Published:Updated:

ஆப்பிள், சாம்சங், அமேசான், சோனி, எல்.ஜி நிறுவனங்களின் எதிர்காலத் தயாரிப்புகள் என்னென்ன?

Apple
News
Apple

ஆப்பிள், சாம்சங், அமேசான், சோனி மற்றும் எல்.ஜி. ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் காப்புரிமை பெற்ற புதிய வடிவமைப்புகள் என்னென்ன?

Published:Updated:

ஆப்பிள், சாம்சங், அமேசான், சோனி, எல்.ஜி நிறுவனங்களின் எதிர்காலத் தயாரிப்புகள் என்னென்ன?

ஆப்பிள், சாம்சங், அமேசான், சோனி மற்றும் எல்.ஜி. ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் காப்புரிமை பெற்ற புதிய வடிவமைப்புகள் என்னென்ன?

Apple
News
Apple

வழக்கமாக எல்லா நிறுவனங்களும் தாம் உருவாக்கும் தயாரிப்புகளில் இடம்பெறும் புதிய ஐடியாக்களை வெளியிடுவதற்கு முன்பே காப்புரிமை (Patent) பெற்றுவிடுவார்கள். இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை. அவர்கள் பெற்றுள்ள சில வடிவமைப்புக்கான காப்புரிமைகள், அந்த நிறுவனம் என்னவிதமான கேஜெட்டை தயாரிக்கிறது என ஒரு அனுமானத்தை நமக்கு கொடுக்கும். அந்த வகையில் ஆப்பிள், சாம்சங், அமேசான், சோனி மற்றும் எல்.ஜி. ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் காப்புரிமை பெற்ற புதிய வடிவமைப்புகள் என்னவென்பதை பார்க்கலாம்.

ஆப்பிள்

apple
apple
tech xplore

சமீபத்தில் ஆப்பிள், ஆடியோ சிக்னல்களைப் பிரித்து ஒரே இடத்தில் இருந்து வருவதுபோல இல்லாமல் பல இடங்களில் இருந்து வருவது போன்ற அமைப்புடைய கேட்ஜெட் ஒன்றுக்கு காப்புரிமை பெற்றுள்ளது. இதனால் கூடிய விரைவில் ஆப்பிளிடம் மேம்படுத்தப்பட்ட ஆடியோ டிவைஸ் ஒன்றை எதிர்பார்க்கலாம். ஹோம்பாடின் வரவிற்குப் பிறகு ஆடியோ தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக ஆப்பிள் நிறைய சோதனை முயற்சிகளை செய்து வருகிறது, அவற்றுள் ஒன்றாக இந்த தொழில்நுட்பமும் இருக்கலாம்.

அமேசான்

Amazon Touchless Scanning System patent
Amazon Touchless Scanning System patent
dailymail.co.uk

`Touchless scanning System' என்னும் தொழில்நுட்பத்திற்கான காப்புரிமையை பதிவு செய்துள்ளது அமேசான். அமேசான் கடைகளில் நுழையும் போதும், பொருட்களை வாங்கும்போதும் நமது கைகளை ஸ்கேன் செய்வதன் மூலம் நம்மை அடையாளம் காண்பதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது அமேசான். இதனை வருங்காலத்தில் அமேசான் பயன்படுத்துமா எனத் தெரியவில்லை. ஆனால் இதே போன்றதொரு தொழில்நுட்பத்தை அதன் மற்றொரு நிறுவனமான Whole Food-ல் சோதனை முயற்சியாகப் பயன்படுத்தி வருகிறது அமேசான்.

சோனி

ப்ளேஸ்டேஷன் 5-ன் வெளியீட்டுக்காக தீவிரமாக உழைத்துக் கொண்டிருக்கும் சோனி, காப்புரிமை பெற்றிருப்பது ப்ளே ஸ்டேஷனிற்கான கன்ட்ரோலரைத்தான். இதற்கு முன் இருந்த PS4 கன்ட்ரோலரில் இருந்து இந்த கன்ட்ரோலரில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என காப்புரிமை சொல்கிறது. அடுத்து வரவிருக்கும் PS5 உடன் இந்த கன்ட்ரோலரை சோனி களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

sony PS4 controller
sony PS4 controller
wikimedia commons

சாம்சங்

samsung expandable display
samsung expandable display
patentlymobile.com

`Expandable Mobile Display'-விற்காக தனது காப்புரிமையை பதிவு செய்துள்ளது சாம்சங். இதுவரை Foldable display மாடலை வெளியிட்டு வந்த சாம்சங், தற்போது Expandable display மாடலுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறது. தற்போது இருப்பது போன்ற அளவு மற்றும் விரிவுபடுத்தப்பட்ட அளவு என இரு அளவுகளில் இந்த மாடல் மொபைல்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும், என்ன மாதிரியான மாடலை சாம்சங் உருவாக்குகிறது என தெரியவில்லை. ஒருவேளை விரிவுப்படுத்தப்படும் வகையில் இருப்பின், கேம் பிரியர்கள் மற்றும் மொபைலில் படம் பார்ப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும் என எதிர் பார்க்கலாம்.

எல்.ஜி (LG)

LG Flexible Smartphone Case
LG Flexible Smartphone Case
ubergizmo.com

LG புதிதாக காப்புரிமை பெற்றிருப்பது `Flexible Smartphone display cover'-க்காக. LG தனது Foldable ஸ்மார்ட்போன் மாடலை தற்போதுதான் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் Foldable ஸ்மார்ட்போன்களுக்கான கவரை இன்னும் யாரும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. எனவே, LG ஸ்மார்ட் ஃபோனோடு சேர்த்து அதற்கான கேஸ்களையும் உருவாக்குகிறது. இதனை LG தன் Foldable ஸ்மார்ட் ஃபோன்களோடு சேர்த்து வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் முழுமையான வடிவமைப்பு எப்படியிருக்கும் என்பது அது வெளியான பின்பு தெரியும்.