இன்றைய காலத்தில் ஒருவருக்கு ஜிமெயில் அக்கவுன்ட் மிகவும் முக்கியமானதாக உள்ளது. ஸ்மார்ட்போனை சேவைகளை முழுமையாகப் பயன்படுத்த ஜிமெயில் கட்டாயமாக தேவைப் படுகிறது.
கூகுள் அக்கவுன்ட் மூலம் ஜிமெயில் மின்னஞ்சல் அனுப்புவது, கூகுள் போட்டோஸ், கூகுள் டிரைவ், கூகுள் வொர்க் ஸ்பேஸ், டாக்குமென்ட் எனப் பல்வேறு வசதிகளைப் பயன்படுத்த முடியும்.
கூகுள் அக்கவுன்ட் ஓப்பன் செய்ய கட்டணம் கிடையாது. இலவசமாகப் பயன்படுத்தலாம். பர்சனல் பயன்பாடு, பிசினஸ் பயன்பாடு எனத் தேவைக்கு ஏற்ப அக்கவுன்ட் ஓப்பன் செய்யலாம்.

எனவே, கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து, அதன் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமானோர் கூகுள் சேவைகளைப் பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் கணக்கு தொடங்கி, பயன்படுத்தாமல் இருப்பவர்களின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஜிமெயில் (Gmail) அக்கவுன்டுகளை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து பயன்படுத்தப்படாமல் இருந்தால், அவற்றை நிரந்தரமாக டெலிட் (Delete) செய்ய கூகுள் (Google) நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
செயல்படாமல் இருக்கும் பழைய அக்கவுன்டுகளில் பாதுகாப்பு குறைபாடு நிறையவே உள்ளது. 2-step verification set up கிடையாது என்பதால் ஹேக் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது அடையாளத் திருட்டுக்கு வழி வகுக்கும். அந்தக் கணக்கு யாரோ ஒருவரால் தவறாகப் பயன்படுத்தப்படும். என்பதால் கூகுள் இப்படி அறிவித்துள்ளது.
டெலிட் செய்வதற்கு முன் கூகுள் அந்த அக்கவுன்டுக்கு தொடர்ந்து மெயில் அனுப்பும். பழைய அக்கவுன்டை ஆக்டிவ் செய்ய டிசம்பர் 2023 வரை கால அவகாசம் வழங்கியுள்ளது. அதற்குள் பயன்படுத்தாமல் இருக்கும் அக்கவுன்டை ஆக்டிவ் செய்ய வேண்டும்.

ஆக்டிவ் செய்வது எப்படி..?
நீங்கள் இதுவரை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பயன்படுத்தவில்லை என்றால் கூகுளில் அந்த அக்கவுன்டை லாக்-இன் செய்யுங்கள். அதாவது, உங்கள் மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொல் (பாஸ்வேர்டு) கூகுளில் உள்ளீடு செய்து உங்கள் மெயிலுக்குச் செல்லுங்கள்.
சரிபார்ப்புக்காக கூகுள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறுங்கள். மற்றும் உங்கள் தொடர்பு எண் புதுப்பிக்க வேண்டும் என்றால் அதைப் பதிவு செய்யுங்கள். அடுத்ததாக உங்கள் அக்கவுன்டில் இருந்து ஜிமெயில் அனுப்பலாம், டிரைவ் பயன்படுத்தலாம். Google Search செய்யலாம். பிளே ஸ்டோர், யூடியூப் போன்றவற்றை பயன்படுத்தலாம். இதனால் அக்கவுன்ட் டெலிட் ஆகாமல் செயல்பாட்டில் இருக்கும்.