தமிழக-ஆந்திர எல்லையில் தடா என்ற இடத்தில் மர்மமான முறையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக்கிடந்தார் நாராய ணன் என்ற சாஃப்ட்வேர் இன்ஜினீயர். வழக்கில் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் திணறிய போலீஸார், 'நாராயணன் மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு இருந்ததா? கள்ளக் காதலருடன் சேர்ந்து கணவனைக் கொன்றாரா எனப் பல கோணங்களில் விசாரித்து வருகிறோம்!' என்று பத்திரிகைகளுக்குச் செய்திகளைத் தட்டியபடி இருந்தனர். கொதித்தெழுந்த மனைவி தரப்பினர் உயர்நீதிமன்றத்தை அணுக, கொலை வழக்கு சி.பி.ஐ. கைக்கு மாறியது.
சம்பவத்துக்கு முன்னும் பின்னும் நாராயணனின் செல்போன் எண்ணில் இருந்து யார் யாருக்குஎல்லாம் அழைப்பு சென்றது, யார் யாரெல்லாம் தொடர்புகொண்டனர் என்ற பட்டியலை வாங்க |