Published:Updated:

கேட்ஜெட்ஸ் : ஒன்ப்ளஸ் டிவி - க்கள்... எப்படி இருக்கு?

டிஜிட்டல் உலகம்

பிரீமியம் ஸ்டோரி

மொபைல் உலகம் கடந்த பத்து வருடங்களில் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது என்பதைக் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட அந்த மாதிரியான மாற்றம் டிவி உலகிலும் சத்தமில்லாமல் நடந்து கொண்டே இருக்கிறது. முன்பெல்லாம் டிவி என்றாலே சாம்ஸங், சோனி, எல்ஜி என அதற்கென பிராண்ட்கள் இருந்தன. ஆனால் இன்று...?!

கேட்ஜெட்ஸ் : ஒன்ப்ளஸ் டிவி - க்கள்... எப்படி இருக்கு?

மொபைல் போன் நிறுவனங்கள் பலவும் இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையிலும் இப்போது தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. முதலில் இந்த ட்ரெண்டை ஆரம்பித்து வைத்தது ஷாவ்மி நிறுவனம்தான். அதன் பட்ஜெட் MI டிவிகள் இங்கு செம ஹிட். குறைந்த விலை, நிறைவான வசதிகள் என மொபைல் சந்தையில் டிக் அடித்த அதே பாக்ஸ்களை, ஸ்மார்ட் டிவி சந்தையிலும் டிக் அடித்து இந்த டிவிகள் மக்களின் கவனத்தை ஈர்த்தன. ஏற்கெனவே இந்திய முழுவதும் மொபைல் நிறுவனமாக விரிவடைந்து விட்டதால், சர்வீஸையும் குறை இல்லாமல் அந்நிறுவனம் கொடுக்கிறது. மக்கள் டிவி பார்க்கும் விதமும் மாறிவிட்டதும், ஷாவ்மி போன்ற ஒரு நிறுவனங்கள் அதிக அளவில் இந்தியாவில் டிவி-க்கள் விற்க முக்கிய காரணம்.

இன்னும் மெகா சீரியல் பார்க்கும் பழக்கம் போகவில்லை என்றாலும், பார்க்கும் இடம் மாறிவிட்டது. ஜியோவின் இணையப் புரட்சி, OTT தளங்களின் அபார வளர்ச்சி என இரண்டும் சேர்ந்து சாமான்யன் ஒருவனுக்குப் பொழுதுபோக்கை மிகவும் செளகரியமான ஒரு விஷயமாக மாற்றிவிட்டன. விருப்பப்படும் நேரத்தில் எதையும் பார்த்துக்கொள்ளலாம் என்ற சொகுசை அனுபவிக்க ஆரம்பித்திருக்கிறான் அவன். இதை அனுபவிக்க இரண்டு விஷயங்கள் அவசியம் - ஒன்று இணையம். இன்னொன்று ஸ்மார்ட்டான டிவி. பழைய டிவி-க்களை ஸ்மார்ட் ஆக்க ஃபயர்ஸ்டிக், குரோம்கேஸ்ட் எனப் பல வசதிகள் இருந்தாலும், மொத்தமாக புதிய பெரிய ஸ்மார்ட் டிவி வாங்கிவிடலாம் என்ற மனநிலைக்கு மக்கள் வந்து விடுகின்றனர்.

மொபைல் உலகில் அனுபவம் பெற்ற மோட்டோரோலா, ரியல்மீ போன்றவை இந்த ஸ்மார்ட் டிவி சந்தையில் வெற்றியும் பெறுகின்றன. `ஒன்ப்ளஸ்ஸும்’ கடந்த வருடம் இந்த சந்தையில் அதன் Q1 சீரிஸ் டிவி-க்களை அறிமுகப்படுத்தியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், ஒன்ப்ளஸ்ஸின் ‘டிவி திட்டம்’ ஸ்மார்ட்போன்கள் போல பெரிய அளவில் ஒர்க்-அவுட் ஆகவில்லை. ஸ்மார்ட்போன் உலகில் ப்ரீமியம் பிராண்ட்டாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டதால், ஸ்மார்ட் டிவி சந்தையில் முதலிலேயே அதிகமான விலையில் களம் கண்டது ஒன்ப்ளஸ். ஒரு டிவியின் விலை 70,000 ரூபாயைத் தாண்டியது. இன்னொரு டிவியின் விலை ஒரு லட்சத்தைத் தொட்டது. டிவி-க்களில் பெரிதாகக் குறைகள் எதுவும் இல்லை. ஆனால் இவ்வளவு செல்வழிப்பது என்றால், கூடுதலாக சில ஆயிரங்கள் கொடுத்து சோனி போன்ற பிராண்ட் மதிப்புள்ள டிவிகளை வாங்கி விடலாமே என்பதுதான் பலரது எண்ண ஓட்டமாக இருந்தது.

கேட்ஜெட்ஸ் : ஒன்ப்ளஸ் டிவி - க்கள்... எப்படி இருக்கு?

இந்த மைண்ட் வாய்ஸ் ஒன்ப்ளஸ்ஸுக்குக் கேட்டுவிட்டது போல! இந்த வருடம் மொத்தமாக ஃபார்முலாவை மாற்றிக் களமிறங்கியிருக்கிறது ஒன்ப்ளஸ். குறைந்த விலையில் Y சீரிஸ், U சீரிஸ் என புதிய ஸ்மார்ட் டிவிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஒன்ப்ளஸ்ஸின் டிவி கனவை நனவாக்குமா இந்த டிவி-க்கள்?

ஒன்ப்ளஸ் U சீரிஸ்

டந்த வருடம் வந்த Q1 சீரிஸ், 55 இன்ச் மாடல். இந்த வருடமும் அதே 55 இன்ச் அளவில் U1 என்ற டிவியை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் விலை 49,999 ரூபாய்தான். Q1-ல் இருந்த ஆடம்பர விஷயங்களை மட்டும் கட் செய்து டிஸ்டிங்க்ஷன் வாங்கிய மற்ற விஷயங்களை அப்படியே எடுத்து வந்திருக்கிறார்கள். Oxygen Play வசதிகள், பக்கா ரிமோட் (கொஞ்சம் ப்ளாஸ்டிக் ஃபீல் வருது), பேஸல்லெஸ் லுக் என செம கவர்ச்சிகரமான டிவியாகவே இருக்கிறது U1.

கேட்ஜெட்ஸ் : ஒன்ப்ளஸ் டிவி - க்கள்... எப்படி இருக்கு?

U1 டிவியின் சில சிறப்பம்சங்கள்:

4K LED டிஸ்ப்ளே பேனல்

Dolby Vision, HDR10, HDR10+, HLG சப்போர்ட்

4 ஸ்பீக்கர்கள், 30 Watts

டால்பி ஆடியோ

2 USB போர்ட்

3 HDMI போர்ட்

ஆண்ட்ராய்டு 9

புளூடூத் 5.0

போட்டி:

50,000-க்கும் குறைவான விலையில் 55 இன்ச் அளவில் மற்ற நல்ல டிவிகளும் இருக்கின்றன. 34,999 ரூபாய்க்கு Mi டிவி 4X (55 இன்ச்) இருக்கிறது. ஆடியோ அவுட்-புட் ஒன்ப்ளஸ் அளவுக்கு இருக்காது. Dolby Vision சப்போர்ட்டும் கிடையாது. LED பேனலும் ஒன்ப்ளஸ் அளவுக்கு வைப்ரன்ட்டாக இல்லை. TCL நிறுவனத்தின் 55 இன்ச் டிவி (55P8E Elite) ஒன்று 44,999 ரூபாய் விலையில் கிடைக்கிறது. இதுவும் நல்ல சாய்ஸ்தான். ஆனால் டிஸ்ப்ளே தரத்தில் ஸ்கோர் செய்கிறது ஒன்ப்ளஸ். டிவியில் அதுதானே முக்கியம்.

விலை: `49,999/-

ஒன்ப்ளஸ் Y சீரிஸ்

ண்மையில் ஒன்ப்ளஸ் இறங்கி அடித்திருக்கிறது என்பதற்கு, இந்த Y சீரிஸ் ஒரு சான்று. 32 இன்ச் டிவியை வெறும் 12,999 ரூபாய்க்கு எடுத்து வந்திருக்கிறார்கள். ஸ்பெக்ஸை வைத்துப் பார்த்தால், மற்ற டிவிகளிலிருந்து பிரித்துக் காட்ட ஸ்பெஷலாக எதுவும் இல்லைதான். ஆனால், டிஸ்ப்ளே தரமாக இருக்கிறது. மொத்த DCI-P3 Color Gamut-ல் 93% கலர்களை இந்த டிஸ்ப்ளேவால் ஒளிபரப்ப முடியும். மேலும் பிக்ச்சர் குவாலிட்டிக்காக கூடுதலாக Gamma Engine ஒன்றும் வைத்திருக்கிறார்கள். இந்த Y சீரிஸில் 43 இன்ச் டிவி ஒன்றும் இதில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அதன் விலை 22,999 ரூபாய். மற்றபடி 20 W ஆடியோ, ஆண்ட்ராய்டு 9.0, 2 HDMI போர்ட், 2 USB போர்ட், டால்பி ஆடியோ சப்போர்ட் எனப் பிற வசதிகளும் இருக்கின்றன.

போட்டி:

இந்த Y சீரிஸுக்குப் போட்டியாகவும் நிறைய டிவிகள் சந்தையில் இருக்கின்றன. ரியல்மீயின் டிவிகள் கிட்டத்தட்ட இதே விலைதான். 32 இன்ச் (12,999 ரூபாய்), 43 இன்ச் (21,999 ரூபாய்). ரியல்மீ டிவிகளில் ஆடியோ சிறப்பாக இருக்கிறது. ஆனால் வீடியோவில் ஒன்ப்ளஸ்தான் டாப்பாக இருக்கிறது. ஒன்ப்ளஸ்ஸின் சிறப்பு மென்பொருள் வசதிகளும் ரியல்மீயில் இல்லை. Mi டிவிகளும் இந்த ரேஞ்சில் கலக்குகின்றன. ஒன்ப்ளஸ் விளம்பரப்படுத்தும் அளவுக்கு DCI-P3 93% LED பேனல், வேற லெவல் எல்லாம் இல்லை. பிக்ச்சர் குவாலிட்டி மற்ற டிவிகளைப் போன்றுதான் இருக்கிறது.

கேட்ஜெட்ஸ் : ஒன்ப்ளஸ் டிவி - க்கள்... எப்படி இருக்கு?

முந்தைய Q1 டிவியைப்போல அல்லாமல், கொடுக்கும் விலைக்கு மதிப்பு தரும் புதிய டிவிகளையே அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது டிவி சந்தையிலும் ஸ்மார்ட்போன் சந்தையைப் போல உச்சத்துக்குக் கூட்டிச் செல்லுமா என இனிமேல்தான் தெரியும். ஆனால் அதற்கான நல்ல தொடக்கமாகத் தெரிகின்றன இந்த பட்ஜெட் Y மற்றும் U சீரிஸ் டிவிகள்.

விலை: 32 இன்ச் - `12,999/-

43 இன்ச் - `22,999/-

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு