Published:Updated:

வெர்காடோரியோ!

வெர்காடோரியோ!

வெர்காடோரியோ!

வெர்காடோரியோ!

Published:Updated:
செல்போன் விகடன்  
வெர்காடோரியோ!
வெர்காடோரியோ!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெர்காடோரியோ!
 
.
வெர்காடோரியோ!
.
வெர்காடோரியோ!

அமெரிக்காவின் ஆட்டத்துக்குத் தலையசைக்காத மிகச் சில உலகத் தலைவர்களில் வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸூக்கு முக்கிய இடம் உண்டு. மீடியா வெளிச்சத்தில் எந்நேரமும் திளைத்திருக்க ஏதேனும் சாகசங்கள் செய்துகொண்டே இருக்கும் இவர், அதற்காகத் தற்போது கையில் எடுத்திருப்பது செல்போன்! இந்தியாவில் செல்போனின் அந்தஸ்து அடையாளத்தைக் குறைத்த '501 போன்' கணக்காக, வெனிசுலாவில் மலிவு விலை செல்போன் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறார், சாவேஸ். விலை 15 டாலர். நல்ல விஷயம்தான். ஆனால், அந்த செல்போனுக்கு சாவேஸ் வைத்த பெயர்தான் கிண்டல் கேலியைக் கிளப்பி அதிரிபுதிரி ஆக்கிவிட்டது. 'வெர்காடோரியோ' என்பது

அந்த செல்போனின் பெயர். செல்போன் அறிமுக விழாவில், இந்தப் பெயரை சாவேஸ் அறிவித்ததும், மக்கள் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினர். 'சுமார் 750 ரூபாய் (இந்திய மதிப்புக்கு) விலையுள்ள இந்த செல்போனில் கேமரா, இணைய இணைப்பு, எஃப்.எம்., எம்.பி 3, வீடியோ என அதிநவீன வசதிகள் அனைத்தும் உண்டு. சின்னஞ் சிறிசு, விலை மலிவு, ஏகப்பட்ட வசதிகள். வெனிசுலாவில் மட்டுமல்ல... விரைவில் உலகம் முழுக்க அதிகம் விற்பனையாகும் செல்போனாக வெர்காடோரியோ இருக்கும்!' என்று சாவேஸ் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க, மக்கள் சிரிப்பை நிறுத்துவதாக இல்லை. ஏன் சிரிப்பு? காரணம், வெனிசுலா மக்கள் ஆண் உறுப்பை 'வெர்காடோரியோ' என்று செல்லமாக அழைப்பார்கள்! அதே சமயம், வெனிசுலாவின் பழமையான கரகாஸ் மொழியில் வெர்காடோரியா என்றால் வெற்றிபெற்ற மனிதன் என்று ஓர் அர்த்தமும் உண்டாம்.

வெர்காடோரியோ!

எதை நினைத்து அதிபர் இந்தப் பெயரை வைத்தார் என்று தெரியாது. ஆனால், அவர் இப்படி ஒரு பெயரை வைத்ததற்கு வலுவான காரணம் இருக்கும் என்கிறார்கள். இப்படி வித்தியாசமாக எதையாவது கூறி பெயர் எடுப்பதில் சாவேஸ் வல்லவர். அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை ஒரு முறை அவர் 'பேண்டிஜோ' என்ற வெனிசுலா மொழியில் திட்டினார். அதற்குப் பொறுக்கி என்று அர்த்தம்!

வெர்காடோரியோ!

பெயர் சர்ச்சைக்கு உள்ளானாலும் செல்போன் விற்பனை பிய்த்துக்கொண்டு இருக்கிறது. வெனிசுலா அரசு தரும் மானியம்தான் செல்போனின் அந்த மலிவு விலைக்குக் காரணம். இந்த வருடம் ஆறு லட்சம் மொபைல்களும், 2011-ம் ஆண்டுக்குள் இரண்டு மில்லியன் மொபைல்களும் விற்பதாகத் திட்டமாம்!

 

பா.ஜெயவேல்
வெர்காடோரியோ!
வெர்காடோரியோ!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism