Published:Updated:

ஆப்பிளின் சர்ப்ரைஸ் ‘X’... அனிமோஜி... ஐபோன் இந்த முறை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறதா? #AppleEvent

ஆப்பிளின் சர்ப்ரைஸ் ‘X’... அனிமோஜி... ஐபோன் இந்த முறை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறதா? #AppleEvent
ஆப்பிளின் சர்ப்ரைஸ் ‘X’... அனிமோஜி... ஐபோன் இந்த முறை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறதா? #AppleEvent

ஆப்பிளின் சர்ப்ரைஸ் ‘X’... அனிமோஜி... ஐபோன் இந்த முறை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறதா? #AppleEvent

ஆப்பிள் தனது முதல் போனை அறிமுகப்படுத்தி 10 ஆண்டுகள் ஆன பிறகு வெளியாகும் மொபைல், ஸ்டீவ் ஜாப்ஸ் பெயரில் கட்டப்பட்ட ஆப்பிளின் புதிய தலைமையகத்தில் அறிமுகப்படுத்தப்படும் முதல் ஸ்மார்ட்போன் என இந்த முறை எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறிக் கிடந்தது, நேற்று நடந்த புதிய மொபைல்கள் அறிமுகம் செய்யும் விழாவிற்கு.

நிகழ்ச்சித் தொடங்கியவுடன் மேடையில் தோன்றிய ஆப்பிள் சிஇஓ டிம் குக் ஸ்டீவ் ஜாப்ஸை நினைவு கூரும் விதமாகப் பேசினார். பின்னர் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கத்தின் சிறப்புகள் விளக்கப்பட்டன.அதன் பின்னர் அறிமுகப்படுத்தபட்டது ஆப்பிள் வாட்ச் 3.

முந்தைய ஆப்பிள் வாட்ச் மாடல்களிலிருந்து பல வகைகளில் மேம்படுத்தப்பட்டிருகிறது ஆப்பிள் வாட்ச் 3. இதை ஒரு சிறிய மொபைலாகவே மாற்றியிருக்கிறது. இதன் மூலம், ஒரு ஸ்மார்ட்போனில் செய்யக்கூடிய பெரும்பாலான பணிகளை மேற்கொள்ளலாம். இதனுள் எலக்ட்ரானிக் சிம் கார்டு பொருத்தப்பட்டுள்ளதால் அழைப்புகளை மேற்கொள்ளவும் முடியும். இதிலுள்ள சென்சர்கள் மூலமாக உடலின் செயல்பாடுகளைக் கண்காணிக்கலாம். ஜிபிஎஸ் வசதி, சிரி, Wifi, ப்ளுடூத் எனப் பல வசதிகள் இதில் இருக்கின்றன. Airpods ஐ பயன்படுத்தி பாடல்களும் கேட்கலாம். ஒரு முறை சார்ஜ் செய்தால் இரண்டு நாள்கள் வரை பயன்படுத்தலாம். ஆப்பிள் வாட்ச் 3 ஐ பயன்படுத்தும்போது உங்களுக்குத் தனியாக மொபைல் தேவைப்படாது. விலை 21000 ரூபாய் மற்றும் செல்லுலார் வசதி இருப்பது 25000 ரூபாய்.

அடுத்ததாக ஆப்பிள் டிவி. 4K, HDR வீடியோக்களைப் பார்க்க முடியும். A10X பிராஸசர் மூலம் இரண்டு மடங்கு அதிகத்திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. iTunes இல் இருக்கும் HD திரைப்படங்களை டவுன்லோடு செய்தால் அதை 4K தரத்தில் காணலாம். இதற்குத் தனியாகக் கட்டணம் ஏதும் கிடையாது. விலை 12700  ரூபாய்.

ஐபோன் 8 ஐ அறிமுகப்படுத்தும் முன்பாக ஸ்டீவ் ஜாப்ஸின் கண்டுபிடிப்புகள் தொழில்நுட்ப உலகில் எவ்வளவு மாற்றங்களைக் கொண்டு வந்தது, ஐபோன் முதல் ஐபோன் 7 வரை என்னென்ன மாற்றங்களை ஐபோன் கண்டிருக்கிறது என்பதையும் டிம் குக் விளக்கினார். அதன் பின்னர் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஐபோன் 8 சிறப்பம்சங்கள்

4.7 இன்ச்   750 x 1334 திரை.           
Apple A11 Bionic ஹெக்சாகோர் ப்ராசஸர்.
2 ஜிபி ரேம் மற்றும் 64/256 ஜிபி இன்டர்னல் மெமரி.
12மெகாபிக்சல் பின்புற கேமரா.
 7 மெகாபிக்சல் முன்புற கேமரா.
வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் NFC

வழக்கமான ஐபோன் போன்றே வடிவமைக்கப்பட்டிருகிறது. முன்புற பட்டன் கைரேகை சென்சராக செயல்படும். சிறிய அளவுள்ள திரையை விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். விலை இந்திய மதிப்பில் 44000 ரூபாய்.

ஐபோன் 8  பிளஸ் சிறப்பம்சங்கள்

5.5  இன்ச்  1080 x 1920 திரை.           
Apple A11 Bionic ஹெக்சாகோர் ப்ராசஸர்.
3  ஜிபி ரேம் மற்றும் 64/256 ஜிபி இன்டர்னல் மெமரி.
12+12 மெகா பிக்சல் பின்புற கேமரா. OIS மற்றும்  2x optical zoom வசதியுடன்.
7 மெகாபிக்சல் முன்புற கேமரா.
வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் NFC
ஐபோன் 8 பிளஸ்சை பொறுத்தவரை ஐபோன் 7 பிளஸ் போன்ற வடிவமைப்பையே கொண்டிருகிறது. ப்ராசஸர், திரை, வயர்லெஸ் சார்ஜிங் எனக் குறிப்பிட்ட சில விஷயங்களைத் தவிர வேறு ஒன்றும் புதிதாக  இல்லை. விலை இந்திய மதிப்பில் 51100 ரூபாய்.

அதான்  ஐபோன் 8ஐ  அறிமுகப்படுத்தீட்டாங்களே... அப்போ முன்னாடி வெளியான தகவல் எல்லாம் பொய்யா இருக்குமோனு எல்லாரும் நினைக்கும் போதே டிம் குக் "நாங்க இதோட நிறுத்தப்போறதில்ல... எங்ககிட்ட இன்னொன்னும் இருக்கு"ன்னு அறிமுகப்படுத்துனதுதான் ஐபோன் X. இந்த நிகழ்ச்சியோட ஹைலைட்டான விஷயம். இத்தனை வருடங்களில் முதல் முறையாக ஐபோன் பெரிய அளவில் மாற்றம் கண்டிருப்பது இதில்தான். முக்கியமாக ஐபோனின் அடையாளமான முன்புறமாக இருக்கும் ஹோம்  பட்டன் இதில் கிடையாது. இது முன்னரே கசிந்த தகவல்களில் வடிவமைப்பு மட்டும் இல்லாமல் பல வசதிகளும் அப்படியே உண்மையாக இருந்தது.

ஐபோன் X சிறப்பம்சங்கள்

5.8 இன்ச்  1125 x 2436திரை.           
Apple A11 Bionic ஹெக்சாகோர் ப்ராசஸர்.
3  ஜிபி ரேம் மற்றும் 64/256 ஜிபி இன்டர்னல் மெமரி.
12+12 மெகா பிக்சல் பின்புற கேமரா. OIS மற்றும்  2x optical zoom வசதியுடன்.
7 மெகாபிக்சல் முன்புற கேமரா.
iOS11, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் NFC

ஹோம் பட்டன் இல்லாத காரணத்தால் இதில் கைரேகை சென்சொர் வசதி கிடையாது. அதற்கு பதிலாக ஐபோன் Xஐ அன்லாக் செய்வதற்கு Face ID என்னும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துகிறது ஆப்பிள்.  Face ID  மூலமாக முகத்தைப் பயன்படுத்தி ஐபோன் எக்ஸை அன்லாக் செய்ய முடியும். Face ID தொழில்நுட்பத்தில் இருக்கும் Infrared camera,Dot projector,Flood illuminator போன்றவை முகத்தைத் துல்லியமாகப் பதிவு செய்ய பயன்படுகிறது. எனவே, உங்களைப் போன்று வேடமிட்ட ஒருவராலோ அல்லது உங்கள் புகைப்படத்தைக் கொண்டோ அன்லாக் செய்ய முடியாது. இதன் மற்றொரு வசதி இருட்டிலும் கூட உங்கள் முகத்தைப் பயன்படுத்தி அன்லாக் செய்ய முடியும். அதே வேளையில் ஒரே முக அமைப்பைக் கொண்ட  இரட்டையர்கள் பாஸ்வேர்டைப்  பயன்படுத்திகொள்ளலாம் எனப் பரிந்துரைக்கிறது ஆப்பிள். 

டூயல் வெர்டிகள் அமைப்பில் இருக்கும் கேமராக்கள் VR க்கு உதவியாய் இருக்கும். எமொஜியின் அடுத்த கட்டமாக Animoji என்னும் புது வகையிலான எமொஜியை அறிமுகப்படுத்துகிறது ஆப்பிள். இது உங்கள் முகபாவங்களை அப்படியே பிரதிபலிக்கும். இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் Apple A11 Bionic ஹெக்சாகோர் ப்ராசஸர் முந்தைய மாடல்களை விட அதிக வேகத்தில் செயல்படும். முதல் முறையாக இந்த மொபைலில் OLED யை பயன்படுத்தியிருக்கிறது அதுவும் edge to edge திரை என்பதால் சிறந்த திரை அனுபவத்தை பெற முடியும். வயர்லெஸ் சார்ஜிங் மூலமாக வேகமாக சார்ஜ் செய்துகொள்ள முடியும். விலை  89,000 ரூபாய் 

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்டீவ் ஜாப்ஸ் அறிமுகப்படுத்திய ஐபோன்  ஸ்மார்ட்போன்களின் வரலாற்றையே மாற்றியது. அவர் இருந்த வரை அப்படித்தான்  ஒவ்வோர் ஆப்பிள் வெளியீட்டு நிகழ்வையும் உலகம் கவனமாக உற்றுநோக்கும். ஆனால், இப்பொழுது அவர் இல்லாத குறை ஆப்பிளின் புதிய தயாரிப்புகளில் தெரிய ஆரம்பித்திருகிறது என நெட்டிசன்கள் ட்வீட்களைத் தட்டி வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு