Published:Updated:

`இந்தியாவில் 5 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிந்த எரிபொருள் தேவை!' - என்ன காரணம்?

2019-ல் பெட்ரோல்-டீசல் தேவை என்பது நாளொன்றுக்கு 1,70,000 பேரல்.

பெட்ரோல், டீசல்
பெட்ரோல், டீசல்

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு எரிபொருள் தேவை குறைந்துள்ளதாக International Energy Agency (IEA) கூறியுள்ளது. கடந்த மார்ச் 2019-ல் எரிபொருள் தேவை 3.4 சதவிகித அளவில் அதிகரித்திருந்தது. ஆனால், ஏப்ரல்-செப்டம்பர் மாதங்களில் இந்த அளவு 1.4 சதவிகிதமாகக் குறைந்துள்ளதாக இந்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.

Oil industry
Oil industry

எரிபொருள் நுகர்வு வரும் மாதங்களில் 3-4 சதவிகிதமாக இருந்தால் மட்டுமே, எரிபொருள் தேவை என்பது முன் இருந்த நிலைக்கு திரும்பும். ஆனால், அது நடப்பதற்கு வாய்ப்புகள் குறைவு எனச் சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார் HPCL நிறுவனத்தின் தலைவர் எம்.கே.சுரானா.

இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது, இந்த ஆண்டின் அதிகப்படியான மழை. அதிக மழை காரணமாகச் சாலை போக்குவரத்து, கட்டுமானம் போன்ற வேலைகள் குறைந்ததால் எரிபொருள் தேவை குறைந்துள்ளது என்கிறார்கள்.

1,70,000 பேரல்
இந்த ஆண்டு நாளொன்றுக்கு 1,70,000 பேரல் எரிபொருள் தேவையாக இருக்கும் எனக் கணித்திருக்கிறது IEA. 2014-ம் ஆண்டுக்குப் பிறகு மிகவும் குறைவான அளவு இது.

அடுத்த முக்கியக் காரணம், டீசலின் தேவை குறைந்திருப்பது. உலகளவில், ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையான காலகட்டத்தில் டீசலின் தேவை 1 சதவிகிதம் மட்டும் உயர்ந்திருக்கிறது. ஆனால், பெட்ரோல் தேவை என்பது 9 சதவிகிதம் வரை உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு டீசல் தேவை 3 சதவிகிதம் வரை உயர்ந்திருந்தது. ஆனால், இந்த ஆண்டு நிச்சயம் அப்படி இருக்கப்போவதில்லை.

கடந்த 5 ஆண்டுகளாக ஏறுமுகமாக இருந்த எரிபொருள் தேவை சற்றே சரிந்திருப்பது பொருளாதார அடிப்படையில் வருந்தத்தக்க விஷயமாக இருந்தாலும், சுற்றுச்சூழல் அடிப்படையில் இது ஒரு நல்ல முன்னேற்றமே.