Published:Updated:

என்னதான் நடக்குது? - வாட்ஸ்அப் குரூப் அலப்பறைகள்! #MyVikatan

நமது நிருபர்
என்னதான் நடக்குது? - வாட்ஸ்அப் குரூப் அலப்பறைகள்! #MyVikatan
என்னதான் நடக்குது? - வாட்ஸ்அப் குரூப் அலப்பறைகள்! #MyVikatan

அன்றாட வாழ்க்கையில் நாம கடந்துவரும் வாட்ஸ்அப் குரூப்புகளில் 2% தவிர மீதி இருக்கும் 98% குரூப்களில் நாம எதற்கு இருக்கிறோம் என்றே தெரிவது இல்லை. இந்தக் கட்டுரை அந்த 98% பற்றினதுதான். வாட்ஸ்அப் குரூப்புகளைப் பற்றி ஒரு ஜாலியான கட்டுரை இது.  

என்னதான் நடக்குது? - வாட்ஸ்அப் குரூப் அலப்பறைகள்! #MyVikatan

அலுவல் ரீதியாக ஆரம்பிக்கும் வாட்ஸ்அப் குரூப் பற்றி இங்கே குறிப்பிடப்படவில்லை என்பதை முன்னமே தெரிவித்துக்கொள்கிறேன். ஒருவர் வாட்ஸ் அப் குரூப் ஆரம்பித்ததும் முதல் தவணையாக அவருடைய நெருங்கிய நண்பர்கள் பத்து பேரை சேர்த்துவிட்டு அவர்களையும் அவர்களின்  நண்பர்களைச் சேர்க்கச் சொல்லுவார். அவர்களும் கேள்வி எதுவும் கேட்காமல் போனில் இருக்கும் கான்டாக்ட்ஸ் எல்லாரையும் ஆட் செய்துவிடுவார்கள். குரூப் ஆரம்பித்து கொஞ்சநேரத்திலேயே அறுபது பேரை சேர்த்திருப்பார்கள். அதில் இருபது பேருக்கு நமது நம்பர் இவர்களுக்கு எப்படி கிடைத்தது என்று புரியாமல், ஒருத்தர் தவிர எல்லாரும் குரூப்விட்டு போய்விடுவார்கள். போகாத அந்த ஒருத்தர் LIC ஏஜென்ட்டாக இருப்பார். 

என்னதான் நடக்குது? - வாட்ஸ்அப் குரூப் அலப்பறைகள்! #MyVikatan

ஒருவழியாக எல்லாரும் செட்டில் ஆன பிறகு, முதல் இரண்டு வாரம் ஜெகஜோதியா இருக்கும் குரூப். மனைவியிடம் சண்டைனாலும் சரி, மேனேஜர், மனைவி என யாருடன் சண்டை என்றாலும் சரி, இங்கு வந்துதான் ஒட்டுமொத்த சமுதாயத்தையே கரைத்துக்கொட்டிவிட்டுப் போவார்கள். அவருக்கு ஆதரவாக ஒரு குரூப், எதிர்ப்பாக இன்னொரு குரூப் என்று பிரச்னையை அடிமட்டம்வரைக்கும் அலசி ஆராய்ந்து இருப்பார்கள்.

நாம எப்போது குரூப்க்கு போனாலும் ஓய்வுபெற்ற போலீஸ்காரர் மாதிரி ``நீங்க யார், யாரைப் பாக்க வந்தீங்கன்னு" எப்பவோ ஒரு நாள் குரூப்க்கு வரும் நம்மை விசாரித்துக் கிண்டல் பண்ணுவார். இதுதவிர தினமும் ePaper போடுபவர், காய்கறி விலை நிலவரம் சொல்பவர், வானிலை அறிக்கை சொல்பவர், சமுதாயத்து மேல் கன்னாபின்னான்னு அக்கறை வைத்திருப்பவர்களும் இருப்பார்கள். ஆனால், ஒரு குரூப் நிறைய நாளுக்கு ஆக்டிவ்வாக இருக்கக் காரணம், மேல் சொன்ன யாரும் கிடையாது. அதற்கு காரணம், புயலே அடித்தாலும், இடியே இடித்தாலும் தவறாமல் வந்து Good Morning சொல்லிட்டு கூடவே ஒரு கருத்தையும் சொல்லுவார்களே அவர்களால்தான். கொஞ்ச நாளில் ரங்கநாதன் தெரு மாதிரி இருந்த குரூப் அமைதியாகி மோட்சநிலையை அடைந்திடும். இப்போது மறுபடி முழித்துவிடுவார் நமது அட்மின். புது பேரில் புது குரூப் ஆரம்பித்து அதே பத்து பேரை add பண்ணுவார்!

செய்தி : அசோக் மு.

என்னதான் நடக்குது? - வாட்ஸ்அப் குரூப் அலப்பறைகள்! #MyVikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/