தற்போது உள்ளங்கையிலேயே அனைத்தும் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன ஸ்மார்ட் போன்கள். ஸ்மார்ட் போனில் இயங்கும் வகையில் விவசாயிகளுக்குப் பயன்தரக்கூடிய பல செயலிகளும் சந்தையில் உள்ளன. அவற்றில் இயற்கை வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, வானிலை, வேளாண் காடுகள், சுற்றுச்சூழல் தொடர்பான தகவல்களை அளிக்கக்கூடிய செயலிகள் குறித்துப் பார்ப்போம்.

பசுமைத் தமிழக விவசாயம் (Pasumai Tamizhaga Vivasayam)

இச்செயலியில் தகவல்களை உள்ளேயே பார்க்க முடியாது. இச்செயலி மூலம் வேறொரு தளத்தில்தான் தகவல்களைப் பார்க்க முடியும். அதனால், இச்செயலியைப் பயன்படுத்த இணைய இணைப்பு அவசியம். இதில், ‘புதிய தகவல்கள்’ என்ற பகுதியில் விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான செய்திகளைப் படிக்க முடியும்.

அடுத்ததாக நெல் சாகுபடி, எரு, உரம், வீட்டுத்தோட்டம், இயற்கைப் பூச்சிவிரட்டி, சொட்டுநீர்ப் பாசனம் மற்றும் ஜீரோ பட்ஜெட் ஆகிய தலைப்புகளில் தகவல்கள் தரப்பட்டுள்ளன. மேலும், பலவகையான காய்கறிகள், தானியங்கள், விளைபொருள்கள், கால்நடை வளர்ப்பு போன்றவை பற்றிய தகவல்களையும் இதன் மூலமாக அறிந்து கொள்ள முடியும்.

இச்செயலியை http://bit.ly/2BrxnaY என்ற முகவரியிலும், கூகுள் பிளே ஸ்டோர் மூலமும் தரவிறக்கம் செய்யலாம்.

உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்தும் செயலியைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பால் மேலாண்மை (Milk Management)

கறவை மாடு வளர்ப்பவர்களுக்கு உபயோகப்படும் செயலி இது. பால் விற்பனை தொடர்பான விவரங்களை இதில் பதிவு செய்து... தேவைப்படும் சமயத்தில் வரவு-செலவுக் கணக்குகளைப் பார்க்க முடியும். கணக்கு வழக்குகளை எளிமைப்படுத்த இச்செயலி உதவும். ஆனால், ஆங்கிலத்தில் மட்டுமே இச்செயலியைப் பயன்படுத்த முடியும். செயலியைப் பயன்படுத்த இணைய இணைப்புத் தேவையில்லை.

இதில் ‘வாங்குபவர்’, ‘விற்பவர்’ என இரண்டு பகுதிகள் இருக்கின்றன. வாங்குபவர் மற்றும் விற்பவர் குறித்த தகவல்களைப் (பெயர், இடம், தொடர்பு எண் போன்றவை) பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து பசும்பால் மற்றும் எருமைப் பால் ஆகியவற்றின் விலை விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். பிறகுதான் இச்செயலியைப் பயன்படுத்தித் தகவல்களைச் சேமிக்க முடியும். பால் விற்பனை செய்பவர், மாட்டுக்கான பராமரிப்புச் செலவையும் பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலமாக மாட்டுக்குச் செய்யப்பட்ட செலவையும், பால் விற்பனை மூலமாகப் பெறப்பட்ட வருமானத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.

இச் செயலியை http://bit.ly/2nBtQgw என்ற முகவரியிலும், கூகுள் பிளே ஸ்டோர் மூலமும் தரவிறக்கம் செய்யலாம்.

- மு.ராஜேஷ்