Published:Updated:

மிஸ்டு கால் மூலமும் ஆன்லைன் திருட்டு! உஷார் மக்களே!

மிஸ்டு கால் திருட்டு!
News
மிஸ்டு கால் திருட்டு! ( VCC Live )

ஆன்லைன் ஃபிராடு குறித்து நாம் அப்டேட் ஆகி அலர்ட் ஆவதற்குள், ஆன்லைன் ஃபிராடு அப்டேட் ஆகிவிடுகிறது. தற்போது வரை லிங்குகள், OTP மூலம் ஆன்லைன் கொள்ளையில் ஈடுபட்டு வந்தவர்கள், லேட்டஸ்ட்டாக மிஸ்டு கால் மூலமும் பணத்தைக் கொள்ளை அடிக்கத் தொடங்கி விட்டார்கள்.

Published:Updated:

மிஸ்டு கால் மூலமும் ஆன்லைன் திருட்டு! உஷார் மக்களே!

ஆன்லைன் ஃபிராடு குறித்து நாம் அப்டேட் ஆகி அலர்ட் ஆவதற்குள், ஆன்லைன் ஃபிராடு அப்டேட் ஆகிவிடுகிறது. தற்போது வரை லிங்குகள், OTP மூலம் ஆன்லைன் கொள்ளையில் ஈடுபட்டு வந்தவர்கள், லேட்டஸ்ட்டாக மிஸ்டு கால் மூலமும் பணத்தைக் கொள்ளை அடிக்கத் தொடங்கி விட்டார்கள்.

மிஸ்டு கால் திருட்டு!
News
மிஸ்டு கால் திருட்டு! ( VCC Live )

ஆன்லைன் ஃபிராடு குறித்து நாம் அப்டேட் ஆகி அலர்ட் ஆவதற்குள், ஆன்லைன் ஃபிராடு அப்டேட் ஆகிவிடுகிறது. தற்போது வரை லிங்குகள், OTP மூலம் ஆன்லைன் கொள்ளையில் ஈடுபட்டு வந்தவர்கள், லேட்டஸ்ட்டாக மிஸ்டு கால் மூலமும் பணத்தைக் கொள்ளை அடிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

அதிரவைக்கும் ஆன்லைன் மோசடி!
அதிரவைக்கும் ஆன்லைன் மோசடி!

ஆம்! டெல்லியில் தொழிலதிபர் ஒருவர் தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.50 லட்சத்தைத் திருடிவிட்டார்கள் என்று சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். தனக்கு ஏதோவொரு தொலைபேசி எண்ணிலிருந்து இரண்டு முறை மிஸ்டு கால் வந்ததாகவும், அந்த போன் காலை ஏற்று பேசியபோதுதான் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

ஓடிபி (OTP) உள்ளிட்ட எந்த விபரமும் பகிரப்படாமல் நடந்த இந்தக் கொள்ளை போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருமுறை மிஸ்டு கால் வந்ததைத் தொடர்ந்து அந்த நம்பருக்கு திரும்ப அழைத்துப் பேசியுள்ளார். அப்போதுதான் இந்த நூதனமான ஆன்லைன் கொள்ளை நடந்துள்ளது. செல்போனை ஹேக் செய்து இந்தக் கொள்ளை நடத்தப்பட்டதா என்ற கோணத்திலும் டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மொபைல் போன் ஜாக்கிரதை!
மொபைல் போன் ஜாக்கிரதை!

RTGS மூலம், ஒருவருக்கு ரூ.12 லட்சமும், இன்னொரு நபருக்கு ரூ.4.6 லட்சமும் மாற்றப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இந்தச் சம்பவம் குறித்து ஐஏஎன்எஸ்ஸும் விசாரணை செய்து வருகிறது.

இப்படி தொடர்ந்து நடந்துவரும் ஆன்லைன் ஃபிராடுகளால் பலருக்கும் செல்போன் என்றாலே பயமாக மாறி வருகிறது. இதனால் ஒவ்வொரு முறை செல்போன் பயன்படுத்தும்போதும் ஜாக்கிரதையாக இருங்கள்.