Published:Updated:

கனெக்டட் கார்கள்... பார்க்கிங் முதல் டிராஃபிக் வரை இனி ஸ்மார்ட்!

ரஞ்சித் ரூஸோ

ஒரே ஆண்டில், இந்தியாவில் கார்களின் விற்பனை யூ-டர்ன் அடித்து, டைம் மிஷினில் ஏறி 10 வருடங்களுக்கு முன் சென்றுவிட்டது. ஆனால், இதே ஆண்டில் கார்களின் தொழில்நுட்பம் 3 ஆண்டுகள் முன்னோக்கிப் பாய்ந்துள்ளது.

MG ஹெக்டர்
MG ஹெக்டர்

எந்தெந்த தொழில்நுட்பங்கள் ஆட்டோமொபைலின் எதிர்காலத்தை மாற்றப்போகின்றன என யோசிக்கும் வேளையில், மடமடவென கடைவிரித்துவிட்டன கனெக்டட் கார்கள். 50 லட்ச ரூபாய் வால்வோவில் இருந்து 7 லட்ச ரூபாய் வென்யூ வரை... ஏன் ரூ.1.5 லட்சத்தில் கிடைக்கும் ஏத்தர் ஸ்கூட்டரிலும்கூட, பட்டா போட்டுள்ளன கனெக்டட் கார் தொழில்நுட்பங்கள்.

கிளவுட், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT), பிக் டேட்டா போன்ற தொழில்நுட்பங்களை இணைத்து ஒரு சிம் கார்டு பொருத்தி, கார்களை மொபைல் போல மாற்றுவதுதான் இந்த கனெக்டட் கார் தொழில்நுட்பம். Garner International எனும் ஆராய்ச்சி நிறுவனம் '2020-க்குள் 6.1 கோடி கனெக்டட் கார்கள் சாலையில் இருக்கும் எனச் சொல்கிறது. அதாவது, தற்போது இருக்கும் கார்களைவிட, இந்த கார்கள் 10 சதவிகிதம் அதிகம் விற்பனையாகும். இதற்கு சிறந்த உதாரணம் MG ஹெக்டர்.

விற்பனைக்கு வந்த சில மாதங்களிலேயே விற்றுத்தீர்ந்துள்ளது. இந்த கனெக்டட் கார்களால், நாம் அன்றாடம் பயன்படுத்தும் இந்த 5 துறைகள் மாறப்போகின்றன.

பார்க்கிங்

Connected car
Connected car
கனெக்டட் கார்

டிரைவிங் மேல் காதலாய் இருப்பவர்கள்கூட, டிரைவிங்கே பிடிக்கவில்லை என்று சொல்லவைப்பவை பார்க்கிங். பலர் காருக்கு பதிலாக பைக் மற்றும் ஸ்கூட்டர்களைப் பயன்படுத்துவது, பார்க்கிங் கிடைப்பதில்லை என்பதால்தான். இந்த பார்க்கிங் பிரச்னைக்குத் தீர்வு தரப்போகின்றன கனெக்டட் கார்கள். கடந்த ஆண்டு, ராபர்ட் பாஷ் நிறுவனம், இந்தியாவில் நடைபெற்ற 'மொபிலிட்டி 2.0' என்ற மாநாட்டில் பார்க்கிங் எப்படி மாறப்போகிறது என கண்முன் நிறுத்தியது.

Vikatan

இந்த கனெக்டட் தொழில்நுட்பம்மூலம் நாம் செல்லும் இடத்தில் கார் நிறுத்தம் இருக்கிறதா என்பதை முன்பே பார்த்துக்கொள்ளலாம். காரை நிறுத்த, இடத்தை முன்பதிவு செய்துவிட்டு, அதற்கான தொகையை காரில் இருந்தே செலுத்திவிடலாம். பார்க்கிங் கூட்டமாக இருக்கிறதா என்ற அலெர்ட், வேலட் பார்க்கிங் புக் செய்யும் வசதி என ஒரே தொழில்நுட்பத்தில் ஏகப்பட்ட விஷயங்களைப் புகுத்தியிருந்தார்கள். இந்த தொழில்நுட்பம் இன்னும் இரண்டு ஆண்டில் எல்லா மெட்ரோ சிட்டிகளிலும் வந்துவிடுமாம்.

ஸ்மார்ட் டிராஃபிக்

smart traffic
smart traffic

பார்க்கிங் மட்டுமில்லை, டிராஃபிக் சிக்னல்களும் ஸ்மார்ட் ஆகப்போகின்றன. அமெரிக்கா, ஐரோப்பியா மற்றும் ஆசியாவின் சில நாடுகளில் Cooperative Intelligent Transportation System (C-ITS) என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள். இந்த சிஸ்டம் மூலம் நகரத்தின் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பும் கார்களும் தொடர்பிலேயே இருக்கும். இதன்மூலம் டிராஃபிக் சிக்னல்கள் கனெக்டட் தொழில்நுட்பம் கொண்ட வாகனங்களுடன் தொடர்பிலேயே இருக்கும்.

ஸ்மார்ட் சிட்டியாகும் ஹெரிடேஜ் சிட்டி... மதுரை மாறுதுங்கோ!

4 சாலைகள் சந்திக்கும் இடத்தில் டிராஃபிக் சிக்னல்கள், அங்கு வரும் வாகனங்களின் அளவை கணக்கிட்டு நெரிசலாக இருக்கும் சாலையை அதிக நேரமும், நெரிசல் குறைவான சாலையை குறைவான நேரமும் திறக்கும். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்றவை வருவதை 1 கி.மீ -க்குமுன்பே தெரிந்துகொண்டு, அந்த சாலையை மட்டும் வேகமாக க்ளீயர் செய்யும். இதெல்லாம் கனெக்டட் கார்களில் மட்டுமே சாத்தியம். இந்தியாவில் இப்போது மெட்ரோ சிட்டிகள் ஸ்மார்ட் சிட்டியாக மாறிக்கொண்டிருக்கின்றன. அனைத்து வாகனங்களிலும் இந்த கனெக்டட் தொழில்நுட்பம் வரும்பட்சத்தில், இன்னும் 5 ஆண்டுகளில் C-ITS நம் தெருக்களில் வந்துவிடும்.

அவசர உதவி மையம்

கனெக்டட் கார்
கனெக்டட் கார்
விபத்து என்றால் அவசர உதவி மையத்துக்கு இந்த மூன்று விஷயங்கள் அத்தியாவசியம். என்ன உதவி, எந்த இடம் மற்றும் அந்த இடத்துக்கு போவதற்கான வழி.

விபத்து நடைபெறும்போது அவசர உதவி மையத்தைக் கூப்பிட்டு, இந்த மூன்று தகவல்களையும் தானாகவே தந்துவிடுகிறது கனெக்டட் கார்கள். MG ஹெக்டர், கியா செல்டோஸ், ஹூண்டாய் வென்யூ, ஃபோர்டு எக்கோஸ்போர்ட், வால்போ XC40 போன்ற கார்களில் விபத்து நடைபெற்று ஏர்பேக் வெளியேறிவிட்டால், அந்த நிறுவனத்துக்கு தானாகவே தகவல் சென்றுவிடும். அங்கிருந்து அவசர உதவி எண்ணுக்கு அழைப்பு சென்று, உங்களுடைய இடத்துக்கு உதவி தானாகத் தேடிவரும்.

அதுமட்டுமில்லை, உங்களுடைய கார் விபத்துக்கு உள்ளாகும்போது, நீங்கள் பதிவுசெய்திருக்கும் மொபைல் எண்களுக்கு அந்தத் தகவல் சென்றுவிடும். தற்போது, கார் நிறுவனங்களின்மூலம் இயங்கும் இந்த அவசர கால சேவைகள் நேரடியாக அரசின் அவசர உதவி மையத்துக்குச் சென்றால், உதவி விரைவாகக் கிடைக்கும்.

டாக்ஸி சர்வீஸ்

தானியங்கி கார்
தானியங்கி கார்

தானியங்கி டாக்ஸி தொழில்நுட்பத்தை ஊபெர் தயாரித்துக் கொண்டிருக்கிறது. இந்த அட்டானோமஸ் கார்களால் சில நன்மைகளும் உண்டு. மனிதர்களின் தவறால் ஏற்படும் விபத்துகளை முழுவதுமாகக் குறைக்கலாம். தானியங்கி கார்கள் டிராஃபிக்கை முன்கூட்டியே அறிந்து, அதற்கேற்ப வேகமாக ரூட்டை மாற்றிக்கொள்ளும். ஏரியா அடிப்படையாக இல்லாமல் தேவை அடிப்படையில் கார் புக்கிங் நடைபெறும். கனெக்டட் தொழில்நுட்பத்தால் டாக்ஸிகள் மாறப்போகின்றன.

Vikatan

மார்க்கெட்டிங்

Big data
Big data

ஒரு வெற்றிகரமான மார்க்கெட்டிங் என்பது வாடிக்கையாளரின் பயன்பாடு மற்றும் நடத்தையை அடிப்படையாகக் கொண்டது. வாடிக்கையாளரை சரியாகப் புரிந்துகொண்டோம் என்றால், அதற்கேற்ற பொருள்களைத் தயாரிக்கலாம். இதற்குப் பயன்படுவதுதான் பிக்டேட்டா. இந்த பிக் டேட்டா எப்படிப் பயன்படும் என்றால்... உதாரணத்துக்கு, விகடனில் ஒரு ஆட்டோமொபைல் கட்டுரை படித்துவிட்டு, வேறு ஒரு தளத்தில் ஒரு பயணக் கட்டுரை படிக்கிறீர்கள் என்றால், அடுத்த முறை விகடன் தளத்துக்கு வரும்போது, உங்களுக்கு பயணக் கட்டுரைகள் காட்டும். இதுவே, ஓர் உணவு விடுதிக்கு தொடர்ச்சியாகச் செல்கிறீர்கள் என்றால், அதற்கு அருகில் இருக்கும் உணவுக் கடைகளில் இருந்து உங்களுக்கு ஆஃபர்களும் விளம்பரங்களும் வரும்.

Vikatan

மொபைல் ஆப்

கனெக்டட் கார் மொபைல் ஆப்
கனெக்டட் கார் மொபைல் ஆப்
Shutterstock

தற்போது இருக்கும் கனெக்டட் கார்கள், மொபைல் ஆப் மூலகமாகவே இயங்குகின்றன. கியாவின் UVO, ஹூண்டாயின் ப்ளூ லின்க், MG iSMART என மொபைல் ஆப்பில் இருந்தே உங்கள் காரை கன்ட்ரோல் செய்யலாம். தற்போது காரை ஆன்செய்வது, ஏசி போடுவது, ஹெட்லைட் ஆன்செய்வது போன்ற சின்னச்சின்ன விஷயங்கள்தான் மொபைல் ஆப்பில் இருக்கின்றன. எதிர்காலத்தில், காரை நாமே சர்வீஸ் செய்துகொள்ளும் அளவுக்கு பல கன்ட்ரோல்களும் கிடைக்கும்.

Vikatan