Published:Updated:

மொபைல் நாவல்

மொபைல் நாவல்

மொபைல் நாவல்

மொபைல் நாவல்

Published:Updated:

மொபைல் நாவல்!
மொபைல் நாவல்
மொபைல் நாவல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 
மொபைல் நாவல்
மொபைல் நாவல்

க்ரைம் நாவல் தெரியும்... மொபைல் நாவல்? ஜப்பானின் டோக்கியோ நகரத்தில் 2003-ம் ஆண்டில் யோஷி என்பவர் செல்போனிலேயே முதல் நாவலை எழுதி-னார். அபார வரவேற்பைப் பெற்ற அந்த நாவல், பிறகு புத்தகமாகவும் வெளியானது. நாவலின் பெயர் 'டீப் லவ்'. புத்தக வடிவில் 2.6 மில்லியன் விற்று சாதனை படைத்தது. ஜப்பானைத் தாண்டி சீனா, தைவான் ஆகிய நாடுகளிலும் அது சக்கைப் போடு போட்டதால், ஒரு லட்சம் டாலர் கொடுத்து யோஷியிடம் நாவலின் காப்புரிமையை வாங்க போட்டா போட்டி எழுந்தது. ஐரோப்பாவிலும் ஆப்பிரிக்கா-விலும் 2007-ம் ஆண்டு முதல் செல்போன் மூலம் நாவலை விற்பனை செய்யத் தொடங்கினார்கள்.

மொபைல் நாவல்

தென் ஆப்பிரிக்காவில் பெரும்பாலான டீன்-ஏஜ் வயதினர் மொபைல் நாவல்களைப் படிக்கும் பழக்கத்துக்குக் கிட்டத்தட்ட அடிமையாகிவிட்டனர். நாவலின் ஒவ்வொரு அத்தியாயங்களும் எஸ்.எம்.எஸ். வடிவில் அனுப்பப்படும். அதிகபட்சம் 70-100 வார்த்தைகள் வரை மட்டுமே ஒவ்வொரு அத்தியாய-மும் இருக்கும். அடுத்த அத்தியாயம் வருவதற்குக் காத்திருக்கும் பொறுமை இல்லாமல் வாசகர்கள், சண்டை பிடிக்கும் அளவுக்குப் பல இடங்களில் ரசாபாசமானது. இந்த மொபைல் நாவல் டிரெண்ட் அமெரிக்காவிலும் பரவி, 'செகன்தாட் மெமரிஸ்' என்ற நாவல் அங்கு பிரமாண்ட ஹிட் ஆனது. அறிமுகமான ஜப்பானைக் காட்டிலும், சீனா-வில் மிகவேகமாகப் பிரபலமடைந்தது மொபைல் நாவல் வாசிக்கும் வழக்கம். படித்ததோடு, பல சீன மாணவர்கள் தாங்களே மொபைலில் நாவல் எழுதவும் தொடங்கினார்கள். இதனால் வாசிக்கும் ஆர்வமும் படைப்புத்-திறனும் ஒரு சேர அதிகரித்தது. மொபைலில் நாவல் படிக்க முடியாதவர்கள், பதிப்பகத்தில் பணம் கொடுத்து நாவலை அச்சு வடிவில் பெற்றுக்கொண்டனர்.

மைக்கா என்பவர் எழுதிய love sky என்ற மொபைல் நாவல் 12 மில்லியன் பேரால் படிக்கப்-பட்டது. தொடர்ந்து, அந்த நாவல் புத்தகமாகவும், திரைப்படமாகவும் வடிவம் எடுத்தது. இணையத்தில் வாசிக்கப்படும் இ-புக்கைவிட மொபைல் நாவல் இன்று பிரபலம்.

மொபைல் நாவல்

new.textnovel.com தளம் மொபைல் நாவல்கள்பற்றிய விவரங்கள் அளிக்கிறது. கம்ப்யூட்டரோ, மொபைலோ எப்படியோ பயபுள்ளைக படிச்சா சரி!

-பா.ஜெயவேல்

 
மொபைல் நாவல்
மொபைல் நாவல்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism