Published:Updated:

``விரைவில் ட்விட்டரில் ஆடியோ, வீடியோ கால் பேசலாம்..." - எலான் மஸ்க் அறிவிப்பு!

எலான் மஸ்க், ட்விட்டர்

``ட்விட்டரில் உள்ள எவருக்கும் ஆடியோ மற்றும் வீடியோ சாட் செய்வதற்கான வசதிகள் விரைவில் வரும். இதன்மூலம் உங்களுடைய தொலைபேசி எண்ணைக் கொடுக்காமலே உலகில் எங்கிருந்தாலும் அவர்களோடு நீங்கள் பேசலாம்."

ட்விட்டரில் தொடர்ந்து பல மாற்றங்களைச் செய்து வரும் எலான் மஸ்க், கூடிய விரைவில் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்வதற்கான வசதிகள் ட்விட்டரில் ஏற்படுத்தப்படும் என்று செவ்வாய்க்கிழமையன்று அறிவித்துள்ளார்.

இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``ட்விட்டரில் உள்ள எவருக்கும் ஆடியோ மற்றும் வீடியோ சாட் செய்வதற்கான வசதிகள் விரைவில் வரும். இதன்மூலம் உங்களுடைய தொலைபேசி எண்ணைக் கொடுக்காமலே உலகில்  எங்கிருந்தாலும் அவர்களோடு நீங்கள் பேசலாம்.

ட்விட்டர்
ட்விட்டர்

ட்விட்டரில் தொடர்ந்து வெளியிடப்பட்ட கருத்து ஒன்றில், மெட்டாவால் இயக்கப்படும் வாட்ஸ்அப் மெசேஜிங் சேவையை நம்ப முடியாது என இருந்தது. ட்விட்டரின் இந்த மெசேஜிங் அம்சம், மெசஞ்சர், சிக்னல், டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட இலவச சேவைகளோடு போட்டியிடும்’’ என்று பதிவிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகக் கருதியபோதும், ப்ளூ டிக் போல இதற்கும் நிபந்தனைகள் ஏதேனும் இருக்குமோ எனப் பலரும் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்த சிறப்பம்சம் அறிமுகப்படுத்தும்போதே என்ன சிக்கல் உள்ளது என்பதை அறிய முடியும் எனப் பலரும் கமென்ட் செய்து வருகின்றனர்.