Published:Updated:

அதே பவர், குறைவான டார்க்... இதுதான் பிஎஸ் 6 சுஸூகி ஆக்ஸஸ் 125!

பிஎஸ் 6 சுஸூகி ஆக்ஸஸ்
பிஎஸ் 6 சுஸூகி ஆக்ஸஸ்

புது இன்ஜின் முன்பை விட சுறுசுறுப்பாக இருக்கும் எனத் தெரிகிறது. ஆனால், டாப் ஸ்பீடு குறைந்திருக்கும்.

ஹோண்டா, யமஹா நிறுவனங்களின் வரிசையில் இப்போது சுஸூகியும் தனது 125சிசி ஸ்கூட்டர் ஆக்ஸஸின் பிஎஸ் 6 மாடலை அறிமுகப்படுத்திவிட்டது. எதிர்பார்த்ததைப் போலவே இதுவும் FI ஸ்கூட்டர்தான். விலை அடுத்த மாதம் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில் ஆக்ஸஸில் ஏற்கெனவே இருக்கும் வசதிகளுடன் புது வசதிகளையும் இணைத்திருக்கிறது சுஸூகி.

பிஎஸ் 6 ஆக்ஸஸ்
பிஎஸ் 6 ஆக்ஸஸ்

புது பிஎஸ் 6 ஆக்ஸஸில் ஃபியூல் கேப் சீட்டுக்கு வெளியே வந்துவிட்டது. எல்ஈடி ஹெட்லைட், ஸ்பீடோமீட்டரில் எக்கோ லைட், பேட்டரியின் ஆரோக்கியத்தைக் காட்டும் வோல்ட் மீட்டர் எனப் புது வசதிகள் இணைந்துவிட்டன. இந்த ஸ்கூட்டரில் தற்போது இருக்கும் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் தொடரப்போகிறதா அல்லது சிக்னஸ் ரே-ZR போல ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் வரப்போகிறதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இந்த செக்மென்ட்டிலேயே நீளமான சீட் இப்போது சுஸூகி ஆக்ஸஸில் இருக்கிறது. புது ஸ்கூட்டரில் இந்த சீட் இன்னும் நீளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீட் மட்டுமில்லை ஃபிளோர் போர்டு இடவசதியும் அதிகரிக்கப்போகிறது. டிவிஎஸ் என்டார்க் போல, சுஸூகியிலும் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் ஸ்டாண்டர்டாக வரப்போகிறது. ஆனால், ஸ்பெஷல் எடிஷனில் மட்டும்.

புதிய பிஎஸ் 6 இன்ஜின் 6,750rpm-ல் 8.7bhp பவரும், 5,500rpm-ல் 10Nm டார்க் தரும். தற்போது விற்பனையில் இருக்கும் பிஎஸ் 4 ஆக்ஸஸ் இதே பவர்தான் கொடுக்கும் என்றாலும், 7000rpm-ல் மட்டுமே மொத்த பவரையும் வெளிப்படுத்தும். இதனால், புது இன்ஜின் முன்பை விட சுறுசுறுப்பாக இருக்கும் எனத் தெரிகிறது. ஆனால், டாப் ஸ்பீடு குறைந்திருக்கும். டார்க் 0.2Nm குறைந்ததோடு இன்ஜின் வேகமும் அதிகரித்துவிட்டது. இதற்கு முன்பு 5000rpm-ல் கிடைத்த முழு டார்க் இனி 5500rpm-ல் கிடைக்கும்.

ஆக்ஸஸ் 125 ஸ்பெஷன் எடிஷன்
ஆக்ஸஸ் 125 ஸ்பெஷன் எடிஷன்

போர், ஸ்ட்ரோக், கம்ப்ரஷன் ரேஷியோ, சேஸி மாற்றங்கள், எடை, ஃபியூல் டேங்க், மைலேஜ் போன்ற மற்ற எந்தத் தகவல்களையும் சுஸூகி இன்னும் வெளியிடாத நிலையில் இந்த ஸ்கூட்டர் ஜனவரி மாதம் விற்பனைக்கு வரப்போவதாகத் தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு