ஆறு மாதங்களுக்கு ஒருமுறை புது மொபைலை வெளியிட்டுக்கொண்டிருக்கும் ஒன் ப்ளஸ், இந்த முறை ஒன் ப்ளஸ் 6 போனைக் களமிறங்கியிருக்கிறது. டாப் ஸ்பெக்ஸ் , சிறப்பான திறன், போட்டியாளர்களைவிட பாதிதான் விலை. இதுதான் ஒன் ப்ளஸ்ஸின் ‘NEVER SETTLE’ தாரக மந்திரம். இந்த முறையும் அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறது. டூயல் கேமரா, இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம்.
One Plus 6
விலை
6 ஜிபி ரேம் + 64 ஜிபி இன்டெர்னல் மெமரி - ரூ 34,999
8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் மெமரி - ரூ 39,999
8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டெர்னல் மெமரி - ரூ 44,999
* 6.28” Optic AMOLED டிஸ்ப்ளே
* Qualcomm® Snapdragon 845 (Octa-core, 2.8 GHz) புராசஸர்
* 2280 x 1080 பிக்ஸல் 19:9 Aspect ratio
* 3300 mAh அதிவேக சார்ஜிங் கொண்ட பேட்டரி
* *ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம்
* டூயல் ரியர் (20 + 16 மெகாபிக்ஸல்) Sony IMX கேமரா , டூயல் LED Flash
* 16 மெகாபிக்ஸல் ஃப்ரன்ட் கேமரா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ப்ளஸ்:
* சிறப்பான திறன்
* அட்டகாசமான டிஸ்ப்ளே
* சிறப்பான, அதிவேக சார்ஜிங் பேட்டரி
மைனஸ்
* வயர்லெஸ் சார்ஜிங் இல்லை
* முழுமையான வாட்டர் ப்ரூஃப்பிங் இல்லை
மற்ற சாய்ஸ்
சாம்சங் கேலக்ஸி S9: இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே , வாட்டர் ரெசிஸ்டென்ட், வயர்லெஸ் சார்ஜிங் என எல்லா அம்சங்களுடன் டிக் அடிக்கிறது கேலக்ஸி S9. ஆனால், முந்தைய மாடலுக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. விலை 74,000 என்பதும் குறிப்பிடத்தக்கது.
கூகுள் பிக்ஸல் 2: பர்ஃபாமென்ஸில் ஒன் ப்ளஸ், கூகுள் பிக்ஸல் உடன் போட்டி போட்டாலும், கேமராவில் தூள் கிளப்புகிறது கூகுள் பிக்ஸல் 2. விலை 61,000 ரூபாய்.
30,000-40,000 ரூபாய் உங்கள் பட்ஜெட் எனில், ஒன் பிளஸ் 6 தான் ஒரே சாய்ஸ்.
அனைத்து மொபைல்களும், டூயல் ரியர் கேமராவை நோக்கிச் செல்ல... வாவ்வே (ஹூவாயி, ஹாவாயி எல்லாம் கிடையாது) நிறுவனம் இன்னும் ஒருபடி மேலே சென்று, மூன்று ரியர் கேமராக்களுடன் களமிறங்கியிருக்கிறது.
மொபைலில் எத்தனை கேமராக்கள் இருந்தாலும், அது DSLR கேமரா அளவுக்கு இல்லை என்பதுதான் பிரச்னையாக இருந்தது. அதை மாற்றி இருக்கிறது வாவ்வே. இதில் இருக்கும் 40 MP (RGB, f/1.8 aperture) +20 MP (Monochrome, f/1.6 aperture) + 8 MP (Telephoto, f/2.4 aperture) மூன்று ரியர் லென்ஸும் அட்டகாசமாக இருக்கின்றன. அனைத்து விதமான ஷாட்களையும் இதன் மூலம் எடுக்க முடியும். இதுவரையில் வெளியாகி இருக்கும் மொபைல்களில், இதுதான் சிறப்பான கேமரா.

* இருபக்கமும் கண்ணாடியுடன் கூடிய மெட்டல் ஃபிரேம்.
* 6.1” AMOLED 1080 x 2240p டிஸ்ப்ளே
* ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம்.
* 6 ஜிபி ரேம்
* 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
* Tri - Leica நிறுவன ரியர் லென்ஸ்
* 24 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா
* 4,000 mAh அதிவேக சார்ஜிங் வசதியுடன் கூடிய பேட்டரி
ப்ளஸ்:
* அட்டகாசமான கேமரா
* சிறப்பான சாஃப்ட்வேர்
* டிசைன்
* சிறந்த
* பேட்டரி திறன்
மைனஸ்:
* Wireless சார்ஜிங் இல்லை.
* ஹெட்போன் ஜேக் இல்லை


ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை விற்பனை செய்கின்றன. அமேசான் ஏற்கெனவே எக்கோ டாட் என்னும் ஸ்மார்ட் ஸ்பீக்கர் மூலம் பலரது வீடுகளைச் சென்றடைந்து விட்டது. தற்போது அதன் அடுத்த கட்டமாக, அமேசான் எக்கோ ஸ்பாட் எனும் ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகம் செய்திருக்கிறது. இதில் வீடியோ காலிங் வசதியும் இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சம் அப்டேட் ஆகிக்கொண்டே வருவதால், வீட்டை ஸ்மார்ட் ஹோம் ஆக்கும் அளவுக்கு இது சிறப்பானதாக இருக்கிறது. அதாவது மின்விசிறி துவங்கி, மின் விளக்குகள் வரை அலெக்ஸா வாயிலாக இயக்க முடியும்.

* வீடியோ நியூஸ் செய்திகள்
* அலாரம்,
* பாடல்கள், ஸ்கோர், வானிலை அப்டேட்,
* வீடியோ காலிங்
* ஸ்மார்ட் ஹோம்
மற்ற சாய்ஸ்
கூகுள் ஹோம்
அமேசானில் இருக்கும் எல்லா வசதியும் அப்படியே இருக்கிறது. வீடியோ காலிங் வசதி மட்டும் இல்லை. கூகுள் தற்போது ஹோம் (9,999), ஹோம் மினி (3,499 ரூபாய்) என இரு மாடல்களை வெளியிட்டு வருகிறது.
இரண்டு அமேசான் எக்கோ ஸ்பாட் வாங்கும்போது, ரூ 5,000 தள்ளுபடி தருகிறது அமேசான் நிறுவனம்