Published:Updated:

லப்டப் செல்ப்போன்!

லப்டப் செல்ப்போன்!

லப்டப் செல்ப்போன்!

லப்டப் செல்ப்போன்!

Published:Updated:
செல்போன் விகடன்  
லப்டப் செல்போன்!
லப்டப் செல்ப்போன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லப்டப் செல்ப்போன்!
 
.
லப்டப் செல்ப்போன்!
.
ஆலன் சி செஞ்ச்
லப்டப் செல்ப்போன்!

லக மக்கள் தொகையில் 30 சதவிகித மரணங்களுக்கு ஹார்ட் அட்டாக்தான் காரணம் என்கிறது ஒரு புள்ளிவிவரம். ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டவுடன், பதற்றத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திக்கித் திண்டாடும் அந்த நிமிடங்கள்தான் தங்கத் தருணம். அந்தச் சமயம் உடனடியாக முதலுதவி அளிக்கப்படுபவர்கள் பிழைத்துக்கொள்கிறார்கள்.

ஆனால் எப்போது, யாருக்கு ஹார்ட் அட்டாக் வரும் என்று எப்படிக் கணிப்பது? அதற்குக் கைகொடுக்க இருக்கிறது மினியேச்சர் ஈ.சி.ஜி. மிஷின் பொருத்தப்பட்ட செல்போன். உங்கள் சட்டைப் பாக்கெட்டில் இருக்கும் இந்த மொபைல், உங்கள் இதயத் துடிப்புகளை சென்சார் செய்தபடியே இருக்கும். ஹார்ட் அட்டாக் சமயம் அலர்ட் ஆகி தானாகவே மொபைலில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் டாக்டருக்குத் தகவல் அனுப்பிவிடும் இந்த மொபைல். உடனே, மருத்துவர்கள் நோயாளியையோ, உறவினரையோ தொடர்புகொண்டு உடனடி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய முடியும். அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் அட்வான்ஸ் கம்யூட்டிங் டெக்னாலஜி டைரக்டர் ஆலன் சி செஞ்ச், 'அவ்வளவு பெரிய ஈ.சி.ஜி. இயந்திரத்தைக் கையடக்கத்தில் கொண்டுவந்ததுதான் உண்மையான சாதனை' என்கிறார். ஆராய்ச்சி அளவில் இருக்கும் இந்தத் திட்டம் வெற்றி அடைந்தால், இந்தத் தொழில் நுட்பத்தையும் சாஃப்ட்வேரையும் இலவசமாக அளிக்கப்போவதாக அறிவித்துள்ளது இந்தத் திட்டத்துக்கு நிதிஉதவி அளித்து வரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!

 

-பா.ஜெயவேல்
லப்டப் செல்ப்போன்!
லப்டப் செல்ப்போன்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism