'ஒரே எழுத்து ஓஹோன்னு மெசேஜ்!' இதுதான் இன்றைய இளைஞர்களின் மந்திரம். எஸ்.எம்.எஸ். வந்த பிறகு வார்த்தைகள் எழுத்துக்களாக மாறிவிட்டன. you என்பது u வாகிவிட்டது. call என்பது cl ஆகிவிட்டது. எழுதுபவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் இந்த எஸ்.எம்.எஸ். மொழி புரிகிறது என்றாலும் கூட, பழக்கத்தின் காரணமாக இவற்றை மாணவர்கள் தேர்வுகளிலும் எழுதத் தொடங்கிவிட்டார்கள் என்பது தான் இப்போதைய பிரச்னை. இங்கு மட்டுமல்ல; உலகின் பெரும்பாலான மாணவர்கள் தேர்வில் எஸ்.எம்.எஸ். மொழியைப் பயன்படுத்துகின்றனர். பேராசிரியர்கள் இதை எப்படிப் பார்க்கின்றனர்?
சென்னை, எஸ்.ஐ.இ.டி. மகளிர் கல்லூரிப் பேராசிரியர் பர்வீன் சுல்தானாவிடம் கேட்டோம்.
|