Published:Updated:

வந்துவிட்டது ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் BS-6... என்ன ஸ்பெஷல்? #CompleteUpdates

ஹிமாலயன் BS-6
ஹிமாலயன் BS-6 ( Royal Enfield )

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் BS-60 பைக்கில் என்னென்ன சிறப்புகள்... என்னென்ன குறைகள், எதைச் சேர்த்திருக்கிறார்கள்... எதை நீக்கியிருக்கிறார்கள். ஒரு கம்ப்ளீட் அப்டேட்!

ஹீரோவின் எக்ஸ்-பல்ஸ் பைக்குக்கு அடுத்தபடியாக, விலைகுறைவான அட்வென்ச்சர் பைக் என்ற பெருமையைக் கொண்ட ஹிமாலயனின் BS-6 வெர்ஷனைக் கொண்டு வந்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு. 1,86,811 ரூபாய் (Snow White, Granite Black), 1,89,565 ரூபாய் (Sleet Grey, Gravel Grey), 1,91,401 ரூபாய் (Rock Red, Lake Blue) எனும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கக்கூடிய இந்த ADV பைக்கில் Lake Blue, Rock Red எனும் டூயல் டோன் கலர் ஆப்ஷன்கள் புதிது. 3 வருட வாரன்ட்டியுடன் கிடைக்கும் BS-6 ஹிமாலயனுக்கு எனப் பிரத்யேகமாகப் புதிய ஆக்ஸசரிகளைத் தயாரித்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு. இவற்றுக்கு 2 வருட வாரன்ட்டி கிடைப்பது ப்ளஸ். BS-4 மாடலுக்கும் BS-6 வெர்ஷனுக்கும் டிசைன் மற்றும் அளவுகளில் எந்த மாறுதலும் இல்லை. ஆனால், முந்தைய மாடலைவிட இது விலையில் 6,000 ரூபாய் அதிகரித்திருக்கிறது. BS-6 இன்ஜின் தவிர சிற்சில முன்னேற்றங்களை பைக்கில் பார்க்க முடிகிறது. பிஎம்டபிள்யூ G310GS, கவாஸாகி வெர்சிஸ் X-300 ஆகியவைதான் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயனுக்குப் போட்டியாளர்கள். அவை இன்னும் BS-4 மாடல்கள்தான்!

ராயல் என்ஃபீல்டு BS-6
ராயல் என்ஃபீல்டு BS-6
Royal Enfield

2016-ம் ஆண்டில் ஹிமாலயன் அறிமுகமானபோது, அதில் Hazard Lights இருந்தது. ஆனால், இந்த பைக்கின் BS-4 அப்டேட்டில் அந்த வசதியை ராயல் என்ஃபீல்டு நீக்கியிருந்தது. தற்போது, BS-6 வெர்ஷனில் இந்த வசதி கம்பேக் கொடுத்திருக்கிறது; வெளிச்சம் குறைவான நெடுஞ்சாலைகள் மற்றும் பனிமூட்டமான மலைச்சாலைகளில் செல்லும்போது, மற்றவர்களுக்கு பைக்கின் வருகையை உணர்த்துவதற்கு Hazard Lights கைகொடுக்கும். முன்பைவிடக் குறைவான Stopping Distance கொடுக்கும் வகையில் டிஸ்க் பிரேக்ஸ் முன்னேற்றப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

மேலும், இதில் இருக்கக்கூடிய டூயல் சேனல் ஏபிஎஸ் அமைப்பில், தேவைப்பட்டால், பின்பக்க வீலுக்கான ஏபிஎஸ்ஸை ஆஃப் செய்துகொள்ள முடியும். ஆஃப் ரோடிங்கின்போதும், பைக்கை Slide செய்ய முற்படும்போதும் இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும். பழைய மாடலில் இருந்ததைவிட அதிக சுமையைத் தாங்கும் வகையில் சைடு ஸ்டாண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. அனலாக் - டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், Amber-ல் இருந்து வெள்ளை நிற Backlit-க்கு மாறிவிட்டது. தவிர, இனி பைக்கை ஆன் செய்தால்தான், ஹெட்லைட் ஒளிரத் தொடங்கும். இதனால் பேட்டரியின் ஆயுளில் கணிசமான மாற்றம் இருக்கும் எனத் தெரிகிறது.

ஹிமாலயன் BS-6
ஹிமாலயன் BS-6
Royal Enfield

BS-4 ஹிமாலயனில் இருந்த அதே 411சிசி, SOHC, ஆயில் கூல்டு, Fi, Long Stroke, 2 வால்வ், சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி, BS-6 விதிகளுக்கேற்ப மேம்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 24.3bhp ஆக பவர் குறைந்துவிட்டது என்றாலும் (பழையதைவிட 0.2bhp குறைவு), டார்க்கில் எந்த மாறுதலும் இல்லை (3.2kgm). ஆனால், இது வெளியாகும் ஆர்பிஎம்மில் வித்தியாசம் இருக்கிறது (4,000-4,500 ஆர்பிஎம்). கூடுதல் Catalytic Converter காரணமாக, எதிர்பார்த்தபடியே எக்ஸாஸ்ட் பைப் தடிமனாகிவிட்டது. ஆனால், பைக்கின் எடை, முன்பிருந்ததைவிட 5 கிலோ அதிகரித்துவிட்டது நெருடல் (199 கிலோ).

`ராயல் என்ஃபீல்டு 500 இனி கிடையாது?!’-  அதிக பவருடன் வரப்போகிறது 2020 கிளாசிக் மற்றும் தண்டர்பேர்டு

மற்றபடி Half-Duplex Split Cradle ஃபிரேம், Long Travel சஸ்பென்ஷன், Ceat ஆஃப் ரோடு டயர்கள், 12 Volt - DC எலெக்ட்ரிக்கல்ஸ் போன்ற மெக்கானிக்கல் அம்சங்கள் அப்படியே தொடர்கின்றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, LED ஹெட்லைட் அல்லது DRL - ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி உடனான மீட்டர் - கூடுதல் பவர் அல்லது 6-வது கியர், அலாய் வீல்கள் - டியூப்லெஸ் டயர்கள் போன்ற வசதிகளைப் புதிய ஹிமாலயனில் RE வழங்கியிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

அடுத்த கட்டுரைக்கு