Published:Updated:

'செல்'லெனப்படுவது யாதெனில்...

'செல்'லெனப்படுவது யாதெனில்...

'செல்'லெனப்படுவது யாதெனில்...

'செல்'லெனப்படுவது யாதெனில்...

Published:Updated:
செல்போன் விகடன்  
'செல்'லனப்படுவது யாதெனில்...
'செல்'லெனப்படுவது யாதெனில்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'செல்'லெனப்படுவது யாதெனில்...
 
.
'செல்'லெனப்படுவது யாதெனில்...
.

செல்போன்கள் குறித்த சில நம்பிக்கைகளும், அதன் பின்னணி உண்மைகளும்...

விமானப் பயணத்தில் செல்போன் பயன்படுத்தினால் அதன் சிக்னல்கள் விமானத்தின் மின்னணுக் கருவிகளின் செயல்பாட்டில் குளறுபடி உண்டாக்கி விமானத்தையே செயல் இழக்கச் செய்யும்!

'செல்'லெனப்படுவது யாதெனில்...

மொபைல் போனின் சிக்னல்கள் விமானத்தின் சிக்னல்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன என எந்த ஆராய்ச்சி முடிவுகளும் சொல்லவில்லை. இருப்பினும், ஒரு முன் எச்சரிக்கைக்காக இந்த வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது!

பெட்ரோல் பங்க்குகளில் செல்போன்களை உபயோகிப்பது தீ விபத்துக்களை உருவாக்கலாம்!

 

இதில் உண்மை இல்லை என்பதுதான் பலரது கருத்தும். செல்போன்களில் இருந்து உருவாகும் ஸ்டாடிக் எலெக்ட்ரிக் சார்ஜ் எனப்படும் மின் சக்தியின் அளவானது, தீப்பொறியை உண்டாக்கும் அளவுக்கு இருக்காது என்று நிச்சயமாகச் சொல்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் பிரபல எண்ணெய் நிறுவனமான ஷெல், இது குறித்து எச்சரிக்கை விடுத்திருப்பதாக மேற்கோள் காட்டப்பட்டு உலகெங்கும் இ-மெயில்கள் பறந்தன. ஆனால், ஷெல் நிறுவனம் இதை மறுத்துவிட்டது!

'செல்'லெனப்படுவது யாதெனில்...

செல்போன்களைத் தொடர்ந்து உபயோகிப்பதால் அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு, மூளையில் கட்டிகளையும் மூளைக் கேன்சரையும் உருவாக்கும்!

மொபைல் போன்களின் கதிர்வீச்சினால் மூளைக்கு ஏற்படுவதாகச் சொல்லப்படும் பாதிப்புகள் குறித்து உறுதியான ஆராய்ச்சி முடிவுகள் எதுவும் திட்டவட்டமாக வெளியாகவில்லை. இருப்பினும், முன் எச்சரிக்கையைக் கருத்தில்கொண்டு கூடுமானவரையில் பாதுகாப்பாக நடந்துகொள்வது நலம் என்பதே ஆராய்ச்சியாளர்களின் கருத்து!

நோக்கியா செல்போன்களில் பேட்டரி சார்ஜ் மிகவும் குறைவாக இருந்தால் *3370# என்ற எண்களை டயல் செய்யுங்கள். ஓரளவுக்கு பேட்டரி சார்ஜ் ஆகும். அதைக்கொண்டு எமர்ஜென்ஸி கால்கள் பேசலாம்!

இதுவும் பொய்யே. சார்ஜ் குறைந்தால் ரீ-சார்ஜ்தான் செய்ய வேண்டும். வேறு குறுக்கு வழிகள் எல்லாம் இல்லை.

மருத்துவமனைகளில் உள்ள உபகரணங்களின் செயல்பாட்டில் மொபைல் போன்களின் கதிர்வீச்சுக்கள் பாதிப்பை உண்டாக்கி, நோயாளிகளின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்!

'செல்'லெனப்படுவது யாதெனில்...

பல ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இதில் எந்தவித உண்மையும் இல்லை என்று கண்டறியப்பட்டு உள்ளது. ஆனால், நோயாளிகளின் நலன் கருதி மருத்துவமனைகளில் செல்போன்களை சைலன்ட் மோடில் வைப்பது நல்லதுதானே?

செல்போன்களை பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்தால் உயிரணுக்களில் பாதிப்பை உண்டாக்கி ஆண்களை மலடாக்கும்!

இதில் உண்மை இல்லாமல் இல்லை. பொதுவாகவே, உடல் வெப்ப நிலையைக் காட்டிலும் குறைவான வெப்ப நிலையில்தான் உயிரணுக்கள் உற்பத்தியாகும். ஆன் செய்யப்பட்ட செல்போன்களில் இருந்து எப்போதும் கதிர்வீச்சு வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். அந்த நிலையில் போன்களை பேன்ட் பாக்கெட்டில் நீண்ட நேரம் வைத்திருந்தால் நிச்சயமாக உயிரணுக்கள் பாதிக்கக்கூடும்!

 

-பா.முருகானந்தம்
'செல்'லெனப்படுவது யாதெனில்...
'செல்'லெனப்படுவது யாதெனில்...
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism