Published:Updated:

10 வயது ஐபோனிடம் பிடித்த 8... பிடிக்காத 2 அம்சங்கள்! #iPhoneAt10

10 வயது ஐபோனிடம் பிடித்த 8... பிடிக்காத 2 அம்சங்கள்! #iPhoneAt10
10 வயது ஐபோனிடம் பிடித்த 8... பிடிக்காத 2 அம்சங்கள்! #iPhoneAt10

10 வயது ஐபோனிடம் பிடித்த 8... பிடிக்காத 2 அம்சங்கள்! #iPhoneAt10

விஜய் அஜித் அளவுக்கு இல்லையென்றாலும், ராஜா-ரகுமான் அளவுக்கு இணையத்தில் சண்டை நடக்கும் இன்னொரு விஷயம் ஆப்பிள் - ஆண்ட்ராய்டு. இரண்டுக்குமான வித்தியாசங்கள் அதிகம். இரண்டிலும் பாராட்டப்பட வேண்டிய விஷயங்கள் உண்டு. இருந்தாலும், எனக்கு ஆப்பிள் ஐபோன் எப்போதும் ஒரு படி மேலே என்று தோன்றும். என்ன காரணமாக இருக்கும் என யோசித்தபோது சிக்கிய சில ஜில் ஜில் பாயின்ட்ஸ் இதோ...

1) ஆப்ஸ்:
சில இன்பில்ட் ஆப்பிள் ஆப்ஸும், Third party appsம் ஆண்ட்ராய்டில் கிடைக்காது. அதில் முக்கியமானது iMovie. ”வெண்ணெய் போல” என்போமே. அப்படி ஒரு ஸ்மூத் ஆன எடிட்டர் அது. அதுபோல, இன்னும் ஏராளமான ஸ்பெஷல் ஆப்ஸ் ஆண்ட்ராய்டில் இருக்காது. காரணம், பெரும்பாலும் அவை கட்டணம் கேட்கும் ஆப்ஸ். ஆண்ட்ராய்டில் அதை ஏமாற்ற முடியும் என்பதால் இந்த நிறுவனங்கள் ஆண்ட்ராய்டுக்கு வரவில்லை. Apple only appsக்காகவே நான் ஐபோனில் குடியிருக்க விரும்புவேன்

2) வேகம்:
ஆப்பிள் அளவுக்கு வேகமான ஆண்ட்ராய்டு மொபைல்களும் உண்டு. மறுப்பதற்கில்லை. ஆனால், கன்சிஸ்டெண்சி என்ற விஷயத்தில் ஆப்பிளை அடிச்சிக்கவே முடியாது. 99.99% ஹேங் ஆவதே இல்லை. மொத்த மெமரியிலும் வீடியோக்களும், போட்டோக்களும் ஏற்றினாலும், நகர தயங்கவே தயங்காது ஆப்பிள். “நம்பிக்கை... அதானே எல்லாம்” என்ற வாசகத்தை ஆப்பிளுக்கு தாராளமாக தாரை வார்க்கலாம் கல்யாண் ஜுவல்லர்ஸ்.

3) ப்ளோட்வேருக்கு இடம் கிடையாது:
மொபைல் வாங்கி வந்து அன்பாக்ஸ் செய்யும்போதே பல இன்பில்ட் ஆப்ஸ் இருக்குமே. அவைதாம் ப்ளோட்வேர். அவற்றை நீக்கவும் முடியாது. இடையிடையே “சார் காபி சாப்டிங்களா சார்... டிஃபன் சாப்டீங்களா சார்” என பாப் அப் வந்துகொண்டேயிருக்கும். பெரும்பாலான ஆண்ட்ராய்டு மொபைல்களில் இந்தப் பிரச்னை உண்டு. ஆப்பிளில் ம்ஹூம். 

4) எக்கோசிஸ்டம்( Eco system)
ஆண்ட்ராய்டை நம் இஷ்டப்படி customize செய்துகொள்ளலாம் என்பார்கள். ஆனால், அதுதான் ஆண்ட்ராய்டின் மிகப்பெரிய பிரச்னை என நான் நினைக்கிறேன். ஆப்பிளின் டீபால்ட் சிஸ்டமே அவ்வளவு அழகு. பெரும்பாலும், அதை மாற்ற வேண்டிய தேவை இருப்பதில்லை. ஐபோன் பயன்படுத்துபவர்கள், ஆப்பிளின் மற்றத் தயாரிப்புகளையும் விரும்பி வாங்குவார்கள். ஒவ்வொன்றும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படும் விதமே சுவாரஸ்யம்.

5) டிசைன்:
ஒவ்வொரு மாடல் வெளியாகும்போதும், அன்றைய தேதியில் மார்க்கெட்டில் சிறந்த டிசைன் ஐபோனாகத்தான் இருக்கும். இன்று சீன நிறுவனங்கள் ஆப்பிளின் டிசைனை பிரதியெடுத்து மொபைல்கள் தயாரித்தாலும், ஜினல் ஜினல் ஒரிஜினல் ஆப்பிள் தான். பாக்கெட்டுக்குள் நுழையாத மொபைல்களை மற்றவர்கள் தயாரித்தபோது ஆப்பிள் சின்ன ஸ்க்ரீன்தான் அழகு. இன்று பெரும்பாலானோர் பெரிய திரைக்கு மாறியபின், ஆப்பிளும் அடம் பிடிக்காமல் மாறியது இன்னும் அழகு.

6) அப்டேட்ஸ்:
மாதத்துக்கு ஒரு அப்டேட். ஆனால், கலர் மட்டுமே மாறும் என்ற மாயாஜாலம் எல்லாம் ஆப்பிளில் கிடையாது. வருடத்துக்கு ஒன்று; வச்சு செய்யலாம் என்பது போல ஒன்று. 

7) அசத்தல் ம்யூஸீக் ப்ளேயர் & ஹெட்ஃபோன்:
ஆப்பிளில் பாடல் கேட்டால் எல்லாப் பாடல்களுமே கேட்க பிடிக்கும். அந்த ஒலித்தரமும், கலக்கலான ஐட்யூன் இண்டர்ஃபேஸும் ஆஸம் ஆஸம்.

8) சர்வீஸ்:
ஆப்பிள் சர்வீஸ் செண்டருக்குள் போவதே கேர்ள் ஃப்ரெண்டை பார்க்கப் போவதுபோலதான். என்னுடைய 5S ஒரு முறை பிரச்னை செய்தது. வாங்கி 11 மாதங்கள் ஆகியிருந்தன. இன்னும் ஒரே மாதம் தான் வாரண்ட்டி. மேலிருக்கும் பட்டன் லேசாக அமுங்கிப் போயிருந்தது. அதற்கு காரணம், மொபைலை நான் கீழே போட்டதுதான். எந்தக் கேள்வியும் கேட்மால் மொபைலையே மாற்றித் தந்தார்கள். போலவே ஹெட்ஃபோனையும் ஒருமுறை மாற்றியிருக்கிறேன். 

பிடித்த விஷயங்கள் பல இருந்தாலும், நெகட்டிவ் விஷயங்களும் சில உண்டு. கேர்ள் ஃப்ரெண்ட் மனைவியாக மாறிவிட்டாரோ என நினைக்கும் அளவுக்கு சமீபத்தில் சர்வீஸில் பிரச்னை செய்கிறது ஆப்பிள். விலை அதிகம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன்.

ஆண்ட்ராய்டுவாசிகளே, 40000க்கு சாதாரணமாக விற்கிறார்கள். எனக்கு தெரிந்து ஆப்பிளின் மிகப்பெரிய பிரச்னை சார்ஜர்தான். எவ்வளவு கவனமாக பார்த்துக்கொண்டாலும் நைந்து போகும் சார்ஜர் பெரிய தலைவலி.

ஆப்பிளின் முதல் ஐஃபோன் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. இனி எத்தனை ஸ்மார்ட்போன்கள் வந்தாலும், ஆப்பிள்தான் Pioneer of smartphones என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.

அடுத்த கட்டுரைக்கு