Published:Updated:

முன்பைவிட 15% அதிக மைலேஜ்... BS-6 ஸ்டார் சிட்டி ப்ளஸ்ஸில் என்ன ஸ்பெஷல்?

ஸ்டார் சிட்டி ப்ளஸ்
News
ஸ்டார் சிட்டி ப்ளஸ் ( TVS Motors )

முன்பக்கத்திலிருந்து பார்க்கும்போது, ஸ்டார் சிட்டி ப்ளஸ்ஸின் புதிய LED ஹெட்லைட் கவனத்தை ஈர்க்கிறது. ரேடியானைப் போலவே, இங்கும் மொபைல் சார்ஜர் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ஸ்டார் சிட்டி - இந்த 100சிசி கம்யூட்டர் பைக்கை டிவிஎஸ் அறிமுகப்படுத்தியபோது, அது 110சிசி விக்டருக்கு மாற்றாகப் பொசிஷன் செய்யப்பட்டது தெரிந்ததே. காலப்போக்கில், இது கணிசமான மாற்றங்களையும் ஸ்பெஷல் எடிஷன்களையும் பெற்றதுடன், ஸ்டார் சிட்டி ப்ளஸ் எனப் பெயர் & டிசைன் மாற்றத்துடன், 110சிசி இன்ஜினுடன் வரத் தொடங்கிவிட்டது! இடையே, புதிய விக்டரின் வருகையால் கொஞ்சம் தனது இடத்தை இழந்திருந்த இந்த கம்யூட்டர் பைக், தற்போது BS-6 அப்டேட்டுடன் களமிறங்கிவிட்டது.

முன்பைப் போலவே சிங்கிள்-டோன் (62,201 ரூபாய்) மற்றும் டூயல்-டோன் (62,701 ரூபாய்) என இரு கலர் ஆப்ஷன்களில் வந்திருக்கும் புதிய ஸ்டார் சிட்டி ப்ளஸ், முன்பைவிட முறையே 5,526 - 6,558 ரூபாய் அதிக விலையில் (சென்னை எக்ஸ்-ஷோரூம்) வந்திருக்கிறது. இதர BS-6 கம்யூட்டர்களைப் போலவே இதுவும் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் தொழில்நுட்பத்தைத் தன்வசப்படுத்தியிருக்கிறது. இதைத் தவிர, டிசைன் மற்றும் வசதிகளில் சிற்சில மாற்றங்களையும் பைக்கில் காணமுடிகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

டிசைன் மற்றும் வசதிகள்

ஸ்டார் சிட்டி ப்ளஸ்ஸின் BS-4 மாடலைப் போலவே, BS-6 வெர்ஷனும் அதே அளவுகளில் தொடர்கிறது. இருப்பினும் எடையில் கணிசமான வித்தியாசம் தெரிகிறது (BS-4: 109 கிலோ, BS-6: 116 கிலோ). முன்பைவிட தடிமனான எக்ஸாஸ்ட் பைப், இதற்குப் பிரதான காரணமாக இருக்கலாம். மற்றபடி 10 லிட்டர் பெட்ரோல் டேங்க், SBT உடனான டிரம் பிரேக்ஸ், டெலஸ்கோபிக் – ஷாக் அப்சார்பர் சஸ்பென்ஷன், 17 இன்ச் Duragrip டியூப்லெஸ் டயர்கள், டியூப்லர் சேஸி ஆகியவை அப்படியே தொடர்கின்றன.

LED Headlight
LED Headlight
TVS Motors

ஆனால், முன்பக்கத்திலிருந்து பார்க்கும்போது, ஸ்டார் சிட்டி ப்ளஸ்ஸின் புதிய LED ஹெட்லைட் கவனத்தை ஈர்க்கிறது. இது AC அல்லது DC முறையில் இயங்குகிறதா என்பதில் தெளிவில்லை. இதற்கு மேட்சிங்காக, அதற்கு மேலே இருக்கும் வைஸரும் புதிது. ரேடியானைப் போலவே, இங்கும் மொபைல் சார்ஜர் வசதி வழங்கப்பட்டுள்ளது. டூயல் டோன் மாடலின் பெயருக்கேற்றபடி அதன் கிராஃபிக்ஸ், மிரர்கள், சீட், எக்ஸாஸ்ட், ஷாக் அப்சார்பர் அமைந்திருக்கின்றன. All Gear எலெக்ட்ரிக் ஸ்டார்ட், கம்யூட்டர்களுக்குப் பெரிய வரப்பிரசாதம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்ஜின் மற்றும் ஓட்டுதல் அனுபவம்

ஜூபிடர் க்ளாஸிக்கைத் தொடர்ந்து, ET-Fi (Ecothrust Fuel Injection) தொழில்நுட்பத்தைப் பெற்றிருக்கிறது ஸ்டார் சிட்டி ப்ளஸ். BS-4 மாடலைப் போலவே BS-6 வெர்ஷனிலும் அதே ஷார்ட் ஸ்ட்ரோக் (53.5மிமீ Bore X 48.8மிமீ Stroke), 109.7சிசி இன்ஜின் – 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணியே இடம்பெற்றுள்ளது. இதன் கம்ப்ரஷன் ரேஷியோ அதிகரித்திருந்தாலும் (BS-4: 9.65:1, BS-6: 10:1), முன்பைவிட 0.3bhp பவர் குறைந்துள்ளது (8.1bhp@7,350rpm). டார்க்கில் மாற்றமில்லாவிட்டாலும், அது வெளியாகும் ஆர்பிஎம் மாறிவிட்டது (0.87kgm@4,500rpm). 90கி.மீ வேகம் வரை ஸ்டார் சிட்டி ப்ளஸ் BS-6 செல்லும் என டிவிஎஸ் தெரிவித்துள்ளது. ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் காரணமாக, பைக்கின் மைலேஜ் 15% அதிகரித்துள்ளதாகத் தகவல் வந்திருக்கிறது.

110cc ET-Fi BS-6 Engine
110cc ET-Fi BS-6 Engine
TVS Motors
Speedometer
Speedometer
TVS Motors

மேலும் Cold Start திறன் மற்றும் த்ராட்டில் ரெஸ்பான்ஸிலும் முன்னேற்றம் இருக்கும் என நம்பலாம். டிவிஎஸ் வாகனங்களுக்கே உரித்தான பவர் மற்றும் எக்கோ இண்டிகேட்டர், இங்கும் தொடர்வது ப்ளஸ். OBD-1 உடனான சர்வீஸ் இண்டிகேட்டர், இந்த கம்யூட்டர் பைக்கின் முறையான பராமரிப்புக்கு வழிவகை செய்கிறது. முன்பைவிட குறைவான பவர் மற்றும் அதிக எடை ஆகியவை ஒன்றுசேர்ந்து, புதிய ஸ்டார் சிட்டி ப்ளஸ்ஸின் ஓட்டுதலில் என்ன மாதிரியான மாறுதலை ஏற்படுத்தியிருக்கின்றன என்பது, அதை ஓட்டிப் பார்க்கும்போது தெரிந்துவிடும்.

முதல் தீர்ப்பு

BS-4 விட BS-6 மாடலின் விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் இருப்பதுடன், அதற்கு இணையாக LED ஹெட்லைட், ET-Fi தொழில்நுட்பம், மொபைல் சார்ஜர் ஆகியவை சேர்க்கப்பட்டிருப்பது அருமை. ஆனால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, ரேடியான் போலவே இங்கும் முன்பக்க டிஸ்க் பிரேக்கை ஆப்ஷனலாகவாவது டிவிஎஸ் வழங்கியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. இதன் போட்டியாளர்களைப் பொறுத்தவரை, ஹீரோ தனது 110சிசி ஸ்ப்ளெண்டர் i3S பைக்கின் BS-6 வெர்ஷனைக் கொண்டுவந்துவிட்டது.

ஸ்டார் சிட்டி ப்ளஸ்
ஸ்டார் சிட்டி ப்ளஸ்
TVS Motors
SBT Without Disc
SBT Without Disc
TVS Motors

எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாததால், தனது ட்ரீம் சீரீஸ் பைக்குகளின் விற்பனையை ஹோண்டா நிறுத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது; பல்வேறு வேரியன்ட்டுகளில் (100சிசி, 110சிசி) பிளாட்டினா வெற்றிநடை போடும் நிலையில், டிஸ்கவரின் உற்பத்தி நிறுத்தப்படுவதற்கான சாத்தியம் இருக்கிறது. சுஸூகி எப்போதோ ஹயாத்தேக்கு எண்டு கார்டு போட்டுவிட்டது. தவிர, 110சிசி செக்மென்ட்டிலிருந்து யமஹா வெளியேற முடிவெடுத்திருப்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். மற்றபடி, தேவையான அம்சங்களுடன் பிராக்டிக்கலான பைக்காகத் திகழும் ஸ்டார் சிட்டி ப்ளஸ், முன்பைவிட அதிக மக்களைச் சென்றடைவதற்கான சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது என்பதே நிதர்சனம்.