கட்டுரைகள்
Published:Updated:

பப்ஜி சிக்கன் டின்னர்... இனி இல்லை! #Explainer

பப்ஜி
பிரீமியம் ஸ்டோரி
News
பப்ஜி

தற்போது பப்ஜி தடைசெய்யப்பட்டிருப்பது முக்கியப் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

கேம்ஸ்... உலகளவில் வணிகத்திலும் சரி பொழுதுபோக்கு வடிவமாகவும் சரி சினிமாவுக்கு நிகரான அந்தஸ்தில்தான் வீடியோ கேம்ஸும் இருந்துவருகின்றன. ஆனால், இது இப்போதுதான். முன்பெல்லாம் தனி கேமிங் கன்சோல் அல்லது ஓரளவு புராசஸிங் பவர் உள்ள கம்ப்யூட்டர் இருந்தால்தான் நல்ல வீடியோ கேம்ஸ் ஆட முடியும். கடந்த பத்து ஆண்டுகளில் இது அப்படியே தலைகீழாக மாறியிருக்கிறது. இணையமும் ஸ்மார்ட்போன்களும் எதிர்பாராத அளவு சடசடவென வளர்ந்திருக்கின்றன. நல்ல சுவாரஸ்யமான ஹை-கிராபிக்ஸ் கேம்களை இப்போது மொபைலிலேயே ஆட முடிகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்படிப் பல கேம்கள் மொபைல்களில் ஹிட் அடித்திருந்தாலும் PUBG அளவுக்குத் தாக்கத்தை எந்த கேமுமே ஏற்படுத்தவில்லை.

பப்ஜி சிக்கன் டின்னர்... இனி
இல்லை! #Explainer


இதனால்தான் தற்போது பப்ஜி தடைசெய்யப்பட்டிருப்பது முக்கியப் பேசுபொருளாக மாறியிருக்கிறது. தடையைப் பற்றிப் பார்ப்பதற்கு முன், பப்ஜி பற்றிய சுவாரஸ்யங்களைத் தெரிந்துகொள்வோம். பிரண்டன் கிரீன்... அயர்லாந்தைச் சேர்ந்த இவர்தான் பப்ஜியின் வெற்றிக்குப் பின்னிருக்கும் மிக முக்கிய மனிதர். சின்னச் சின்னதாக கேம் செய்து கொண்டிருந்தவருக்கு ஒரு கொரிய நிறுவனம் ஆதரவளிக்க, உருவான கேம்தான் PUBG.

பப்ஜி சிக்கன் டின்னர்... இனி
இல்லை! #Explainer


பிரண்டனுக்கு கேமிங் சைக்காலஜி அத்துப்படி. ஒவ்வொரு கேமரும், எளிதில் ஜெயிக்க முடியாத, செம திரில்லான கேம்களையே விளையாட விரும்புகிறார் என்பதை அறிந்து அந்த மனநிலைக்குத் தீனிபோடும் விஷயங்களை ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து பப்ஜியில் சேர்த்தார். அதை வெற்றிகரமாகச் செய்திருப்பதால்தான் இளைஞர்களின் பேவரிட் பாஸ் டைமாக உருவெடுத்திருக்கிறது பப்ஜி.

பப்ஜி சிக்கன் டின்னர்... இனி
இல்லை! #Explainer

அப்படி என்ன பப்ஜியில் சுவாரஸ்யம்?

பப்ஜி ஹிட்டடித்ததற்கு முக்கிய காரணம் அதிலிருக்கும் Battle Royale மோடு. ஒரு விமானம் 100 பேருடன் ஒரு தீவுக்குள் செல்லும். யாருக்கு எங்கு பிடிக்கிறதோ அங்கு பாராசூட்டுடன் குதித்துவிட வேண்டியதுதான். தரையிறங்கியவுடன் அருகிலிருக்கும் கட்டடங்களை நோக்கி ஓட வேண்டும். அங்குதான் ஆயுதங்கள் கொட்டிக்கிடக்கும். தேவையானதை எடுத்துக்கொண்டு ‘Safe Zone’ நோக்கி ஓட வேண்டும். நேரம் செல்லச் செல்ல இந்த ஜோன் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கிக்கொண்டே இருக்கும். ஜோனுக்குள் இல்லையென்றால் மரணம்தான். எதிரிகள் யார் கண்ணில் பட்டாலும் அவர்களை நாம் கொன்றாக வேண்டும். அசந்தாலும் நம்மை அவர்கள் கொன்று நம் ஆயுதங்களைத் தூக்கிவிடுவார்கள். கடைசிவரை யார் உயிர்பிழைக்கிறார்களோ அவர்கள் வெற்றியாளர்கள். இதுதான் Battle Royale போட்டி. இதில் நீங்கள் தனியாகவும் பங்குகொள்ளலாம். இல்லை, 4 பேர் கொண்ட குழுவாகவும் களமிறங்கலாம். இதுபோக 5 v 5 போன்று சில மல்டிபிளேயர் மோடுகளும் உண்டு.

பப்ஜி சிக்கன் டின்னர்... இனி
இல்லை! #Explainer

2017-ல் வெளியான புதிதிலேயே PC, Xbox, PS என அனைத்து முக்கிய கேமிங் பிளாட்பாரங்களிலும் உலகமெங்கும் ஹிட்டடித்தது PUBG. ஆனால், அப்போது இந்தியாவில் யாரும் இதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. 2018-ல் மொபைல் வெர்ஷன் வெளிவந்ததும்தான் இங்கு காட்டுத்தீயெனப் பற்றிக்கொண்டது கேம். நண்பர்களுடன் பேசிக்கொண்டு குழுவாக ஆட முடியும் என்பதுதான் இதன் முக்கிய ஹைலைட்.

பப்ஜி சிக்கன் டின்னர்... இனி
இல்லை! #Explainer

இன்று இந்தியாவில் மட்டும் மூன்று கோடிக்கும் அதிகமான பேர் பப்ஜி விளையாடுகின்றனராம். பப்ஜி டோர்னமென்ட்கள் நடத்தப்படுகின்றன; பப்ஜிகெனத் தனி வாட்ஸப் குரூப்கள் இருக்கின்றன. பப்ஜியை ஸ்ட்ரீம் செய்து ரசிகர்களைச் சம்பாதித்தவர்கள் இருக்கின்றனர். இந்தியாவில் பப்ஜியைச் சுற்றி ஒரு குட்டிப் பொருளாதாரமே இயங்குகிறது எனச் சொல்லலாம்.

பப்ஜி சிக்கன் டின்னர்... இனி
இல்லை! #Explainer

எந்த ஒரு விஷயத்தையும் போல பப்ஜிக்கும் நெகட்டிவ் பக்கம் உண்டு. ‘பப்ஜியும் ஒரு போதைதான்’ என்பது ஒருசாராரின் குற்றச்சாட்டு. 17 வயதுக்கு மேல் உள்ளவர்கள்தான் ஆட வேண்டும் என ரேட்டிங் கொடுக்கப்பட்டிருக்கும் கேம் பப்ஜி. ஆனால், 10 வயதுச் சிறுவனும் பப்ஜி ஆடுவதைப் பார்க்க முடிகிறது. பெற்றோர்கள் மற்ற விஷயங்களைப் போல கேம்களிலும் பிள்ளைகள் என்ன ஆடுகிறார்கள் என்பதைக் கண்காணிப்பது அவசியம். அதனால், பப்ஜி தடையினால் எல்லாம் மாறிவிடும் என யாரும் நினைத்துவிடாதீர்கள்!

பப்ஜி சிக்கன் டின்னர்... இனி
இல்லை! #Explainer

சரி... ஏன் இந்தத் தடை?

“130 கோடி இந்தியர்களின் தகவல் பாதுகாப்பை உறுதிசெய்யவே இந்த நடவடிக்கை” என்கிறது மத்திய அரசு. வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும் இவற்றுள் பெரும்பாலானவை சீன ஆப்கள். இது சீனா மீதான நேரடித் தாக்குதலாகவே பார்க்கப்படுகிறது.

பப்ஜி சிக்கன் டின்னர்... இனி
இல்லை! #Explainer

ஆனால் அரசிடத்தில் இந்த ஆப்கள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டன, எந்த விதிமுறைகளை மீறுகின்றன என எந்தத் தெளிவான விளக்கமும் இல்லை. சொல்லப்போனால் இந்தியாவில் இன்னும் தெளிவான டேட்டா பாதுகாப்பு சட்டங்களே நிறுவப்படவில்லை.

பப்ஜி சிக்கன் டின்னர்... இனி
இல்லை! #Explainer

பப்ஜி தடைசெய்யப்பட்ட இரண்டாவது நாளே FAU-G என்ற இந்திய கேம் வரவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. பப்ஜியின் தடை என்பது இதுபோன்ற வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்திருக்கிறது என்பது உண்மை. ஆனால் அதை பயன்படுத்த இந்திய நிறுவனங்கள் தொடர்ந்து தவறுகின்றன. இப்படிதான் ஜூமின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்ட போது ‘ஜியோ மீட்’ அறிமுகமானது. ஆனால், அது ஜூம் ஆப்பின் அப்பட்டமான காப்பி எனப் பலராலும் விமர்சிக்கப்பட்டது. FAU-G என்ற பெயரே காப்பி அடித்ததுபோல இருக்கையில் கேம் எப்படி இருக்குமோ?

பப்ஜி சிக்கன் டின்னர்... இனி
இல்லை! #Explainer
பப்ஜி சிக்கன் டின்னர்... இனி
இல்லை! #Explainer

இந்நிலையில் தடை எப்போதிலிருந்து அமலுக்கு வரும் எனத் தெரியாமல் படையப்பா சிவாஜி போல ‘கடைசியா ஒரே ஒரு சிக்கன் டின்னர்!’ என ஆசைதீர விளையாடி விடை கொடுக்கத் தயாராகிவிட்டனர் பப்ஜி ரசிகர்கள்.

தோசைக்கல் வெப்பன்... நூறாண்டு தடா!

PUBG பெயர் எப்படி வந்தது? பிரண்டன் தான் ஆடும் ராம்களில் ‘PlayerUnknown’ என்ற யூசர் நேம்மைத்தான் பயன்படுத்துவார். அதனால் கேமுக்கு PlayerUnknown’s Battlegrounds எனப் பெயர் வைத்தார்.

பப்ஜியில் வெற்றிபெற்றால் ‘வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்’ என்ற வாக்கியம் வரும். இது அந்த கேமுக்காக உருவாக்கப்பட்டதில்லை. 1930-ல் உலக நாடுகள் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தபோது மக்கள் அதிகம் பயன்படுத்திய வாக்கியமாம் இது. சூதாடுபவர்கள் வென்றால் இன்று இரவுக்கு சிக்கன் டின்னர் கிடைத்துவிடும் என இப்படிச் சொல்வார்களாம். இன்று பப்ஜியால் பாப்-கல்ச்சரில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது இந்த ‘சிக்கன் டின்னர்’. .

பப்ஜி சிக்கன் டின்னர்... இனி
இல்லை! #Explainer

பொதுவாக இதுபோன்ற ஷூட்டிங் கேம்களில் பல விதமான துப்பாக்கிகள் இருக்கும். ஆனால் பப்ஜியில் ஒரு சிறப்பு ஆயுதம் உண்டு. அது தோசைக்கல்(Pan). அதை வைத்து ஒரு அடியில் எதிரியை காலி செய்துவிடலாம்.

ஆன்லைன் கேம் என்பதால் பல பிளேயர்கள் ஏமாற்றி வெற்றிபெறப் பார்ப்பார்கள். அதனால் இந்த விஷயத்தில் ரொம்ப ஸ்ட்ரிக்ட் பப்ஜி. ஏமாற்றுவது தெரிந்தால் 100 வருடங்கள் வரை உங்களை ஆட விடாமல் தடைசெய்துவிடுவார்கள்.

அதிக வன்முறை இருப்பதாகவும், கலாசாரத்திற்கு எதிராக இருப்பதாகவும் சீனாவில் பப்ஜிக்குத் தடைவிதித்திருந்தார்கள். கடந்த ஆண்டுதான் சீன அரசு எதிர்பார்த்த மாற்றங்களுடன் ‘Game for Peace’ என வேறு பெயரில் அங்கு வெளிவந்தது பப்ஜி.

பிரபலங்கள் பலரும் பப்ஜி ஃபேன்ஸ்தான். தோனியெல்லாம் ப்ளைட்டுக்குக் காத்திருக்கும் நேரத்தில் ஒரு சிக்கன் டின்னர் அடித்துவிடுவாராம். அசுரன் ஷூட்டிங் சமயங்களில் தனுஷின் முக்கியப் பொழுதுபோக்காக பப்ஜிதான் இருந்திருக்கிறது.

அப்படியென்ன டேட்டா சேகரிக்கிறது PUBG?

ல்லா ஆப்களையும் போல பயனாளரின் அடிப்படைத் தகவல்களை மெயில் லாகின் வழியோ, ஃபேஸ்புக் லாகின் வழியோ பெறுகிறது. ஸ்டோரேஜ் அக்சஸ் மற்றும் மைக் அக்சஸ் அனுமதிகள் கேட்கிறது. லொகேஷன் அனுமதி கேட்பதில்லை. கிட்டத்தட்ட அனைத்து ஆப்களும் கேட்கும் அனுமதிகள், பெறும் தகவல்கள்தாம் இவை. இருந்தும் அமெரிக்கா, இந்தியா எனப் பல நாடுகளும் சீன டெக் நிறுவனங்களுக்கு எதிராகப் போர்தொடுப்பதற்கு முக்கியக் காரணம் அந்நாட்டில் இருக்கும் ஒரு சட்டம். அந்தச் சட்டத்தின்படி சீன அரசு நிர்பந்தித்தால் சேகரிக்கப்பட்ட டேட்டா அனைத்தையும் பகிர்ந்துகொள்ள வேண்டும் சீன நிறுவனங்கள். எல்லையில் பதற்றம் நிலவும் சூழலில் மொத்தப் பேரையும் சீனாவிலிருந்து கண்காணிக்க இந்த ஆப்கள் வாய்ப்பளிக்கின்றன என்றே தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில்தான் பப்ஜி அதன் பிரைவசி கொள்கைகளை மாற்றியிருந்தது. இந்தியப் பயனர்களின் தகவல் அனைத்தும் இந்திய சர்வர்களிலேயே சேகரிக்கப்படும் என்றது. இருந்தும் பப்ஜிக்கு இப்போது தடை விதிக்கப்பட்டிருக்கிறது!