Published:Updated:

`போலி செய்திகளைத் தடுக்க முயற்சி' - வாட்ஸ்அப்பில் வருகிறது கூகுள் இமேஜ் சர்ச் வசதி!

`போலி செய்திகளைத் தடுக்க முயற்சி' - வாட்ஸ்அப்பில் வருகிறது கூகுள் இமேஜ் சர்ச் வசதி!
`போலி செய்திகளைத் தடுக்க முயற்சி' - வாட்ஸ்அப்பில் வருகிறது கூகுள் இமேஜ் சர்ச் வசதி!

போலி செய்திகள் பரவுவதைத் தடுக்க, வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இந்தியா போன்ற நாடுகளில், இந்தப் போலி செய்திச் சிக்கல், வாட்ஸ்அப்பிற்கு பெரிய தலைவலியாக இருந்துவந்தது. அதைத் தொடர்ந்து, அதைக் குறைக்கும் முயற்சியில் இறங்கியது வாட்ஸ்அப். முதலாவதாக, மெசேஜ்களில் ஃபார்வர்டு செய்யப்பட்டது என்பதைக் காட்டும் வகையில் மாறுபாடு செய்யப்பட்டது. அதன்பின்னர், ஃபார்வர்டு மெசேஜ்களைப் பிறருக்கு அனுப்பும் எண்ணிக்கையைக் குறைத்தது. தற்போது, மேலும் ஒரு வசதியைக் கொண்டுவரும் முயற்சியில்  வாட்ஸ்அப்  ஈடுபட்டுவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இனிமேல் மெசேஜ்களில் வரும் புகைப்படங்களைச் செயலியின் உள்ளே இருந்தே  கூகுளில் சர்ச் செய்ய முடியும். ஒரு படத்தின் உண்மைத் தன்மையைக் கூகுளில் உள்ள இமேஜ் சர்ச் என்பதன் மூலமாக ஓரளவிற்கு அறிந்துகொள்ள முடியும். சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள பீட்டா செயலி, 2.19.73 என்ற பதிப்பில் இந்த வசதி கொடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுவருகிறது. இதன் மூலமாக புகைப்படத்துக்கும் அதனுடன் சேர்த்து அனுப்பப்படும் தகவல்களுக்கும் இடையே இருக்கும் தொடர்பைத் தெரிந்துகொள்ள முடியும்.