''ஒரு நாளைக்கு எத்தனை போன் தயாரிப்பீர்கள்?'' என்ற கேள்விக்கு நோக்கியா தொழிற்சாலையின் கேப்டன் சச்சின் செக்சேனா, ''தேவையைப் பொறுத்துதான் உற்பத்தி இருக்கும். கடந்த நான்கு ஆண்டுகளில் 35 கோடி மொபல் போன்களை இங்கு உற்பத்தி செய்திருக்கிறோம். ஒரு நாளைக்கு எத்-தனை போன் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள்!''- பதில் அளிக்கிறார்.
தொடர்ந்து, ''இந்தியாவில் செய்த போனாக இருந்தாலும், நோக்கியாவின் தாய்வீடான பின்லாந்தில் தயாரான போனாக இருந்தாலும், தரத்தில் ஒரு நூலிழை வித்தியாசம்கூட இருக்காது!'' என்றார்.
நோக்கியா தொழிற்சாலையில் உலகத் தரத்துடன் அலைபேசிகளைத் தயார் செய்வது காஞ்சிபுரம், போரூர், பூந்தமல்லி, அம்பத்தூர் என்று சுற்று வட்டாரத்தில் இருக்கும் விடலைப் பையன்களும் திருமணப் பருவத்தை எட்டாத இளம்பெண்களும்தான். நோக்கியா தொழிற்சாலையில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு என்ற கோரிக்கை அர்த்தம் இல்லாதது. காரணம், அங்கே பணிபுரியும், 8,000 பேரில் கிட்டத்தட்ட 70 சதவிகிதம் பேர் பெண்கள்.
டீன்-ஏஜ் பெண்கள் என்றால் சளைக்காமல் செல்போன் பேசுவார்கள் என்ற எண்ணம் கொண்ட-வர்களே... சலிக்காமல் அந்த செல்போன்களைத் தயாரிப்பதிலும் பெண்கள்தான் டாப்!
|