Published:Updated:

400 புதிய மாடல்கள், 1000 புதிய வேரியன்ட்டுகள்... பி.எஸ் 6 ரெடி டாடா!

டாடா மோட்டார்ஸ் தனது மொத்த வாகன தயாரிப்புகளை பிஎஸ்-6 ஆக மாற்றும் முயற்சியில் உள்ளது. இதனால் 140 பழைய மாடல்களை நிறுத்திவிட்டு 400 புதிய மாடல்களைக் கொண்டுவருகிறது.

டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ் ( TATA Motors )

இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ், ஏப்ரல் 2020-ல் பிஎஸ்-6 விதிமுறைகள் அமலுக்கு வருவதால் தனது மொத்த வாகன மாடல்களையும் பிஎஸ்-6 ஆக மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனால், டாடா மோட்டார்ஸின் கார், வேன், லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்களில் கிட்டத்தட்ட 120 முதல் 140 மாடல்களை நிறுத்தப்போகிது அந்நிறுவனம். இதற்குப் பதிலாக பழைய மாடல்களின் அப்டேட்டையும் சேர்த்து 400 புதிய மாடல்களும் 1,000 புதிய வேரியன்ட்டுகளும் வரப்போகின்றன. 

டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலை
டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலை

டாடா வாகனங்களில் ஆல்பா, ஒமேகா போன்ற மாடுலர் பிளாட்ஃபார்ம் வந்துவிட்டதால் வெவ்வேறு இன்ஜின், வெவ்வேறு பிளாட்ஃபார்ம் என்பதை மாற்றி ஒரே இன்ஜின் மற்றும் ஒரே பிளாட்ஃபார்மை வைத்து வெவ்வேறு செக்மென்ட் வாகனங்களை உருவாக்குவார்கள். இதன் மூலம் குறைவான நேரத்தில், குறைவான செலவில் மொத்த வாகனங்களையும் பிஎஸ்-6 ஆக மாற்றிவிடலாம். இதனால், வாகனங்களின் விலை கொஞ்சம் அதிகரிக்கும்.

டாடாவின் மொத்த வாகன வரிசையில் இருக்கும் 1.0 லிட்டர் முதல் 5.9 லிட்டர் வரையான CNG, LPG, பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களும் இதற்குத் துணையாக ஆட்டோமேட்டிக் மற்றும் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் அந்தந்த மாடல்களில் கஸ்டமர்களே தங்களது தேவைக்கு ஏற்ப மாற்றியமைத்து வாங்கிக்கொள்ளும் வசதியை அளிக்கவுள்ளார்கள்.

டாடா கார்களைவிட கமர்ஷியல் வாகனங்களில்தான் அதிக மாடல்கள் புதிதாக வரப்போகின்றன. கமர்ஷியல் வாகனங்களைப் பொறுத்தவரை ஐரிஸ் 0.5 டன் வேன், 55 டன் டிரக் மற்றும் பெரிய பஸ்களில் மட்டுமே 40 விதவிகிதமான இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் காம்பினேஷன் கொண்ட வேரியன்ட்டுகள் கொடுக்கப்போகிறார்கள். 

கார்களைப் பொறுத்தவரை சஃபாரி, சுமோ, ஹெக்ஸா, நானோ, போல்ட், ஜெஸ்ட் போன்ற கார்கள் நிறுத்தப்பட உள்ளன. அதுமட்டுமில்லை ஹேரியர், டியாகோ போன்ற கார்களில் சரியாக விற்பனையாகாத வேரியன்ட்களை நிறுத்திவிட்டு, விற்பனையாகும் வேரியன்ட்டுகளில் அதிக வசதிகளைக் கொடுக்கும் முடிவில் இருக்கிறார்கள். 

டாடா ஆல்ட்ரோஸ்
டாடா ஆல்ட்ரோஸ்

ஹேரியர், ஆல்ட்ரோஸ் போன்ற மாடுலர் பிளாட்ஃபார்ம் கார்களில் கஸ்டமர்களின் தேவைக்கு ஏற்ப இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் கொடுக்கவுள்ளார்கள். டாடாவின் மொத்த வாகன வரிசையில் 1.0 லிட்டர் முதல் 5.9 லிட்டர் வரையான CNG, LPG, பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களும் இதற்குத் துணையாக ஆட்டோமேட்டிக் மற்றும் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும், வாடிக்கையாளர்கள் தங்களது தேவைக்கு ஏற்ப மாற்றியமைத்து வாங்கிக்கொள்ளும் வசதியை அளிக்கவுள்ளார்கள்.

ரத்தன் டாடா..!
ரத்தன் டாடா..!
2,500 கோடி
இந்த பிஎஸ்-6 மற்றும் வாகன மாற்றங்களுக்காக டாடா மோட்டார்ஸ் மொத்தம் 2,500 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

இது பற்றி பெங்களூரில் இருக்கும் டாடா கமர்ஷியல் அதிகாரி ஒருவரிடம் பேசினோம்,

"செலவுகளைக் குறைக்க இதுவரை சரியாக விற்பனையாகாத மாடல்களையும் வேரியன்ட்டுகளையும் கைவிடப்போகிறோம். இதனால் டாடா மோட்டார்ஸில் 20 சதவிகித வேரியன்ட்டுகள் குறையும். குறிப்பிட்ட இன்ஜின்களை மட்டுமே வைத்துக்கொண்டு கிட்டத்தட்ட 30 சதவிகித இன்ஜின்களை நிறுத்தப்போகிறோம்.

கமர்ஷியல் வாகனங்களில் இதற்கு முன்பு இருந்த 6 சிலிண்டர் இன்ஜின்களை நிறுத்திவிட்டு 35 டன் வாகனம் வரை, புதிய 4 சிலிண்டர் டர்போ இன்ஜினை மட்டுமே கொடுக்கப்போகிறோம். டாடாவில் தற்போது EGR, SCR என இரண்டு தொழில்நுட்பங்கள் பல மாடல்களில் கலவையாக வருகின்றன.

Tata Intra
Tata Intra

இதை மாற்றி ஒரு மாடல் சீரிஸ் முழுவதும் EGR இன்ஜின்களும் ஒரு சீரிஸ் முழுவதும் SCR இன்ஜின்களும் கொண்டுவரவுள்ளோம். அதுமட்டுமில்ல, ஷோரூமில் வாகனம் பில் ஆன பிறகுதான் அதற்குப் புது சேஸி நம்பரைத் தயாரிக்கும் முறையைக் கொண்டுவருகிறோம். இதில் இருக்கும் அட்வான்டேஜ் என்னவென்றால் வாடிக்கையாளர் விருப்பப்படி முழுமையாக கஸ்டமைஸ் செய்யப்பட்ட வாகனங்களை எங்களால் தயாரித்து கொடுக்க முடியும். அதுமட்டுமல்ல, டீலர்களில் வாகனங்கள் தேங்குவதும் தடுக்கப்படுகிறது.

தற்போது  80 சதவிகித இன்ஜின்களுக்கு பிஎஸ்-6 சான்றிதழ் வாங்கிவிட்டோம். இப்போது 90 வாகனங்களுக்குச் சான்றிதழ்கள் கிடைத்திருக்கும் நிலையில் மற்ற வாகனங்களின் சான்றிதழ் வந்தபின் டாடாவிடமிருந்து நிறைய அறிவிப்புகள் வரும் காத்திருங்கள்" என்றார்.

டாடா மோட்டார்ஸ், IRCTC பங்குகளால் கிடைத்த படிப்பினைகள்! #SmartInvestorIn100Days நாள்-28