Published:Updated:

7.5 விநாடிகளில் 0 - 100 கி.மீ வேகம்... UltraViolette F77 எலெக்ட்ரிக் பைக்கில் என்ன ஸ்பெஷல்?

Ultraviolette F77
Ultraviolette F77 ( Autocar India )

200-250சிசி பைக்குகளுக்கு இணையான பர்ஃபாமென்ஸுடன், ஓட்டுதல் அனுபவத்தையும் தர வேண்டும் என்ற நோக்கத்தில், F77 எலெக்ட்ரிக் பைக்கைத் தயாரித்துள்ளது, UltraViolette F77.

பெங்களூரைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் UltraViolette ஆட்டோமோட்டிவ் எனும் ஸ்டார்ட்-அப் நிறுவனம், F77 எனும் எலெக்ட்ரிக் பைக்கை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. `இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக்' என்ற பெருமையைப் பெற்றிருக்கும் F77-ல், எடை குறைவான அதே சமயம், High Density லித்தியம் ஐயன் பேட்டரிகள் (3) பயன்படுத்தப்பட்டுள்ளன. UltraViolette ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தில் டிவிஎஸ் நிறுவனம் முதலீடு செய்திருப்பதிலிருந்தே (25% பங்குகள் அவர்கள் வசம்), இந்த எலெக்ட்ரிக் பைக்கின் திறனைப் புரிந்துகொள்ளலாம். இதன் புக்கிங் ஏற்கெனவே தொடங்கிவிட்டிருந்தாலும், அக்டோபர் 2020 முதலாகத்தான் டெலிவரிகள் ஆரம்பமாகும் எனத் தகவல் வந்திருக்கிறது. 3-3.25 லட்ச ரூபாய் ஆன்-ரோடு விலையில் வரப்போகும் UltraViolette F77, Lightning - Shadow - Laser என 3 வேரியன்ட்களில் கிடைக்கிறது. Panniers, க்ராஷ் கார்டு, வைஸர், Portable ஃபாஸ்ட் சார்ஜர் போன்ற அக்ஸசரிகளையும் கூடுதலாக வாங்க முடியும்.

டிசைன் மற்றும் மெக்கானிக்கல் பாகங்கள்

Ultraviolette F77
Ultraviolette F77
Autocar India

இது, வழக்கமான கம்யூட்டர் அல்ல... பர்ஃபாமன்ஸ் பைக் என்பது, F77-யைப் பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்துவிடுகிறது. ஏற்கெனவே, நம் நாட்டில் சில நிறுவனங்கள் பிராக்டிக்கலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைசெய்கின்றன என்றாலும், அவை எதுவுமே பர்ஃபாமன்ஸில் பெரிதாக சோபிக்காதது முரண். எனவே, 200-250சிசி பைக்குகளுக்கு இணையான பர்ஃபாமன்ஸுடன், ஓட்டுதல் அனுபவத்தையும் தர வேண்டும் என்ற நோக்கத்தில் F77 எலெக்ட்ரிக் பைக்கைத் தயாரித்துள்ளது UltraViolette F77. இதன் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி அமைப்பு ஆகியவை சேஸியிலேயே இணைக்கப்பட்டுள்ளன. மற்றபடி USD ஃபோர்க் - Preload Adjustable மோனோஷாக், Cast அலாய் வீல்கள், Bybre டிஸ்க் பிரேக்ஸ் (முன்: 320மிமீ, பின்: 230மிமீ), டூயல் சேனல் ஏபிஎஸ், Steel-Braided பிரேக் லைன், 17 இன்ச் ரேடியல் டியூப்லெஸ் டயர்கள் (முன்: 110/70 R17, பின்: 150/60 R17) என மெக்கானிக்கல் பாகங்கள், வழக்கமான பைக்குகளில் இருப்பவையேதான். 800மி.மீ சீட் உயரம் ஓகே.

பர்ஃபாமென்ஸ் மற்றும் தொழில்நுட்பம்

F77 Electric Bike
F77 Electric Bike
Ultraviolette

UltraViolette F77 எலெக்ட்ரிக் பைக்கில் இருக்கும் 25kW எலெக்ட்ரிக் மோட்டார், 33.5bhp@2,250rpm பவர் மற்றும் 9kgm டார்க்கைத் தருகிறது. இது அப்படியே, பின்பக்க சக்கரத்துக்கு X-Ring Chain Sprocket வழியே சாலைக்கு வரும் (முன்: 14T, பின்: 46T). வாகனத்தை ஸ்டார்ட் செய்த மாத்திரத்திலேயே மொத்த பவரும் கிடைக்கும் என்பதால், எதிர்பார்த்தபடியே இந்த பைக்கின் பர்ஃபாமன்ஸ் அதிரடியாகவே இருக்கிறது. 0-60கி.மீ வேகத்தை 2.5 விநாடிகளிலும், 0-100கி.மீ வேகத்தை 7.5 விநாடிகளிலும் எட்டிப்பிடிக்கும் UltraViolette F77, 147கி.மீ வேகம் வரை செல்கிறது; Eco, Pro, Insane என 3 ரைடிங் மோடுகள் இருப்பது ப்ளஸ். Insane மோடில் எதிர்பார்த்தபடியே அதிக பர்ஃபாமன்ஸ் கிடைப்பதுடன், பைக்கின் ரேஞ்சிலும் சரிவு இருக்கும். iOS/ஆண்ட்ராய்டு கனெக்ட்டிவிட்டிக்காக, ஒரு மொபைல் ஆப் உள்ளது. 5 இன்ச் TFT இன்ஸ்ட்ரூமென்ட் பேனலை, ஸ்விட்ச் கியரில் இருக்கும் பட்டன்கள் வாயிலாகக் கன்ட்ரோல் செய்யலாம். ஏத்தர் S450 போல இது டச் ஸ்க்ரீனைக் கொண்டிருக்காதது நெருடல். Geofencing, ஆட்டோமேட்டிக் பேட்டரி Compartment Ejection, Remote ஸ்டார்ட்-ஸ்டாப், Error Reporting, Nine-DOF Axis IMU போன்ற தொழில்நுட்பங்கள் இருப்பது செம.

பேட்டரி மற்றும் சார்ஜிங் திறன்

F77 Battery Pack
F77 Battery Pack
Autocar India

ஃபுல் ஃபேரிங்கில் இருக்கும் Tray போன்ற அமைப்பில், UltraViolette F77 பைக்கின் 4.2kWh லித்தியம் - ஐயன் பேட்டரி செட்-அப் (3) இடம்பெற்றிருக்கிறது. இது, ஒரு பட்டனை அழுத்தினாலே திறப்பது, பார்க்க செம ஸ்டைலாக இருக்கிறது. ஒரு பேட்டரியின் எடை வெறும் 8.5 கிலோதான் என்பதால், ஒட்டுமொத்த பேட்டரி அமைப்பின் (3) எடையே 25.5 கிலோதான். இவை IP67 ரேட்டிங் பெற்றவை என்பது வரவேற்கத்தக்க அம்சம். இதற்காக காப்புரிமைக்கு விண்ணப்பித்திருப்பதாக UltraViolette நிறுவனம் தெரிவித்துள்ளது. பேட்டரிகள் காம்பேக்ட்டாக இருப்பதால், ஒட்டுமொத்த பைக்கின் எடையே 158 கிலோதான்! பேட்டரியின் நம்பகத்தன்மைக்காக, கரடுமுரடான சாலைகளில் பைக்கை அந்த நிறுவனம் டெஸ்ட் செய்திருக்கிறது. இதற்கெனப் பிரத்யேகமான புராஸசர், மெமரி, GPS Module, வயர்லெஸ் Communication ஆகியவை உண்டு.

TFT Instrument Panel
TFT Instrument Panel
Autocar India
2.5 லட்சத்துக்கு 250 சிசி ஸ்க்ராம்ப்ளர் பைக்.... பெனெல்லியின் லியோன்சினோவில் என்ன ஸ்பெஷல்?

3 பேட்டரிகளும் சேரும்போது, சிங்கிள் சார்ஜில் 130-150கி.மீ தூரம் வரை செல்லும் எனத் தகவல் வந்திருக்கிறது. வழக்கமான சார்ஜரைப் பயன்படுத்தும்போது 5 மணிநேரம் தேவைப்பட்டால், ஃபாஸ்ட் சார்ஜரினால் (ஆப்ஷனல்) இது ஒன்றரை மணிநேரமாகக் குறைந்துவிடுகிறது! 3kW Portable `Powerbank’ வாங்கிக் கொண்டால், 80% பேட்டரி பவரை வெறும் 50 நிமிடங்களிலேயே ஏற்றிக்கொள்ளலாம். பேட்டரிகளை வீட்டிலேயே சார்ஜ் செய்துகொள்ள வேண்டுமானால், அதற்கெனத் தனியாக ஒரு Charging Pod விற்பனை செய்யப்படுகிறது. முதற்கட்டமாக பெங்களூருவில் அறிமுகமாகப் போகும் இந்த F77 எலெக்ட்ரிக் பைக்குக்கு என ஸ்பெஷலாக, Ultraviolette Energy Network எனும் சார்ஜிங் ஸ்டேஷன்களை, நிறுவும் முடிவில் Ultraviolette நிறுவனம் இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு