Published:Updated:

கேட்ஜெட்ஸ்

ரெட்மி நோட் 8 ப்ரோ
பிரீமியம் ஸ்டோரி
ரெட்மி நோட் 8 ப்ரோ

ரியல்மீயின் என்ட்ரிக்குப் பிறகு, பட்ஜெட் மற்றும் மிட்-ரேஞ்ச் பிரிவுகளில் ரெட்மி கட்டிவைத்திருந்த கோட்டை ஆட்டம் காணத் தொடங்கியிருந்தது.

கேட்ஜெட்ஸ்

ரியல்மீயின் என்ட்ரிக்குப் பிறகு, பட்ஜெட் மற்றும் மிட்-ரேஞ்ச் பிரிவுகளில் ரெட்மி கட்டிவைத்திருந்த கோட்டை ஆட்டம் காணத் தொடங்கியிருந்தது.

Published:Updated:
ரெட்மி நோட் 8 ப்ரோ
பிரீமியம் ஸ்டோரி
ரெட்மி நோட் 8 ப்ரோ
கேட்ஜெட்ஸ்

ரியல்மீ X2 ப்ரோ

 • 16.5 இன்ச் Full HD+ Super AMOLED டிஸ்ப்ளே

 • 90 Hz Ultra Smooth டிஸ்ப்ளே

 • 64MP + 13MP + 8MP + 2MP ரியர் கேமரா

 • 16MP ஃப்ரன்ட் கேமரா

 • 4000 mAh பேட்டரி

 • Qualcomm Snapdragon 855+ ப்ராசஸர்

 • 50W Super Vooc சார்ஜிங்

 • 20X Hybrid Zoom வசதி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேட்ஜெட்ஸ்
 • ப்ளஸ்

 • அழகிய டிசைன் மற்றும் ப்ரீமியம் பில்டு

 • மின்னல் வேக சார்ஜிங்

 • வெறித்தனமான டிஸ்ப்ளே

 • தரமான ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்

மைனஸ்

 • ஒளி குறைவாக இருக்கும்

  இடங்களில் சொதப்பும் கேமரா

 • அதிக பயன்பாடு இருந்தால் லேசாக சூடாகிறது

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒன்லைன் ரீவ்யூ

ஒன்ப்ளஸ் 7T-க்குச் சிறந்த மாற்றாக வெளிவந்திருக்கிறது, ரியல்மீயின் ஸ்டைலிஷான இந்த X2 ப்ரோ. 50W Super Vooc சார்ஜருடன் வருவதால், 0-100% சார்ஜ் ஆவதற்கு 35 நிமிடங்கள்தான் எடுத்துக் கொள்கிறது. இந்த சார்ஜிங் வேகம், இந்த விலையில் எந்த மொபைல்களிலும் கிடைக்காது. 30,000 ரூபாய் பட்ஜெட்டுக்குள், ஃப்ளாக்ஷிப் வசதிகள் அனைத்தும் கொண்ட ஒரு போன் வேண்டுமென்றால், தைரியமாக இந்த X2 ப்ரோவை டிக் அடிக்கலாம்.

விலை:

8 GB RAM + 128 GB - ₹29,999

12 GB RAM + 256 GB - ₹33,999

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரெட்மி நோட் 8 ப்ரோ

 • 6.53-இன்ச் Dot Notch HDR டிஸ்ப்ளே

 • 64MP+8MP+2MP ரியர் கேமரா

 • Dedicated depth sensor

 • 20MP ஃப்ரன்ட் கேமரா

 • MediaTek Helio G90T octacore ப்ராசஸர்

 • 4500mAh பேட்டரி

 • 18W ஃபாஸ்ட் சார்ஜிங்

 • Android 9 pie

ப்ளஸ்

 • ப்ரீமியம் லுக், பில்டு குவாலிட்டி

 • துல்லியமான HDR டிஸ்ப்ளே

 • தொய்வில்லாத பர்ஃபாமன்ஸ்

 • சிறப்பான கேமராக்கள்

மைனஸ்

 • அதிக வேலை கொடுத்தால் சூடாகிறது

ஒன்லைன் ரீவ்யூ

ரியல்மீயின் என்ட்ரிக்குப் பிறகு, பட்ஜெட் மற்றும் மிட்-ரேஞ்ச் பிரிவுகளில் ரெட்மி கட்டிவைத்திருந்த கோட்டை ஆட்டம் காணத் தொடங்கியிருந்தது. இந்தப் புதிய நோட் 8 சீரிஸ் மூலம், ‘எப்போவுமே இந்த ஏரியாவுல நாங்கதான் கில்லி’ என்று மீண்டும் சொல்லாமல் சொல்லியிருக்கிறது ரெட்மி. 15,000 பட்ஜெட்டில் கேமிங் பிரியர்களையும் திருப்திப்படுத்தும் ஒரு ஆல்ரவுண்டர், இந்த நோட் 8 ப்ரோ.

கேட்ஜெட்ஸ்

விலை

6 GB RAM + 64 GB- ₹14,999

6 GB RAM + 128 GB- ₹15,999

8 GB RAM + 128 GB- ₹17,999

அமேசான் எக்கோ டாட் (3rd Gen)

 • 499 கிராம் எடை

 • LED டிஸ்ப்ளே (வித் கிளாக் வேரியன்ட்டில் மட்டும்)

 • 4 பட்டன் செட்-அப்

 • அலெக்ஸா வாய்ஸ் அசிஸ்டன்ட்

 • 15W Power adapter

ப்ளஸ்

 • புதிய டிஸ்ப்ளே மற்றும் வசதிகள்

 • அளவில் சிறியதாக இருந்தாலும், நல்ல சவுண்ட் அவுட்புட் இருக்கிறது

 • பட்ஜெட் விலை

கேட்ஜெட்ஸ்

மைனஸ்

 • சுமாரான ஆடியோ தரம்

ஒன்லைன் ரிவ்யூ

குறைந்த பட்ஜெட்டில் உங்கள் வீட்டில் ஒரு குட்டி ஸ்மார்ட் ஹோம் சாதனம் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, நல்ல சாய்ஸ் இந்த எக்கோ டாட் (3rd gen). அமேசானின் அலெக்ஸா வாய்ஸ் அசிஸ்டன்ட் உதவியுடன் பாடல்கள் கேட்பது, வானிலை மற்றும் பிற விஷயங்கள் பற்றித் தெரிந்து கொள்வது, வீட்டில் இருக்கும் ஸ்மார்ட் சாதனங்களைக் கட்டுப்படுத்துவது என அனைத்தையும் நீங்கள் சொன்னால் போதும்... இந்த எக்கோ டாட் அவற்றைப் பார்த்துக்கொள்ளும். இதில் கடிகாரம் மற்றும் வானிலை நிலவரத்தைக் காட்ட கூடுதலாக டிஸ்ப்ளே வேண்டுமென்றால், எக்கோ டாட் வித் கிளாக் மாடலை வாங்கலாம். ஒரு அறையை நிரப்பிவிடும் சத்தம் இருந்தாலும், ஸ்பீக்கர்களில் இருக்கும் ஆடியோ தரம் இதில் இல்லை.

விலை:

எக்கோ டாட் (3rd Gen)- 3,499 ரூபாய்

எக்கோ டாட் வித் கிளாக்- 5,499 ரூபாய்

அமேசான் எக்கோ (3rd Gen)

 • 1.3 கிலோ எடை

 • 30W Power adapter

 • 3.0” வூஃபர், 0.8” ட்வீட்டர்

 • 4 பட்டன் செட்-அப்

  ப்ளஸ்

 • ஆடியோ தரம்

 • ஸ்டைலிஷ் பில்டு

 • முழுமையான அலெக்ஸா வசதிகள்

  மைனஸ்

 • டிஸ்ப்ளே இல்லை

கேட்ஜெட்ஸ்

ஒன்லைன் ரிவ்யூ

முந்தைய இரண்டாம் தலைமுறை எக்கோவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் பெரிய மாற்றங்கள் எதுவுமில்லை. ஆடியோ தரம் மட்டுமே மேம்பட்டிருக்கிறது. இந்த விலைக்கு டிஸ்ப்ளே இல்லாதது ஏமாற்றம். இருந்தும், மற்ற எந்த அம்சங்களிலும் குறை சொல்லும் அளவுக்குப் பிரச்னைகளே இல்லை என்பதால், அலெக்ஸாவின் வசதிகளுடனான ஒரு ஸ்மார்ட் ஹோம் சாதனமாக முழுமை பெறுகிறது, இந்த மூன்றாம் தலைமுறை அமேசான் எக்கோ.

விலை

9,999 ரூபாய்

Mi TV 4X

 • 4K HDR 10-bit டிஸ்ப்ளே

 • 20W ஸ்பீக்கர்ஸ்

 • Dolby + DTS-HD சப்போர்ட்

 • Amlogic Cortex A53 Quad-core ப்ராசஸர்

 • 2GB RAM+ 8GB ஸ்டோரேஜ்

 • நெட்ஃப்ளிக்ஸ் & அமேசான் ப்ரைம் வீடியோ சப்போர்ட்

 • ஆண்ட்ராய்டு டிவி OS + கூகுள் அசிஸ்டென்ட்

ப்ளஸ்

 • சிம்பிளான டிசைன்

 • எளிமையான UI

 • முக்கிய ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கான சப்போர்ட்

 • 4K விஷுவல் அனுபவம்

மைனஸ்

 • அவ்வப்போது மென்பொருளில்

  தொய்வு தெரிகிறது

 • இரவு நேரக் காட்சிகள்

  அவ்வளவு துல்லியமாக இல்லை

கேட்ஜெட்ஸ்

ஒன்லைன் ரீவ்யூ

நல்ல பிரகாசமான வண்ணங்கள் தெறிக்கும் காட்சிகளை ஒளிபரப்புவதில் டிஸ்டின்க்ஷன் வாங்குவதுபோல, கறுப்பு நிறம் அதிகம் இருக்கும் இருள் சூழ்ந்த காட்சிகளிலும் ஸ்கோர் செய்திருந்தால், கண்ணை மூடி இதைப் பரிந்துரைத்திருப்போம். இருந்தும் இந்த பட்ஜெட்டில் இந்த டிவி கொடுக்கும் வசதிகளுடன், பெரிய போட்டிகள் எதுவும் இல்லை என்பதால், அன்-அப்போஸ்டாக வெற்றி காண்கிறது ஷாவ்மி. இந்த Mi TV 4X மாடல் 50, 55, 65 இன்ச் ஆகிய அளவுகளிலும் கிடைக்கிறது.

விலை

43 இன்ச்- ₹24,999

50 இன்ச்- ₹29,999

55 இன்ச்- ₹34,999

65 இன்ச்- ₹54,999

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism