ஒன்ப்ளஸ் 10 Pro
வசதிகள்
6.7" இன்ச் 120 Hz Fluid AMOLED டிஸப்ளே
ஸ்நாப்ட்ராகன் 8 ஜென் 1 புராசஸர்
80W SUPERVOOC + 50W AIRVOOC சார்ஜிங்
ஆக்ஸிஜன் OS ஆண்ட்ராய்டு 12
5,000 mAh பேட்டரி
48 MP (சோனி IMX789) + 50 MP (JN1) + 8 MP ரியர் கேமரா
32 MP (சோனி IMX 615)செல்ஃபி கேமரா
ப்ளஸ்
புதிய டிசைன்
அதிவேகமான சார்ஜிங்
அட்டகாசமான பெர்ஃபாமன்ஸ்
மைனஸ்
8K வீடியோக்கள் ஷூட் செய்யும்போது சில சமயம் சூடாகிறது.
IP ரேட்டிங் இல்லை.
ஒன்லைன் ரிவ்யூ
முந்தைய ப்ரீமியம் மாடலான ஒன்ப்ளஸ் 9 Proவைவிட முற்றிலும் மாறுபட்ட டிசைன், சிப்செட், கேமரா என பல வகைகளில் பிற நிறுவனங்களின் ப்ரீமியம் மாடல்களுடன் போட்டி போடுகிறது. மொபைலின் விலையும் பிற போட்டி மொபைல்களுடன் ஒப்பிட்டால் விலை சற்று குறைவுதான். சாம்சங், ஆப்பிள் மொபைல்கள் பயன்படுத்துபவர்களும் இனி ஒன் ப்ளஸ்ஸை நாடும் அளவுக்கு, இந்த மொபைல் பெர்ஃபாமன்ஸில் தூள் கிளப்புகிறது. அதே சமயம், கேமராவில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

iQOO 9 SE
வசதிகள்
6.62 " இன்ச் 120 Hz சூப்பர் AMOLED டிஸப்ளே
ஸ்நாப்ட்ராகன் 888 5G புராசஸர்
66W ஃபாஸ்ட் சார்ஜிங்
ஆண்ட்ராய்டு 12, ஃபன் டச் ஓஎஸ் 12
4,500 mAh பேட்டரி
48 MP + 13 MP + 2 MP ரியர் கேமரா
16 MP செல்ஃபி கேமரா
பிளஸ்
வேற லெவல் டிஸ்ப்ளே
நல்ல ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்
அதிவேக சார்ஜிங்
மைனஸ்
தேவையற்ற ஆப்ஸ்
IP ரேட்டிங் இல்லை.
ஒன்லைன் ரிவ்யூ
40,000 ரூபாய்க்குள் போன் வாங்க நினைப்பவர்கள் கண்ணை மூடிக்கொண்டு இந்த iQOO 9 SE-வை டிக் அடிக்கலாம். தேவையற்ற ஆப்கள் சில, போனில் ஓரமாக இருப்பது உங்களுக்குப் பிரச்னை இல்லை என்றால் இந்த செக்மென்ட்டில் இதுதான் உங்களுக்குச் சிறந்த போன்!விலை
8 GB RAM+ 128 GB ஸ்டோரேஜ் ~ ₹ 33,990
12 GB RAM+ 256 GB ஸ்டோரேஜ் ~ ₹ 37,990

Realme 9 5G Speed
வசதிகள்
6.6 இன்ச் 144Hz IPS LCS டிஸப்ளே
ஸ்நாப்ட்ராகன் 778G புராசஸர்
30W ஃபாஸ்ட் சார்ஜிங்
ஆண்ட்ராய்டு 11, ரியல்மீ UI 2.0
5,000 mAh பேட்டரி
48 MP + 2 MP + 2 MP ரியர் கேமரா
16 MP செல்ஃபி கேமரா
பிளஸ்
144 Hz டிஸ்ப்ளே
தரமான 5G புராசஸர்
நல்ல பேட்டரி & சார்ஜிங்
மைனஸ்
சுமாரான வீடியோ ரெக்கார்டிங்
தேவையில்லாத ஆப்ஸ்
அல்ட்ரா-வைடு கேமரா இல்லை
ஒன்லைன் ரிவ்யூ
சாதாரண ரியல்மீ 9 5G-ன் மேம்பட்ட வெர்ஷன்தான் இந்த ரியல்மீ 9 5G ஸ்பீட் எடிஷன். நல்ல ப்ராசஸர், 144 Hz டிஸ்ப்ளே என இந்த செக்மென்ட்டில் எதெல்லாம் இருக்க வேண்டுமோ, அதெல்லாம் இந்த போனில் இருக்கிறது. ஆனால், சுமாரான கேமரா, தேவையில்லாத ஆப்ஸ் என கோட்டை விடுகிறது. இது பிரச்னை இல்லை, நல்ல டிஸ்ப்ளேதான் முக்கியம் என நினைப்பவர்கள் நிச்சயம் இதை டிக் அடிக்கலாம்!HP LaserJet Tank PrintersRealme 9 5G Speedவிலை
6 GB RAM+ 128 GB ஸ்டோரேஜ் ₹19,999
8 GB RAM+ 128 GB ஸ்டோரேஜ் ₹22,999

ஒன்ப்ளஸ் 10 ProHP LaserJet Tank 1005 & 1020
வசதிகள்
5000 பக்கங்களுக்கான ப்ரீ ஃபில்டு டோனர்
15 நொடிகளில் ரீஃபில் செய்யக்கூடிய பேக்கேஜ்
600 X 600 DPI ரிசொல்யூசன்
HP ஸ்மார்ட் செயலி மூலம் மொபைலில் இருந்தே எளிதாக ப்ரின்ட் செய்யலாம்
50,000 பக்கங்கள் வரை குறைவான சர்வீஸ் செலவில் பிரச்னை தராத டிரம்
150 பேப்பர்களை வைக்கக் கூடிய அளவிலான ட்ரே
HP LaserJet Tank 2606
வசதிகள்
இரண்டு பக்கங்களிலும் அதிவேக ப்ரின்ட்டிங்
250 பேப்பர்களை வைக்கக்கூடிய பெரிய அளவிலான ட்ரே
மிகக் குறைவான செலவில் அட்டகாசமான குவாலிட்டி
5000 பக்கங்களுக்கான ப்ரீ ஃபில்டு டோனர்
ப்ளஸ்
அதிவேகமான ப்ரின்ட் அவுட்புட்
ஆப்பரேட் செய்வது எளிதாக இருக்கிறது.
மைனஸ்
கலர் ப்ரின்ட் இருந்திருக்கலாம்.
வெர்டிக்ட்
ஸ்கேன் செய்து ப்ரின்ட் செய்யும் சின்ன ப்ரின்டர் களில் அட்டகாசமான அவுட்புட் வேகத்துடன் வந்திருக்கிறது இந்த HP ப்ரின்டர்கள். டோனரின் மூலம் ரீஃபில் செய்வதும் மிகவும் எளிதாக இருக்கிறது. கலர் ப்ரின்ட் செய்யவேண்டிய தேவை உங்களுக்கு இருக்காது என்றால், 1005 பிரின்ட்டரை நீங்கள் தேர்வு செய்யலாம்.விலை
HP LaserJet Tank 1005 : ரூ.23,695
HP LaserJet Tank 1020 : ரூ.15,963
HP LaserJet Tank 2606 : ரூ.29,558விலை
8 GB RAM+ 128 GB ஸ்டோரேஜ் ₹66,999
12 GB RAM+ 256 GB ஸ்டோரேஜ் ₹71,999ரேட்டிங்:
