உங்களுடையது 'செல்'லக் குரலா?
செல்போனில் அடிக்கடி கதைத்துக்கொண்டே இருப்பவர்-களுக்குக் குரல் மாற்றம் ஏற்பட்டு, பேச்சின் பாணியே மாறுவதாகச் சொல்கிறார்கள். ஆனால், இதற்குப் பழியைத் தூக்கி செல்போன்கள் மீது போடக் கூடாது. காதுக்கும் தோளுக்கும் நடுவில் செல்போனைப் புதைத்து, கழுத்தைச் சாய்த்துப் பேசும்போது, கழுத்து மற்றும் குரல்வளை தசையில் அதிக அழுத்தம் ஏற்படுகிறதாம். அதுதான் குரல் மாற்றத்துக்குக் காரணமாம். அதே போல காதோடு செல்போனை அதிக அழுத்தம் கொடுத்துப் பேசும்போது, உள்ளே செல்லும் ஒலி அலைகளின் அதிகபட்ச வீரியம் கேட்கும் திறனையும் கடுமையாகப் பாதிக்கின்றதாம். உஷார்!
மொபைல் நோய்கள்!
உலகெங்கும் மக்களிடையே சில குறிப்பிட்ட வகை நோய்களின் தாக்கம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கதிர் வீச்சினால் உண்டாகும் புற்று நோய், காது தொடர்பான பிரச்னைகள், நரம்பு மண்டலப் பாதிப்பு ஏற்படுத்தும் அல்சீமர் மற்றும் பார்க்கின்சன் என நீள்கிறது அந்தப் பட்டியல். உலகெங்கும் சுமார் 600 கோடி மக்கள் செல்போன்-களைப் பயன்படுத்துவதால், அவைதான் இந்த நோய்களுக்குக் காரணமாக இருக்குமா என்றொரு குபீர் கோணத்தில் ஆராயத் தொடங்கியிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். உலகம் முழுக்க ஆங்காங்கே இதுபற்றி ஆய்வுகள் நடந்து வந்தாலும், ஆணித்தரமான முடிவுகள் எதுவும் இதுவரை அறிவிக்கப்-படவில்லை. இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம், இது தொடர்பான முழு ஆய்வைச் சமீபத்தில் தொடங்கியுள்ளது. '30 ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பிறகுதான் தீர்க்கமான முடிவுகள் கிடைக்கும். ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் அப்போதைய ஆய்வு முடிவுகளை வெளியிடுவோம்' என்று தெரிவித்துள்ளனர். இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 450 கோடி டாலர்கள். ஆய்வு முடிவுகள் வரும் வரை, 'எதற்கும் இருக்கட்டும்' என்று சில ஆலோசனைகளை வெளியிட்டு உள்ளார்கள்.
|