Published:Updated:

ஜனவரி 2020-ல் வெளியான, வெளியாகப் போகும் புதிய BS-6 டூ-வீலர்கள்/ கார்களின் பட்டியல் இதோ!

Tiago BS-6
Tiago BS-6 ( Tata Motors )

2 வருடங்களுக்கு ஒருமுறை நம்நாட்டில் நடைபெறும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பங்குபெறாத நிறுவனங்களில் சில, தற்போதைய பண்டிகைக் காலத்தில் BS-6 அப்டேட் அல்லது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.

வருகின்ற பிப்ரவரி 7-12 தேதிகளில், 2020 வரையிலான காலகட்டத்தில், சர்வதேச ஆட்டோ ஷோக்களுக்கு இணையான 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ நடைபெறவிருக்கிறது. Greater Noida-வில் அமைந்திருக்கும் India Expo Mart-ல் மிகப் பிரமாண்டமான முறையில் நடக்கவிருக்கும் இந்த வருட எக்ஸ்போவில் பல பிரபலமான நிறுவனங்கள் கலந்துகொள்ளவில்லை என்றாலும், கடந்த எக்ஸ்போவைப் போலவே (எம்ஜி, கியா, க்ளீவ்லேண்ட், Emflux One, Flow) இம்முறையும் புதிய வாகனத் தயாரிப்பாளர்கள் களமிறங்க உள்ளார்கள் (Great Wall Motors, Haima - FAW)! எனவே 2 வருடங்களுக்கு ஒருமுறை நம்நாட்டில் நடைபெறும் இந்த ஆட்டோமொபைல் திருவிழாவில் பங்குபெறாத நிறுவனங்களில் சில, தற்போதைய பண்டிகைக் காலத்தில் BS-6 அப்டேட் அல்லது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். இந்த மாதத்தில் வந்துவிட்ட/வரப்போகும் மாடல்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

BS-6 டூவீலர்கள்

Access 125 BS-6
Access 125 BS-6
Suzuki India
  • ஹீரோ HF டீலக்ஸ் (ஜனவரி 2, 2020)

  • சுஸூகி ஆக்ஸஸ் 125 (ஜனவரி 6, 2020)

  • ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 350 (ஜனவரி 7, 2020)

  • பஜாஜ் சேட்டக் (ஜனவரி 14, 2020)

  • ஆக்டிவா 6G (ஜனவரி 15, 2020)

  • ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் (ஜனவரி 20, 2020)

  • கேடிஎம் 390 அட்வென்ச்சர் (ஜனவரி 20, 2020)

  • ஏத்தர் 450X (ஜனவரி 28, 2020)

  • டிவிஎஸ் அப்பாச்சி RR 310 (ஜனவரி 30, 2020)

  • கேடிஎம் டியூக் 390 / RC 390 / டியூக் 250 (ஜனவரி 2020)

அலாய் வீல் & Fi உடன் வந்துவிட்டது, BS-6 ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 350!

BS-6 கார்கள்

Tata Nexon BS-6
Tata Nexon BS-6
Tata Motors
  • டொயோட்டா இனோவா க்ரிஸ்டா (ஜனவரி 6, 2020)

  • ஜீப் காம்பஸ் டீசல் ஆட்டோமேட்டிக் (ஜனவரி 14, 2020)

  • ஆடி Q8 (ஜனவரி 15, 2020)

  • மாருதி சுஸூகி ஈக்கோ (ஜனவரி 17, 2020)

  • மாருதி சுஸூகி செலெரியோ (ஜனவரி 20, 2020)

  • ஃபோர்டு எக்கோஸ்போர்ட் (ஜனவரி 20, 2020)

  • ஹூண்டாய் Aura (ஜனவரி 21, 2020)

  • டாடா அல்ட்ராஸ் (ஜனவரி 22, 2020)

  • டாடா டியாகோ / டிகோர் / நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்கள் (ஜனவரி 22, 2020)

  • MG eZS (ஜனவரி 23, 2020)

  • மெர்சிடீஸ் பென்ஸ் GLE (ஜனவரி 28, 2020)

  • டாடா நெக்ஸான் EV (ஜனவரி 28, 2020)

  • ரேஞ்ச் ரோவர் இவோக் (ஜனவரி 30, 2020)

  • ஸ்கோடா கரோக்/விஷன் IN எஸ்யூவி கான்செப்ட் (பிப்ரவரி 3, 2020)

  • ஆடி A8L (பிப்ரவரி 3, 2020)

  • லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் (பிப்ரவரி 13, 2020)

  • மஹிந்திரா XUV 5OO/மராத்ஸோ (ஜனவரி 2020)

  • ஹூண்டாய் சான்ட்ரோ (ஜனவரி 2020)

பின் செல்ல