Published:Updated:

சட்டவிரோதமாகச் செயல்பட்ட 221 கடன் செயலிகள் நீக்கம்... சைபர் க்ரைம் நடவடிக்கை!

கடன் செயலிகள் நீக்கம்...

கடந்த 4 மாதங்களில் 221 அனுமதி இல்லாத கடன் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. மேலும், இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி இல்லாமல் இயங்கி வரும் 61 கடன் செயலிகளை நீக்க தமிழ்நாடு சைபர் க்ரைம் போலீஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Published:Updated:

சட்டவிரோதமாகச் செயல்பட்ட 221 கடன் செயலிகள் நீக்கம்... சைபர் க்ரைம் நடவடிக்கை!

கடந்த 4 மாதங்களில் 221 அனுமதி இல்லாத கடன் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. மேலும், இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி இல்லாமல் இயங்கி வரும் 61 கடன் செயலிகளை நீக்க தமிழ்நாடு சைபர் க்ரைம் போலீஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடன் செயலிகள் நீக்கம்...

இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் இயங்கி வந்த 221 கடன் செயலிகளை முடக்கியும், சமூக வலைதளங்களில் பதிவாகியுள்ள 386 அவதூறு வீடியோக்களை நீக்கவும் தமிழ்நாடு சைபர் க்ரைம் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு கடன் செயலிகள் ரிசர்வ் வங்கியின் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக இயங்கி வருகிறது. இந்த செயலிகள் பொதுமக்களுக்கு கடன் வழங்கி அதிக வட்டி வாங்குவது, அவர்களது போட்டோ மற்றும் தகவல்களை வைத்து வாடிக்கையாளர்களை மிரட்டுவது என்று பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

சைபர் க்ரைம் அதிகரிப்பு!
சைபர் க்ரைம் அதிகரிப்பு!

இந்தக் கடன் செயலிகளைப் பற்றிய ஏகப்பட்ட புகார்கள் தொடர்ந்து குவிந்து வருகிறது. மேலும், இந்தச் செயலிகளால் தற்கொலைகளும் நடந்து வருகிறன. இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத் தமிழ்நாடு சைபர் க்ரைம் போலீஸார் ரிசார்வ் வங்கி அனுமதி இல்லாத கடன் செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்குமாறு கூகுளுக்கு கடிதம் எழுதியிருந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 4 மாதங்களில் 221 அனுமதி இல்லாத கடன் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. மேலும், இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி இல்லாமல் இயங்கி வரும் 61 கடன் செயலிகளை நீக்க தமிழ்நாடு சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இன்றைய நவீன உலகில், சமூக வலைதளங்களில் அவதூறு தகவல்களும், சட்ட விரோத தகவல்களும் குவிந்து வருகின்றன. இந்தப் பதிவுகளை நீக்க சைபர் க்ரைம் போலீஸார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரை சமூக வலைதளங்களில் இருந்து 40 சட்ட விரோத தகவல்கள் மற்றும் கருத்துகள் சைபர் க்ரைம் போலீஸாரின் நடவடிக்கை மூலம் நீக்கப்பட்டுள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் உள்ள 386 அவதூறு தகவல்கள் மற்றும் சட்ட விரோத பதிவுகளை நீக்க அந்தந்த வலைதளங்களுக்கு சைபர் க்ரைம் போலீஸார் கடிதம் எழுதியுள்ளனர்.