Published:Updated:

ஒன்ப்ளஸ்ஸை ஓவர்டேக் செய்யுமா POCO F1?

ஒன்ப்ளஸ்ஸை ஓவர்டேக் செய்யுமா POCO F1?
பிரீமியம் ஸ்டோரி
ஒன்ப்ளஸ்ஸை ஓவர்டேக் செய்யுமா POCO F1?

#POCOF1கார்த்தி

ஒன்ப்ளஸ்ஸை ஓவர்டேக் செய்யுமா POCO F1?

#POCOF1கார்த்தி

Published:Updated:
ஒன்ப்ளஸ்ஸை ஓவர்டேக் செய்யுமா POCO F1?
பிரீமியம் ஸ்டோரி
ஒன்ப்ளஸ்ஸை ஓவர்டேக் செய்யுமா POCO F1?

ந்தியாவின் பட்ஜெட் மொபைல் மார்க்கெட் முழுவதையும் மொத்தமாக சுருட்ட நினைத்த ஷியோமி நிறுவனத்திற்கு, ரியல்மீ மொபைல் மூலம் திடீர் ஷாக் கொடுத்தது ஓப்போ. அந்த மொபைல் மெர்சல் ஹிட்டாகவே, கடுப்பான ஷியோமி, BBK நிறுவனத்திற்கு (ஓப்போ, விவோ, ஒன்ப்ளஸ்) தற்போது வைத்திருக்கும் செக்தான் போக்கோ F1. சமீபத்தில் வெளிவந்த ஒன்ப்ளஸ் 6-ல் இருக்கும் அதே ஸ்பெக்ஸ்; ஆனால், விலை அதைவிட ரூ. 10,000 குறைவு; ஒன்ப்ளஸ் 6-ன் டேக்லைன் The Speed You Need என்றால், POCO F1-ன் டேக்லைன் Master Of Speed. போக்கோ மொபைலின் டீசர் இந்த இரண்டு வரிகள்தான்.

ரேம், இன்டர்னல் மெமரி போன்ற விஷயங்களில் ஓர வஞ்சனை வைக்காமல், அசூஸ் ஜென்ஃபோன் FZ, ஒன்ப்ளஸ் 6 போன்ற மொபைல்களுடன் போட்டி போடுகிறது POCO.

ஒன்ப்ளஸ்ஸை ஓவர்டேக் செய்யுமா POCO F1?

POCO F1-ல் என்ன ஸ்பெஷல்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

* Qualcomm® Snapdragon™ 845 புராசஸர்

* Liquid Cool டெக்னாலஜி

* 4000 mAh பேட்டரி

* 20 MP ஃபிரன்ட் கேமரா

* பின்பக்க ஃபிங்கர் ப்ரின்ட் சென்சார்

* ( 12 + 5 MP ) டூயல் ரியர் கேமரா

*  டைப் சி போர்ட்டுடன் கூடிய அதிவேக சார்ஜிங் வசதி

* 6.18" ஸ்கீரின் 2246 x 1080 FHD+ டிஸ்ப்ளே

*  ஹைப்ரிட் ஸ்லாட்

*  ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம்

ஒன்ப்ளஸ்ஸை ஓவர்டேக் செய்யுமா POCO F1?

நாட்ச்

6.18" ஸ்கிரீனில் விஷூவல்ஸ் பார்க்க அட்டகாசமாக இருக்கிறது. இந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே, ஆப்பிள் X-ல் இருப்பது போன்ற நாட்ச் டிஸ்ப்ளேவுக்கு பிற மொபைல்கள் மாறிவிட்டாலும், ஷியோமி நிறுவனம் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தற்போது POCO F1-ல் அதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள். ப்ரீமியம் மொபைல்களில் இருக்கும் ஃபேஸ் அன்லாக் இதிலும் இருக்கிறது. ஆப்பிளில் இருப்பது InfraRed முறையில் ஃபேஸ் அன்லாக் செய்கிறது. வெறும் புகைப்படங்களைக் காட்டி, POCO மொபைலை அன்லாக் செய்துவிட முடியாது என உறுதி அளிக்கிறது ஷியோமி.

ஒன்ப்ளஸ்ஸை ஓவர்டேக் செய்யுமா POCO F1?

பெர்ஃபாமன்ஸ்

தற்போதைக்கு மொபைல்களில் இருக்கும் அதிவேக புராசஸர் (குவால்கம் ஸ்னாப்டிராகன் 845), அதிவேக கிராபிக்ஸ் ( Adreno 630 ), அதிகபட்ச  ரேம் ( 8 GB ), இன்டர்னல் ஸ்டோரேஜ் (256 GB ); இவை அனைத்தையும் 29,000 ரூபாய்க்குள் ஒரு மொபைலில் கொடுக்க முடியும் என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது. அந்த வகையில் POCOவுக்கு பாராட்டுகள். அஸ்ஃபால்ட் 8 முதல் தற்போதைய வைரல் PubG வரை எல்லா 2 GB கேம்களையும் ஜஸ்ட் லைக் தட் டீல் செய்கிறது POCO. Snapdragon™ 845 புராசஸரை எப்போதும் கூல் மோடில் வைத்திருக்க Liquid Cool டெக்னாலஜியைப் பயன்படுத்துகிறது POCO. ஆம் பாஸ், நிஜம்தான். ரெட்மி மொபைல் என்றாலும் இது சூடாவதில்லை. 4,000 mAh பேட்டரி திறனுடன், டைப் சி போர்ட்டுடன் கூடிய அதிவேக சார்ஜிங் வசதி இருப்பதால், பேட்டரி பிரச்னை இல்லை.

ஒன்ப்ளஸ்ஸை ஓவர்டேக் செய்யுமா POCO F1?

சாஃப்ட்வேர்

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை மையமாகக் கொண்டு MIUI 9.6 இயங்குதளத்தில் செயல்படுகிறது POCO. பிற ஷியோமி மொபைல்களுடன் ஒப்பிடுகையில், இயங்குதள அனுபவம் சிறப்பானதாகவே இருக்கிறது. ஆனால், நாம் எங்கு சென்றாலும் கூடவே வரும் வோடாஃபோன் நாய் போல், ப்ளோட்வேர்களை இந்த மொபைலிலும் நம் தலையில் கட்டியிருக்கிறது ஷியோமி. இப்படி இன்பில்ட்டாக வரும் சில ஆப்களை அன் இன்ஸ்டால் செய்ய முடியவில்லை எனக் கதற ஆரம்பித்திருக்கிறார்கள் விமர்சகர்கள். மேலும் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்றவற்றில் HD ரெசொல்யூஷனில் பார்க்க முடியாதபடி Widevine L1 சர்ட்டிபிகேட் மட்டுமே வைத்திருக்கிறது F1. ப்ரீமியம் போனில் நிச்சயம் இது மைனஸ்தான்.

ஒன்ப்ளஸ்ஸை ஓவர்டேக் செய்யுமா POCO F1?

கேமரா

ரியர் கேமராக்கள் சிறப்பான புகைப்படங்களைக் கொடுத்தாலும், லோ லைட்டில் நாய்ஸைக் கொட்டுகிறது POCO. அனைத்து பாக்ஸ்களிலும் டபுள் டிக் அடித்த POCO, ரியர் கேமரா செக்ஷனில் மட்டும் ஜஸ்ட் பாஸ் வாங்குகிறது. ஃபிரன்ட் கேமரா 20 MP லென்ஸுடன் அசத்தலாக இருக்கிறது.

பல மொபைல்கள் ப்ரீமியம் ஃபீலுக்காக பின்பக்கம் முழுக்க கண்ணாடிக்கு மாறிவிட்டார்கள். ஆனால், POCO -வின் பின் பக்கத்தை பிளாஸ்டிக் பாடியில் வடிவமைத்து ப்ரீமியம் ஃபீலை கெடுத்து வைத்திருக்கிறார்கள். மொபைலின் விலையை கம்மி செய்ய அடுத்து ரெட்மி கை வைத்திருக்கும் இடம் கண்ணாடி. ப்ரீமியம் மொபைல்கள் அனைத்தும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வரை சென்றுவிட, POCO பழைய ஃபார்மெட்டான கார்னிங் கொரில்லா கிளாஸ் 3-ஐ ஸ்கிரீனுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். முதலில் ஷியோமி, தான் ஒரு பட்ஜெட் மொபைல் என்ற எண்ணத்தில் இருந்து மாற வேண்டும் என்று தோன்றுகிறது. "எப்படியும் கண்ணாடி மாடல்களுக்கு Case கேஸ் போடத்தான் போகிறார்கள். அதனால்தான் நாங்கள் பிளாஸ்டிக் ஃபினிஷிங் கொடுத்து விலைக் குறைப்புக்கு அதைப் பயன்படுத்தி இருக்கிறோம் என POCO சொல்லும் விளக்கம் 'அடப்போங்க பாஸ்' நிலையில்தான் இருக்கிறது.

ப்ளஸ்

  * சிறப்பான விலை
  * அட்டகாசமான பேட்டரி
  * லைக்ஸ் அள்ளும் செல்ஃபி கேமரா
  * அதிவேக திறன்

ஒன்ப்ளஸ்ஸை ஓவர்டேக் செய்யுமா POCO F1?

மைனஸ்

  * வாட்டர் ரெசிஸ்டன்ட் இல்லை
  * கீழ்பகுதியில் Bezels சற்று அதிகமாகவே இருக்கிறது
  * ரியர் கேமரா இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்