Published:Updated:

BS-6 டிவிஎஸ் அப்பாச்சி RTR 4V RT-Fi சீரிஸ் பைக்குகளில் என்ன ஸ்பெஷல்?

முன்பைவிட 3,000 - 9,000 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதால், அதை ஈடுகட்டும் வகையில் புதிய சிறப்பம்சங்களை, அப்பாச்சி RTR 4V RT-Fi சீரிஸ் பைக்கில் சேர்த்திருக்கிறது டிவிஎஸ்.

Apache RTR 160 4V RT-Fi
Apache RTR 160 4V RT-Fi ( TVS Motors )

அடுத்த ஆண்டு ஏப்ரல் 1, 2020 முதலாக, நாடெங்கும் BS-6 விதிகள் அமலுக்கு வருவது தெரிந்ததே. எனவே ஹீரோ, ஹோண்டா, ஜாவா, யமஹா என டூ-வீலர் நிறுவனங்கள் அதற்கேற்றபடி தமது தயாரிப்புகளை மேம்படுத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் டிவிஎஸ்-ஸும் தற்போது இணைந்திருக்கிறது. அப்பாச்சி RTR 160 4V RT-Fi, அப்பாச்சி RTR 200 4V RT-Fi ஆகிய மாடல்களை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த BS-6 அப்பாச்சிகளின் புக்கிங், டிவிஎஸ் டீலர்களில் ஏற்கெனவே தொடங்கிவிட்டன.

ஜாவா VS ராயல் என்ஃபீல்டு; BS-4 டீசல் VS BS-6 டீசல்; உயரமானவர்களுக்கான பைக் எது? #MotorGuidance

கலர் ஆப்ஷன் மற்றும் விலை

Racing Red, Metallic Blue, Knight Black ஆகிய நிறங்களில் வந்துள்ள அப்பாச்சி RTR 160 4V RT-Fi பைக்கின் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலைகள், முறையே 1,02,250 ரூபாய் (பின்பக்க டிரம் பிரேக்) மற்றும் 1,05,250 ரூபாய் (பின்பக்க டிஸ்க் பிரேக்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. BS-4 EFi வெர்ஷனைவிட 2,944 ரூபாய் அதிக விலையில் BS-6 RT-Fi டிஸ்க் மாடல் வந்திருக்கிறது; இதுவே BS-6 RT-Fi டிரம் மாடல் என்றால், அது BS-4 டிரம் கார்புரேட்டர் வெர்ஷனைவிட 8,194 ரூபாய் அதிகரித்திருக்கிறது! Gloss Black, Pearl White எனும் கலர்களில் கிடைக்கும் அப்பாச்சி RTR 200 4V RT-Fi பைக்கின் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை 1,26,500 ரூபாய் ஆகும். இது BS-4 SmartXonnect கார்புரேட்டர் வெர்ஷனைவிட 9,065 ரூபாய் கூடுதல் விலையில் வந்துள்ளது.

வசதிகள் மற்றும் அளவுகள்

Apache RTR 160 4V RT-Fi
Apache RTR 160 4V RT-Fi
TVS Motors

முன்பைவிட 3,000 - 9,000 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதால், அதை ஈடுகட்டும் வகையில் புதிய சிறப்பம்சங்களை, அப்பாச்சி RTR 4V RT-Fi சீரிஸ் பைக்கில் சேர்த்திருக்கிறது டிவிஎஸ். அதன்படி Race Tuned ஃப்யூல் இன்ஜெக்‌ஷன், ரேஸ் கிராஃபிக்ஸ், Claw Position Lamp உடனான LED ஹெட்லைட், ஏரோடைமிக்கான Claw ரியர் வியூ மிரர்கள், Wave Bite Key, Feather Touch எலெக்ட்ரிக் ஸ்டார்ட், குறைவான வேகத்தில் இன்ஜினின் சீரான இயக்கத்துக்கு வழிவகுக்கும் GTT மோடு ஆகியவை, BS-6 160சிசி மற்றும் 200சிசி மாடல்களுக்கும் பொதுவானவை. இதனுடன் RTR 200 4V RT-Fi மாடலில், பின்பக்கத்தில் ரேடியல் டயர் வழங்கப்பட்டிருப்பது பெரிய ப்ளஸ் (130/70 R17 M/C 62P). தவிர இது முன்பைவிட 65மிமீ குறைவான உயரம் (1,050மிமீ) மற்றும் 32மிமீ அதிக நீளம் (2,050மிமீ) என மாறியுள்ளதுடன், பைக்கின் எடையும் 2 கிலோ அதிகரித்துவிட்டது (153 கிலோ); இதுவே RTR 160 4V RT-Fi மாடலில் இருக்கும் சிங்கிள் பீஸ் சீட் புதிது. மேலும், இந்த பைக்கின் நீளம் 15 மி.மீ குறைந்திருந்தாலும், டிரம் பிரேக் மாடலின் எடை 3 கிலோ அதிகரித்துவிட்டது - 147 கிலோ (டிஸ்க் பிரேக் மாடலின் எடை அதே 149 கிலோதான்).

இன்ஜின் விவரங்கள்

Apache RTR 200 4V RT-Fi
Apache RTR 200 4V RT-Fi
TVS Motors
ஆட்டோமேட்டிக் ஹேட்ச்பேக்கில் எது பெஸ்ட்... நியோஸ் Vs ஸ்விஃப்ட்! #LongRead

அப்பாச்சியின் RTR 4V RT-Fi மாடல்களில் (160சிசி, 200சிசி) இருக்கும் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்களில் 4 வால்வ் - SOHC - ஆயில் கூலிங் - ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் - டபுள் பேரல் எக்ஸாஸ்ட் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் - Feather Touch எலெக்ட்ரிக் ஸ்டார்ட் ஆகிய அம்சங்கள் பொதுவானதாக உள்ளன. 200சிசி மாடலில் கூடுதலாக RT ஸ்லிப்பர் க்ளட்ச் உண்டு. இதன் BS-4 வெர்ஷனைப் போலவே BS-6 மாடலும் 20.5bhp பவரைத் தந்தாலும், அது வெளிப்படுத்தும் டார்க் முன்பைவிடக் குறைந்திருக்கிறது (BS-4: 1.86kgm@7,300rpm, BS-6: 1.68kgm@7,500rpm).

அப்பாச்சி RTR 200 4V RT-Fi பைக் 0 - 60கிமீ வேகத்தை முன்பைவிட 0.05 விநாடி விரைவாக (3.9 விநாடிகளில்) எட்டும் எனவும், அதிகபட்சமாக 127 கிமீ வரை செல்லும் (முன்பைவிட 1 கிமீ குறைவு) எனவும் டிவிஎஸ் தெரிவித்துள்ளது. ஆனால் BS-4 வெர்ஷனுடன் ஒப்பிட்டால், BS-6 மாடலின் கம்ப்ரஷன் ரேஷியோ & ஐடிலிங் ஆர்பிஎம் கொஞ்சம் மாறியிருக்கிறது. இது எந்தளவுக்கு இன்ஜின் சூட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இனிதான் தெரியும்.

Apache RTR 200 4V RT-Fi
Apache RTR 200 4V RT-Fi
TVS Motors
 டிவிஎஸ் அப்பாச்சி
டிவிஎஸ் அப்பாச்சி
TVS Motors

இதுவே 160சிசி மாடலைப் பொறுத்தவரை, பவர் மற்றும் டார்க் என இரண்டுமே கொஞ்சம் சரிவைச் சந்தித்துள்ளன. BS-4 வெர்ஷன் 16.8bhp@8,000rpm பவர் - 1.48kgm@6,500rpm டார்க் தந்தால், BS-6 மாடல் 16.02bhp@8,250rpm பவர் - 1.41kgm@7,250rpm டார்க்கை வெளிப்படுத்துகிறது.