்டை இருக்க வேண்டும். அப்படியிருந்தால்தான் எண்ணெய் வடை முழுவதையும் சரிசமமாக வேகவைக்கும். அதேசமயம், அதற்கு ஒரு தனித்துவமான அழகும் கிடைக்கும் என்று யோசித்து வடிவமைப்பட்டிருக்கிறது என்றாலும், அதுவும் சிறந்த டிசைனுக்கான உதாரணம்தான். டிசைனுக்கு அடிப்படை கிரியேட்டிவிட்டி. இந்த கிரியேட்டிவிட்டி எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும்.

செல்போன், லேப்டாப், கண்ணாடி, வாட்ச், பர்ஸ், செருப்பு என்று பல பொருள்களை உருகி உருகிப் பயன்படுத்துகிறோம். ஆனால், இவை எங்கே, யாரால் டிசைன் செய்யப்படுகிறது, இதன் கிரியேட்டிவிட்டி என்ன என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

கார் டிசைனர் ஆகவேண்டும் என்பது உங்கள் கனவா?: சென்னையில் ஒருநாள் பயிலரங்கம்

கார் டிசைன் ஒருநாள் பயிலரங்கம் குறித்த விவரங்களுக்கு இங்கே க்ளிக் செய்க...

டிசைன் என்பது ஃபேஷன் டிசைன் அல்லது ஆர்க்கிடெக்சர் மட்டுமில்லை, உங்களைச் சுற்றி இருக்கும் எல்லா பொருள்களிலும் டிசைனர்களின் பங்கு இருக்கிறது. ஒரு காலத்தில் நெருப்பு மூட்டுவதற்குத் தீப்பெட்டி என்ற ஒன்று இல்லை. ஆனால், எப்போது நம் நாட்டுக்குள் தீப்பெட்டி வந்ததோ, அந்த நிமிடத்தில் இருந்து காட்டுத்தீ போல பரவி, எல்லா வீடுகளிலும் இருக்கும் பொருளாக அது மாறிவிட்டது. இங்கே, நாம் சிந்திக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தத் தீப்பெட்டியைச் சார்ந்த வணிகம் மற்றும் வேலை வாய்ப்பு. புதுப் புது பொருள்களுக்கான தேவை, மனித வாழ்க்கையில் எப்போதும் இருக்கிறது. ஒவ்வொரு 20 ஆண்டுகளிலும், உங்கள் வீடுகளிலும் அலுவலகங்களிலும் உங்களைச் சுற்றி இருக்கும் பொருள்கள், உணவு உட்பட அனைத்தும் மாறிக்கொண்டேவருகின்றன. இந்த புதிய பொருள்களை உருவாக்க டிசைனர்கள் தேவை. அதிலும் ஆட்டோமொபைல் துறையின் ‘டிசைனிங்’ என்பது, கிரியேட்டிவிட்டியின் உச்சம்.

ஒரு இனோவா காரையே எடுத்துக்கொள்வோம். மூக்கு நீளமாக, பின் பக்கம் ஃப்ளாட்டாக, கோபமான கிரில்கொண்ட இந்த காரை ஒரு முழுமையான வாகனமாக்க எப்படியெல்லாம் யோசித்திருப்பார்கள்?

இனோவா காரின் அடிப்படை ஸ்கெட்ச்சைப் பார்த்தால், ‘இதுவா இப்படி உருமாறியிருக்கு’ என்ற வியப்பு ஏற்படும். அப்படிப்பட்ட ஒரு பேரனுபவத்தைத்தான், மாணவர்களுக்குத் தந்திருக்கிறது ‘மோட்டார் விகடன்’. இதற்காக, மாணவர்களுக்கு ஒருநாள் முழுதும் பயிற்சி எடுத்தார், அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பாளர் சத்தியசீலன். கோவை PSG கல்லூரியில் நடந்த இந்த ஒருநாள் பயிலரங்கத்தில், ஏகப்பட்ட இன்ஜினீயரிங் மாணவ மாணவிகள் கலந்துகொண்டது, அவர்களின் டிசைன் ஆர்வத்தைக் காட்டியது. விட்டால், அடுத்த நாளே ஒரு காருக்கு ஸ்கெட்ச் போட்டுவிடும் தன்னம்பிக்கை அவர்கள் முகத்தில் தெரிந்தது.

கார் டிசைன் ஒருநாள் பயிலரங்கம் குறித்த விவரங்களுக்கு இங்கே க்ளிக் செய்க...

கார் டிசைனர் ஆகவேண்டும் என்பது உங்கள் கனவா?: சென்னையில் ஒருநாள் பயிலரங்கம்

``நமது கலை சார்ந்த படைப்பாற்றலை, ஓவியம் தீட்டும் திறமையை, இசையமைக்கிற ஆற்றலை எப்படி ஒரு பொருளை வடிவமைக்கும் படைப்பாற்றலாக மாற்றுவது என்பதை கற்க - கற்பிக்கவேண்டியிருக்கிறது.'' என்கிறார், அஷோக் லேலாண்ட் நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பாளர் சத்தியசீலன்.

அசோக் லேலாண்டின் லாரிகள், தோஸ்த் வேன் எனப் பல வாகனங்கள் சத்தியசீலனின் வடிவமைப்பில் வந்ததே! MIT உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் கல்விக்குழு உறுப்பினராக இருக்கும் சத்தியசீலன், கார் டிசைன் செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு இந்த மாதமும் ஓர் அற்புதமான அனுபவத்தைத் தர இருக்கிறார். சென்னை குரோம்பேட்டையில் உள்ள MIT-யில் செப்டம்பர் 14-ம் தேதி, ஒரு நாள் முழுதும் கார் டிசைனுக்கான அடிப்படையில் இருந்து உச்சம் வரை அதகளம் செய்ய இருக்கிறார். இது, மாணவர்களுக்கு மட்டுமான வகுப்பில்லை என்பதுதான் ஸ்பெஷல். ஒரு கார் எப்படி உருவாகுது... எப்படி தயார் செய்வது என்று தெரிந்துகொள்ள விரும்பும் யார் வேண்டுமானாலும் இதில் கலந்துகொள்ளலாம்.

ஆம்! கார் டிசைனின் அடிப்படை, அதன் கலைச் சொற்கள், பாடி ஸ்டைல்கள், ஸ்கெட்ச்சுகள், க்ளே மாடலிங் என்று ஏகப்பட்ட வரைபட உத்திகளோடு, 'இப்படித்தான் ஒரு கார் உருவாகுது' என்கிற ரகசியத்தைப் பகிர்ந்துகொள்ளத் தயாராகும் இந்த அனுபவத்தை மிஸ் பண்ணாதீங்க!

கார் டிசைன் ஒருநாள் பயிலரங்கம் குறித்த விவரங்களுக்கு இங்கே க்ளிக் செய்க...