Published:Updated:

19 பிரிமியம் டயர்களுடன் அறிமுகம்... டிவிஎஸ் யூரோகிரிப் பிராண்டு!

ஜீரோ டிகிரி ஸ்டீல் பெல்ட் ரேடியல் டயர்களும் இதில் அடங்கும் என்பதுடன், அவை 270 கிமீ வேகம் வரை பயணிக்கக் கூடியவை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியாவில் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான டயர்களின் உற்பத்தியில், டிவிஎஸ் ஸ்ரீசக்ரா லிமிடெட் நிறுவனம் முன்னணியில் இருக்கிறது. மாதந்தோறும் 2.8 மில்லியன் டயர்களைத் தயாரிக்கும் இந்த நிறுவனம், 70-க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு டயர்களை ஏற்றுமதியும் செய்கிறது. மேலும், நவீன மாற்றங்களுக்கு ஏற்றபடி 2/3 சக்கர வாகன டயர்களின் தொழில்நுட்பத்தில் ஏற்படும் மாற்றங்களைச் செய்தும், புதிய வகை டயர்களையும் ஒருசேர விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது டிவிஎஸ் ஸ்ரீசக்ரா. இந்த நிலையில் தற்போது ரேஸர்கள் மற்றும் மில்லினியல்களைக் குறிவைத்து, யூரோகிரிப் பிராண்டின் கீழ் 19 பிரீமியம் டயர்களை இந்த நிறுவனம் சென்னையில் அறிமுகம் செய்துள்ளது. ஜீரோ டிகிரி ஸ்டீல் பெல்ட் ரேடியல் டயர்களும் இதில் அடங்கும் என்பதுடன், அவை 270 கிமீ வேகம் வரை பயணிக்ககூடியவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான யூரோ கிரிப் டயர்களைப் பொறுத்தவரை, அவை உயர் வேகங்களில் முன்பைவிட அதிகமான ரோடு கிரிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TVS EuroGrip
TVS EuroGrip
Chennai Event

நிகழ்ச்சியில் பேசிய டிவிஎஸ் ஸ்ரீசக்ரா லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் விஜயராகவன், ``இருசக்கர வாகனச் சந்தையில் வேகமாகவும் நம்பிக்கையளிக்கும் விதமாகவும் இந்தியா வளர்ந்துவருகிறது. எனவே, இளைய தலைமுறை வாகன ஓட்டுநர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், யூரோகிரிப் டயர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதை அறிமுகம் செய்வதில், நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். தொடர்ந்து பல முன்னேற்றங்களை இந்தத்துறையில் தருவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

டிவிஎஸ் ஸ்ரீசக்ரா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீனிவாசவரதன் பேசும்போது, ``1984-ம் ஆண்டிலிருந்து இன்று வரை எங்களின் தயாரிப்புகளைப் பலவழிகளில் முன்னேற்றம் செய்துகொண்டே வருகிறோம். இதனாலேயே 30 ஆண்டுகளுக்கும் மேலாக, இருசக்கர வாகனங்களின் டயர் தயாரிப்பில் உலகளவில் முன்னணி நிறுவனமாக இருக்கிறோம். வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களை எப்போதும் புரிந்துகொண்டிருக்கிறோம். தற்போதைய தலைமுறை வாகனப் பிரியர்கள் எதிர்பார்க்கிற வடிவமைப்பு, தரம், செயல்திறன் என அனைத்து அம்சங்களையும் யூரோகிரிப் கொண்டுள்ளது” என்றார்.

TVS EuroGrip
TVS EuroGrip
Chennai Event

டிவிஎஸ் ஸ்ரீசக்ரா லிமிடெட் நிறுவனத்தின் செயலாக்கத் துணைத்தலைவர் மாதவன் ``இளைய தலைமுறையினரை நாங்கள் தொடர்ச்சியாகக் கவனித்துவருகிறோம். த்ரில்லை விரும்புபவர்களாக, சாகசங்களில் ஈடுபடுபவர்களாக, பயணங்களை அதிகம் விரும்புபவர்களாக உள்ளனர். மேலும், பயணத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் அவர்கள் அனுபவிக்க ஆசைப்படுகிறார்கள். எனவேதான் Outlive, Out Perform, Outdo என்பதை மைய சிந்தனையாகக் கொண்டே, புதிய யூரோகிரிப் டயர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் சாலையின் நிலை எப்படி இருந்தாலும், அதைச் சமாளித்துப் பயணிக்கும் வகையில் எங்களின் டயர்கள் இருக்கும். யூரோகிரிப் அணிவரிசையின் மூலமாக, வாடிக்கையாளர்களை எதிர்காலத்துக்கு வழிகாட்டி அழைத்துச் செல்லத் தயாராக இருக்கிறோம்” என்றார். உலகின் பல நாடுகளிலிருந்தும், டயர் துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு