உங்கள் கையில் ஒரு செல்போன் இருக்கிறது. அதை ஜவ்வுமிட்டாய்போலத் திருப்ப முடியும்... மடக்க முடியும். வாட்ச்போலக் கையில் கட்டிக்கொள்ளலாம். பேப்பரைப்போலச் சுருட்டிப் பையில் வைத்துக்கொள்ளலாம். இது சாத்தியமா?
நம்பினால் நம்புங்கள்... நிஜமாகவே இப்படியான வசதிகளுடன் புத்தம் புதிய செல்போன் ஒன்று தயாராகிக்கொண்டு இருக்கிறது. அனைத்துக்கும் காரணம் நானோ டெக்னாலஜி!
இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் நானோ சயின்ஸ் மையமும் நோக்கியாவின் ஆராய்ச்சிப் பிரிவும் இணைந்து நானோ டெக்னாலஜியை மின்னணுச் சாதனங்களில் பயன்படுத்துவது குறித்த ஆராய்ச்சிகளைச் செய்தது. அதன்படி உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த ஃப்ளெக்சிபிள் செல்போன்கள் விரிவடையும் தன்மை உடையதாகவும், ஒளி ஊடுருவக் கூடியதாகவும், தண்ணீர் உட்புகாமல் இருக்கும் தன்மையோடும் இருக்கும். இந்த டெக்னாலஜி மூலம் கீ-போர்டு முறையில் ஒன்று டச்-பேடு முறையில் மற்றொன்று என இரு முறைகளிலும் செல்போன்கள் செய்யப்போகின்றனர். எப்போதும் தூய்மையானதாக இருக்கும் இந்த செல்போனின் கலர் மற்றும் டிசைனை நம் விருப்பத்துக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளலாம். உதாரணமாக, நீங்கள் அணிந்திருக்கும் உடையின் நிறத்தை இந்த செல்போன் மூலம் |