Published:Updated:

BS-6 யமஹா FZ-S V3.0 பைக்கில் என்ன ஸ்பெஷல்?

எதிர்பார்த்தபடியே இன்ஜினில் கணிசமான மாற்றம் தெரிகிறது. மற்றபடி BS-4 மாடலுடன் ஒப்பிடும்போது, BS-6 வெர்ஷனின் சைஸ் - வசதிகள் ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை.

FZ-S V3.0 BS-6
FZ-S V3.0 BS-6 ( Yamaha India )

ஹோண்டா ஆக்டிவா 125 BS-6, ஹீரோ ஸ்ப்ளெண்டர் i-ஸ்மார்ட் 110 என டூ-வீலர் நிறுவனங்கள் நம் நாட்டில் BS-6 வாகனங்களைக் களமிறக்கத் தொடங்கியிருக்கும் சூழலில், யமஹாவும் அந்த வரிசையில் தற்போது இணைந்திருக்கிறது. முறையே 1,00,199 ரூபாய் மற்றும் 1,02,199 ரூபாய் விலையில் (சென்னை எக்ஸ்-ஷோரூம்) FZ V3.0 மற்றும் FZ-S V3.0 ஆகிய 150சிசி நேக்கட் ஸ்ட்ரீட் பைக்குகளின் BS-6 வெர்ஷன்களைத் தடாலடியாக அந்த ஜப்பானிய நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது.

FZ-S V3.0 BS-6
FZ-S V3.0 BS-6
Yamaha India

FZ-S V3.0 மாடலில் புதிதாக Metallic Red மற்றும் Dark Knight (வழக்கத்தைவிட 1,500 ரூபாய் அதிகம்) கலர் ஆப்ஷன்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பெட்ரோல் டேங்க்கின் அளவு, 12.8 லிட்டரிலிருந்து 13 லிட்டராக அதிகரித்துள்ளது; எதிர்பார்த்தபடியே இன்ஜினில் கணிசமான மாற்றம் தெரிகிறது. மற்றபடி BS-4 மாடலுடன் ஒப்பிடும்போது, BS-6 வெர்ஷனின் சைஸ் - வசதிகள் ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, கியர் இண்டிகேட்டர் - ஆயில் கூலர் போன்ற சில சிறப்பம்சங்களை விலை அதிகமான FZ-S V3.0 பைக்கில் யமஹா சேர்த்திருக்கலாம்.

இந்த இரு மாடல்களிலும் இருக்கும் 149சிசி Blue Core Fi இன்ஜின், அதே 57.3 Bore & 57.9 Stroke அளவுகளையே கொண்டிருக்கிறது. 2 வால்வ் செட்-அப், 5 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஏர் கூலிங் என மற்ற விஷயங்கள் அதேதான். ஆனால் Compression Ratio, 9.5:1-ல் இருந்து 9.6:1 ஆக உயர்ந்திருக்கிறது. ஏற்கெனவே போட்டியாளர்களைவிடப் பவர் குறைவு என்ற சூழலே இருக்கும் நேரத்தில், BS-6 வெர்ஷனின் பவர் இன்னும் குறைந்துவிட்டது!

FZ-S V3.0 BS-6
FZ-S V3.0 BS-6
Yamaha India

BS-4 மாடல் 13.2bhp@8,000 rpm பவர் மற்றும் 1.3kgm@6,000rpm டார்க்கை வெளிப்படுத்தும் நிலையில், BS-4 மாடல் 12.4bhp@7,250 rpm பவர் மற்றும் 1.4kgm@5,500rpm டார்க்கைத் தருகிறது. குறைவான ஆர்பிஎம்மில் அதிக டார்க் கிடைப்பது ப்ளஸ் என்றாலும், அதிகபட்ச பவர் குறைந்திருப்பது பெரிய மைனஸ். BS-4 மாடலைவிட 2,500 ரூபாய் அதிக விலையில் BS-6 வெர்ஷன் வெளிவந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, ஃபேஸினோ மற்றும் YZF-R15 V3.0 ஆகிய வாகனங்களின் BS-6 மாடல்கள் அறிமுகமாகும் என நம்பலாம்.