Published:Updated:

இனி புதிய முதலீடுகள் வரும், R&D செலவு குறையும்! - நிதி அமைச்சரின் அறிவிப்பில் மனம் குளிர்ந்த SIAM

நிர்மலா சீதாராமனின் வரிச்சலுகை அறிவிப்பை ஆதரித்திருக்கிறார் SIAM தலைவர் ராஜன் வதேரா.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

கோவாவில் இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில்துறை மேம்பாட்டுக்காக சில முக்கியமான சலுகைகளை அறிவித்திருக்கிறார். அதன்படி,

  • தற்போது 30 சதவிகிதமாக இருக்கும் கார்ப்பரேட் வரி , 22 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

  • வருமான வரி சட்டத்தின் கீழ், ஊக்கத்தொகை பெறாத நிறுவனங்கள் கட்டும் குறைந்தபட்ச ஆல்டர்னேட் டேக்ஸ், ரத்துசெய்யப்பட்டுள்ளது.

  • அக்டோபர் 1, 2019-லிருந்து ஆரம்பிக்கும் புதிய நிறுவனங்களுக்கு, கார்ப்பரேட் டேக்ஸ் 15 சதவிகிதம் மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • தயாரிப்பு நிறுவனங்களில், R&D நடவடிக்கைகள் மற்றும் இன்கியூபேஷன் சென்டர் அமைப்பது போன்றவற்றை CSR நடவடிக்கைகளில் சேர்த்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளை ஆதரித்திருக்கும் ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜன் வதேரா, ''நிதி அமைச்சர் அறிவித்திருக்கும் முக்கியமான நடவடிக்கைகள், இந்தியப் பொருளாதாரத்துக்குப் புத்துயிர்கொடுக்கும். இந்த நிதி நடவடிக்கைகள், மார்க்கெட் சென்டிமென்டை உயர்த்தி ஆட்டோமொபைலுக்கான தேவையை அதிகரிக்கும். CSR குறித்த அறிவிப்புகள் மூலம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செலவுகளைக் குறைக்கும்'' என்று கூறியுள்ளார்.

ராஜன் வதேரா
ராஜன் வதேரா
SIAM

ஆட்டோமொபைல் துறை மந்தநிலை காரணமாக, ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும் என்று பல மாதங்களாக ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சங்கம் (SIAM) கேட்டுவந்தது. ஆனால், தற்போது அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டி கவுன்சில் சந்திப்பில், இதுகுறித்த எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை. மத்திய அரசின் இந்தச் சலுகையால், மக்களுக்கு நேரடியாக எந்தப் பலனும் கிடைக்க வாய்ப்பில்லை என்று ஒரு தரப்பினர் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.