Published:Updated:

அலாய் வீல் & Fi உடன் வந்துவிட்டது, BS-6 ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 350!

Stealth Black & Gunmetal Grey ஆகிய கலர் ஆப்ஷன்களில், நீண்ட நாள் எதிர்பார்ப்பான அலாய் வீல்கள் - டியூப்லெஸ் டயர்கள் சேர்க்கப்பட்டிருப்பது பெரிய ப்ளஸ்.

Classic 350 BS-6
Classic 350 BS-6 ( Royal Enfield )

ரூ.1.65 லட்சம் விலையில் (இந்திய எக்ஸ்-ஷோரூம்), BS-6 க்ளாஸிக் 350 பைக்கை அறிமுகப்படுத்தியிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்ட BS-4 மாடலைவிட ரூ.11,000 அதிக விலையில் வந்திருக்கும் இந்த பைக், Stealth Black & Chrome Black எனும் புதிய கலர்களில் கிடைக்கிறது. இதனுடன் முன்பு கிடைத்த Signals Airborne Blue, Signals Stormrider Sand, Gunmetal Grey, Classic Black நிறங்களிலும் BS-6 க்ளாஸிக் 350-யை வாங்கலாம்; இதில் Stealth Black & Gunmetal Grey ஆகிய கலர் ஆப்ஷன்களில், நீண்ட நாள் எதிர்பார்ப்பான அலாய் வீல்கள் - டியூப்லெஸ் டயர்கள் சேர்க்கப்பட்டிருப்பது பெரிய ப்ளஸ். மற்ற கலர்கள் ஸ்போக் வீல்கள் - டியூப் டயர்களுடன் தொடர்கின்றன. மற்றபடி தோற்றத்தில் எந்த மாறுதலும் இல்லை.

Classic 350 BS-6
Classic 350 BS-6
Royal Enfield

BS-6 மாடலில், எதிர்பார்த்தபடியே கார்பரேட்டருக்குப் பதிலாக ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் இடம்பெற்றுள்ளது. மற்றபடி 346சிசி இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணியின் பவர்/டார்க் விவரங்களை ராயல் என்ஃபீல்டு இன்னும் வெளியிடவில்லை. ஆனால் முன்பைவிட இது நன்றான Cold Start திறன் & Refinement தவிர, சிறப்பான த்ராட்டில் ரெஸ்பான்ஸைக் கொண்டிருக்கும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரில் Low-Fuel warning & Engine Malfunction இண்டிகேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. BS-6 க்ளாஸிக் 350-ன் புக்கிங் ஏற்கெனவே தொடங்கிவிட்டதுடன், ரூ.10,000 செலுத்தி பைக்கை ராயல் என்ஃபீல்டு டீலர்களில் புக் செய்யலாம்! தவிர 3 வருட வாரன்ட்டி & RSA, இந்த BS-6 மாடலுடன் வழங்கப்படுகிறது.

க்ளாஸிக் 350 BS-6
க்ளாஸிக் 350 BS-6
Autocar India