Published:Updated:

``நாம் ரன்னிங் போனால் ஒருவருக்கு உதவி கிடைக்கும்!" - பணம் திரட்டும் செயலிகள் #CharityApps

``நாம் ரன்னிங் போனால் ஒருவருக்கு உதவி கிடைக்கும்!" - பணம் திரட்டும் செயலிகள் #CharityApps
``நாம் ரன்னிங் போனால் ஒருவருக்கு உதவி கிடைக்கும்!" - பணம் திரட்டும் செயலிகள் #CharityApps

நீங்கள் அன்றாடம் செய்யும் வேலைகள் மூலமாகவே ஆதரவற்றோருக்கு உதவி செய்யலாம் . அதுவும், உங்களுடைய பணத்தை உபயோகிக்காமல் .

``நாலு பேருக்கு உதவி செய்யணும்னுதான் என் ஆசை. ஆனா எங்க, குடும்பச் செலவுக்கே சம்பாதிக்கிற காசு கரெக்டா இருக்கு” என நினைக்கிறவர்கள் உண்டு. போலவே , ``உதவி செய்யணும்னு ஆசைதான் ,நிறைய பணமும் இருக்கு. ஆனா நேரமே கிடைக்க மாட்டேங்கிறது”. இப்படியும் சிலர் உண்டு . இது போன்ற சூழ்நிலைகள் உங்களைப் பிறருக்கு உதவி செய்யவிடாமல் தடுக்கிறதா. நேரம் , பணம் இவை உங்கள் சமூக சேவை எண்ணத்தில் ஒரு தடையாக இருக்கிறதா, நீங்கள் அன்றாடம் செய்யும் வேலைகள் மூலமாகவே ஆதரவற்றோருக்கு உதவி செய்யலாம் . அதுவும் , உங்களுடைய பணத்தை உபயோகிக்காமல் . ``எப்படி”என்கிறீர்களா ? இந்த டெக்னோ( techno) காலத்தில் வேறு எதுவாக இருக்க முடியும்; செயலி( app)களால்தாம்!


CHARITYMILES
நீங்கள் எதிர்நீச்சல் குஞ்சிதபாதம்போல் மரத்தான் போட்டிக்குப் பயிற்சி செய்துகொண்டிருக்கிறீர்களா அல்லது BP, Sugar-ஐ குறைக்க, காலையில் பூங்காவில் நடைப்பயிற்சி செய்பவரா. இந்த ஆப்பைப் பதிவிறக்கம் செய்துவிட்டு பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இந்த ஆப் நீங்கள் எத்தனை தூரம் ஓடியுள்ளீர்களோ, நடந்தீர்களோ அதற்கு ஏற்றார்போல் கணக்கு செய்து காசு ஜெனரேட்( GENERATE) செய்யும் . பிறகு , நீங்கள் ஜெனரேட் செய்த பணத்தைத் தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுக்கும் . நீங்கள் அதிக தூரம் ஓட ஓட அதிக பணம் ஜெனரேட் செய்வீர்கள் . நீங்கள் கொடுக்க விரும்பும் தொண்டு நிறுவனத்தையும் நீங்களே தேர்வு செய்யலாம் . ஆப்பை பதிவிறக்கம் செய்யும் போதே தொண்டு நிறுவனத்தை (தற்போது 41 நிறுவனங்கள் அதில் உள்ளன ) தேர்வு செய்து பயிற்சியை மேற்கொள்ளவும் . எவ்வளவு பணம் ஜெனரேட் செய்துள்ளீர்கள் என்ற விவரத்தை மட்டும் தராமல் , GPS மூலம் நீங்கள் எவ்வளவு தூரத்தைக் கடந்துள்ளீர்கள் , எவ்வளவு நேரம் எடுத்துள்ளீர்கள் , எத்தனை கலோரிஸ்( Calories) எரிக்கப்பட்டுள்ளன போன்ற விவரங்களையும் சேர்த்து தருகிறது இந்த CHARITY MILES ஆப்.

DONATE A PHOTO
கண் தானம் , ரத்த தானம் , தாய்ப்பால் தானம் போல் இது புகைப்பட தானம் . ஜென்z தலைமுறைக்கு ஏற்றதுபோல் அமைக்கப்பட்டுள்ளது இந்த ஆப். பல் தேய்ப்பது , குளிப்பது , சாப்பிடுவது போல் நம் அன்றாடத்தில் ஒன்றாக ஆகிவிட்ட புகைப்படம் எடுப்பதைத்தான் இந்த ஆப் எதிர்பார்க்கிறது . முதலில் நீங்கள் எந்த நோக்கத்துக்காகக் கொடுக்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு புகைப்படத்தையும் இந்த ஆப் மூலம் பதிவிறக்கம் செய்தால் ஜான்சன் & ஜான்சன்( JOHNSON & JOHNSON நிறுவனம் US 1$-ஐ நீங்கள் தேர்வு செய்த நோக்கத்துக்குத் தானமாகக் கொடுக்கிறது . நீங்கள் நாள் ஒன்றுக்கு ஒரு புகைப்படத்தை மட்டும் தான் பதிவு செய்யலாம் என்ற நிபந்தனை இருக்கிறது . நீங்கள் உங்கள் படத்தைத்தான் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை . உங்கள் வீட்டு செல்லப் பிராணிகளை , இயற்கைக் காட்சிகளை படம்பிடித்து பதிவிறக்கம் செய்யலாம் . இதுவரை முப்பத்தைந்து லட்சத்துக்கு மேல் புகைப்படங்கள் தானமாகக் கொடுக்கப்பட்டு நூற்று ஐம்பதுக்கும் மேலான நோக்கங்களுக்கு உதவியிருக்கிறது . ஆனால் இந்த ஆப் இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை . வெளிநாட்டு வாழ் இந்தியர்களே ... உங்களுக்குத்தான் .

GOODSHOP
நீங்கள் ஆன்லைனில் ஷாப்பிங் அதிகம் செய்யக்கூடியவரா. அப்போ இந்த ஆப் உங்களுக்காகத்தான் . இந்த ஆப்பின் பிரத்யேக நோக்கம் உங்களுக்குத் தள்ளுபடி கூப்பன்களை வழங்குவதும் , நீங்கள் வாங்க நினைக்கும் பொருளுக்குக் குறைவான விலையைக் கொடுக்கும் கடைகளைச் சொல்வதும் தான் . அதோடு இல்லாமல் நீங்கள் வாங்கும் பொருளுக்கு அதன் விலையைக் கணக்கிட்டு , ஒரு குறிப்பிட்ட தொகையைத் தொண்டு நிறுவனங்களுக்குக் தானமாக வழங்குவது தான் இந்த ஆப்பின் சிறப்பம்சம் . இந்த ஆப்பைப் பதிவிறக்கம் செய்யும் போதே எந்த நிறுவனத்துக்குக் கொடுக்க வேண்டும் என்பதை செலக்ட் செய்து , இந்த ஆப் மூலம் பொருள்களை வாங்க வேண்டும் . வாங்கும் பொருளுக்குச் சிறந்த விலையும் கிடைத்தது போக நல்ல நோக்கத்துக்காகவும் பயன்படுகிறது . ஒரே கல்லிலே ரெண்டு மாங்காய் !

WALK FOR A DOG
நடிகை திரிஷாவுக்குப் பிடித்த ஆப்பாக இது இருக்கலாம் . ஆம் இது விலங்குகள் நலத்துக்கான ஆப். இந்த ஆப்பைப் பதிவிறக்கம் செய்துவிட்டு , உங்கள் வீட்டு நாயை வாக்கிங் கூட்டிட்டு போகும் போது இந்த ஆப்பைப் பயன்படுத்துங்கள் . GPS மூலம் தூரத்தைக் கணக்கிடும் . தொடர்ந்து பயன்படுத்தினால் நீங்கள் உதவி செய்ய விரும்பும் விலங்குகள் காப்பகத்துக்கு ‘WOOFTROX’ நிறுவனம் இந்த ஆப் மூலம் தானம் செய்யும் . நிறைய நபர்கள் செய்தால் நிறைய தானம் அந்தக் காப்பகத்துக்குக் கிடைக்கும் . உங்களிடம் , நாய் இல்லையென்றாலும் பரவாயில்லை . நீங்கள் இந்த ஆப்பில் இருக்கும் ‘WALK FOR CASSIE’ ஆப்ஷனை செலக்ட் செய்து நீங்கள் விரும்பும் காப்பகத்திற்காக நடக்கலாம் . இந்த ஆப்-ம் இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை.

இதெல்லாம் சரி. பொதுவான ஆப்ஸ் என்னலாம் டவுன்லோடு செய்யலாம். இந்தாங்க!

அடுத்த கட்டுரைக்கு