ஆனால், ஒபாமா ஓர் இ-மெயில் அடிமை. கையில் செல்போன் இல்லாமல் ஒரு நிமிடமும் அவரால் இருக்க முடியாது. அவருக்கு மிகவும் பிடித்தமான பிளாக்பெர்ரி செல்போனை அதிபர் மாளிகையிலும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ''இன்னும் நான் எனது பிளாக்பெர்ரியை என்னுடன்தான் வைத்திருக்கிறேன். பாதுகாப்பு அதிகாரிகள் என் பெர்சனல் விஷயத்தில் தலையிட்டு, என் செல்போனைப் பிடுங்கப் பார்க்கின்றனர். நான் அதை அனுமதிக்க மாட்டேன்!'' என்றார்.
அமெரிக்க நடிகை ஸ்கார்லட் உடன் மொபைல் சாட் செய்வது ஒபாமா வழக்கம். ''பெர்சனல் செல்போன் வைத்திருப்பது உலகச் செய்திகளை நேரடி-யாகத் தெரிந்துகொள்ளவும் மக்களுடன் எளிதில் தொடர்புகொள்ளவும் வசதியாக இருக்கிறது!'' என்கிறார் அவர்.
|