செல்போன் விஷயத்தில் இனி இளைஞர்களைப் பிடித்து ஆட்டப்போவது, 'ஆப் ஜுரம்'தான் என்று கணிக்கின்றன மொபைல் போன் நிறுவனங்கள்! ஆப்பிள் நிறுவன ஐ-போன், ஐ-பாட் உபயோகிப்பாளர்கள் டவுன்லோட் செய்துகொள்ள ஆரம்பிக்கப்பட்டு இருக்கும் ஆன்லைன் களஞ்சியமே ஆப் ஸ்டோர்(App Store). லட்சக்கணக்குகளில் பாடல்கள், ஆயிரக்கணக்கில் கேம்ஸ், டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வளைதளங்கள், பத்திரிகைகள், என்சைக்ளோபீடியாக்கள், இ-புக்ஸ் என செல்போன் ஒரு சூப்பர் மார்க்கெட் போல இருக்கும். ஆப் ஸ்டோர் என்ற இந்த வசதியை ஒவ்வொரு நிறுவனமும் கொண்டு வரத் தொடங்கிவிட்டது. நோக்கியா அறிமுகப்படுத்தி இருக்கும் ஆப் ஸ்டோருக்குப் பெயர் ஓவி (ovi).
பரம்பரைப் பங்காளிகளான வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே பல வருட யுத்தம். தென் கொரியாவில் இருப்பவர்களுடன் எந்த வகையில் தொடர்புகொண்டாலும் அவர்களுக்கு மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ விதிக்கப்படும் எனச் சட்டம் இயற்றி இருக்கிறது வட கொரியா. இந்நிலையில், தென் கொரியாவில் உள்ள தனது நண்பனுடன் வட கொரியாவைச் சேர்ந்த ஜங் என்ற வாலிபர் செல்போனில் பேசினார். விளைவு, அவரது 'குற்றத்துக்கு' துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனையை நிறைவேற்றிவிட்டார்கள்!
|