Published:Updated:

கேட்ஜெட்ஸ் : இனி TWS காலம்!

கேட்ஜெட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
கேட்ஜெட்ஸ்

டிஜிட்டல் உலகம்

மொபைல் போன்கள் அறிமுகமாகவதற்குப் பல வருடங்களுக்கு முன்பே... அதாவது 1910-ம் ஆண்டே இயர்போன்ஸ் வடிவமைக்கப்பட்டுவிட்டது. கப்பல் படைகள் அவற்றை அப்போது பயன்படுத்தின. அன்றிலிருந்து இன்றுவரை தேவைக்கேற்ப தொடர்ந்து மேம்பட்டுக் கொண்டே இருக்கும் இந்த இயர்போன்ஸ், சமீபத்தில் இன்னொரு புதிய வடிவம் பெற்று ஹிட் அடித்திருக்கிறது. அதுதான் TWS - Truly Wireless Stereo. இதில் வயர் என்பதே இருக்காது.

இதைப் பிரபலபடுத்தியது ஆப்பிள்தான். செப்டம்பர் 2016 ஆப்பிள் ஐபோன் 7 உடன் அறிமுகமானது ஆப்பிள் ஏர்பாட்ஸ். அந்த வருடம்தான் ஐபோனிலிருந்து ஹெட்போன் ஜாக்கை நீக்கிவிட்டு, `அதற்குப் பதிலாக இந்த TWS இயர்போன்ஸை வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றது ஆப்பிள். மொத்த டெக் சமூகமும் ‘இது நியாயமில்லை' என்றது. ‘காதில் அப்படியே நிற்குமா, கீழே விழுந்து விடாதா?’ ‘வயர்டு இயர்போன்ஸ் அளவுக்கு இதன் ஆடியோ தரம் இருக்குமா?’ ‘மைக் எப்படி இருக்கும்?’ எனப் பல கேள்விகள் வந்தன. நெட்டிசன்களும் ஏர்பாட்ஸைக் கலாய்த்துத் தள்ளினார்கள். ஆனால், இன்று ஐபோனுக்கு அடுத்து ஆப்பிளுக்கு முக்கியத் தயாரிப்பாக இருப்பது இந்த ஏர்பாட்ஸ்தான். இதை எப்படிச் சாதித்தது ஆப்பிள்?

கேட்ஜெட்ஸ் : இனி TWS காலம்!

ரொம்ப சிம்பிளான விஷயம்தான். தேவையைத் தானே உருவாக்கி, அதைப் பூர்த்தி செய்தது அது. இப்போது ஆப்பிளின் வெற்றியைத் தொடர்ந்து மொபைல் நிறுவனங்கள் அனைத்தும் TWS சந்தையில்தான் உள்ளன. இவை அனைத்துமே நம் நாட்டில் விற்பனைக்கு வந்துவிட்டன. அதில் சில முக்கிய அறிமுகங்கள் இங்கே!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

Realme பட்ஸ் ஏர் நியோ...

ப்படியே ஆப்பிள் ஏர்பாட்ஸின் தம்பி போல இருக்கும் (‘காப்பிகேட் என்பதைத்தான் டீசென்ட்டா சொல்றேன்’) இது ரியல்மீயின் இரண்டாவது TWS இயர்போன். கடந்த வருடம் வெளியான Realme Buds-ன் லைட் வெர்ஷன்தான் இந்த Realme Buds Air neo. சற்றே குறைவான விலை, அதிலிருக்கும் வயர்லெஸ் சார்ஜிங் மட்டும் கிடையாது. மற்றபடி பெரிய அளவில் எந்த வித்தியாசமும் இல்லை.

Realme பட்ஸ் ஏர் நியோ...
Realme பட்ஸ் ஏர் நியோ...

பெரிய 13 mm bass boost டிரைவர்ஸ், புளூடூத் 5.0, Google Fast Pair சப்போர்ட் என மற்ற வசதிகளும் இதில் உண்டு. 119.2ms super-low latency இருப்பதால் பப்ஜி போன்ற கேம்கள் ஆடும்போது, ஆடியோ வருவதில் பெரிய தாமதம் எதுவும் இருக்காது. SBC, AAC ஆடியோ கோடெக் சப்போர்ட் உண்டு. ஒரு சார்ஜில் இந்த இயர்போன்ஸ் 3 மணிநேரம் வரை நீடிக்கும். ஆடியோ தரம் மட்டும் கொஞ்சம் முன்னேற்றம் வேண்டும். ஆனால், உடன் வரும் கேஸில் எப்போது வேண்டுமானாலும் சார்ஜ் செய்து கொள்ள முடியும். Micro-USB சார்ஜிங்தான். அதனுடன் சுமார் 17 மணிநேரத்துக்கு இதில் பாடல்கள் கேட்க முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ப்ளஸ்

 • விலை

 • ஸ்டைலிஷ் டிசைன்

Realme பட்ஸ் ஏர் நியோ...
Realme பட்ஸ் ஏர் நியோ...

மைனஸ்

 • USB-C சார்ஜிங் இல்லாதது

 • சுமாரான ஆடியோ தரம்

 • விலை: 2,999

Samsung கேலக்ஸி பட்ஸ் +

ற்கெனவே வெளிவந்த Galaxy Buds மாடலின் அப்டேட்டட் வெர்ஷன்தான் இந்த கேலக்ஸி பட்ஸ்+. ஏர்பாட்ஸ் போல இல்லாமல் தனித்துவமான டிசைன். SBC, AAC ஆடியோ கோடெக் சப்போர்ட்டுடன் சாம்ஸங்கின் சொந்த Scalable Bluetooth கோடெக் சப்போர்ட்டும் உண்டு. டூயல் ஆடியோ டிரைவர்கள் என்பதால், ஆடியோ தரம் விலைக்கேற்றவாறு நன்றாகவே இருக்கிறது.

Samsung கேலக்ஸி பட்ஸ் +
Samsung கேலக்ஸி பட்ஸ் +

வெறும் இயர்பட்ஸ் மட்டுமே ஒரு சார்ஜில் 11 மணிநேரம் தாக்குப் பிடிக்கிறது. இத்துடன் சார்ஜிங் கேஸையும் சேர்க்கும்போது சுமார் 22 மணிநேரங்களுக்கு ஒரே சார்ஜில் பாடல்கள் கேட்க முடியும். வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் உண்டு. IPX2 ரேட்டிங் மட்டுமே இருப்பதால், இது Splash Resistant மட்டுமே! Water Resistant கிடையாது. வெளி இரைச்சல் குறைப்பு (Active Noise Cancellation) வசதிகளும் இல்லை. சாம்சங் S20 சீரிஸ் மொபைல்கள் வாங்குபவர்கள் இதை வாங்கலாம். சிறப்புச் சலுகையில் இந்த இயர்போன்ஸ் கிடைக்கும்.

ப்ளஸ்

 • தனித்துவமான டிசைன்

 • நீடித்து நிற்கும் பேட்டரி

 • ஆடியோ தரம்

Samsung கேலக்ஸி பட்ஸ் +
Samsung கேலக்ஸி பட்ஸ் +

மைனஸ்

 • இந்த விலைக்குக் குறைந்த பட்சம் IPX4 வாட்டர் ரெசிஸ்டென்ஸ் கொடுத்திருக்க வேண்டும்.

 • Noise Cancellation இல்லை.

விலை: 11,999

Xiaomi Mi ட்ரூ ஒயர்லெஸ் இயர்போன்ஸ் 2

துவும் கிட்டத்தட்ட ஆப்பிள் ஏர்பாட்ஸ் டிசைன்தான். ஆனால் சற்றே பெரியதாகத் தடிமனாக இருக்கிறது. எப்போதும்போல குறைந்த விலைதான் - இதன் முக்கிய ஹைலைட். அப்படியும் சில விஷயங்களில் ஆப்பிள் ஏர்பாட்ஸையும் மிஞ்சுகிறது இதன் ஸ்பெக்ஸ். இதன் பெரிய 14.2 mm ஆடியோ டிரைவர், ஆப்பிளின் ஆடியோ டிரைவரைவிட பெரியது. இதனால் நல்ல பேஸ் மற்றும் துல்லியமான ஆடியோ கிடைக்கிறது. புளூடூத் 5.0 சப்போர்ட்டுடன் வரும் இது SBC, AAC, LHDC ஆகிய முக்கிய உயர்தர ஆடியோ ஃபார்மட்களையும் சப்போர்ட் செய்யும்.ஒருமுறை சார்ஜ் செய்தால் 4 மணிநேரம் வரை தாக்குப் பிடிக்கும் இந்த இயர்போன்ஸ். மற்ற TWS இயர்போன்ஸ் போலவே இதற்கான கேஸையும் (Charging Case) சார்ஜ் செய்ய முடியும் என்பதால், அதைக் கொண்டு 14 மணிநேரம் வரை இதன் பயன்பாட்டை நீடிக்க முடியும்.

Xiaomi Mi
Xiaomi Mi

ப்ளஸ்

 • ஆடியோ தரம்

 • நீண்ட நேரம் அணிந்து கொள்ளவும் சவுகரியமாகவே இருக்கிறது.

Xiaomi Mi
Xiaomi Mi

மைனஸ்

 • மற்ற TWS இயர்போன்ஸுடன் ஒப்பிடுகையில் பேட்டரி கொஞ்சம் வீக்தான்.

 • டிசைன் & லுக் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம்.

விலை: 4,499

Oppo என்கோ ஃப்ரி

ட்ஜெட் விலையிலும் இல்லாமல்... ஆப்பிள், சாம்ஸங் போல ப்ரீமியம் விலையிலும் இல்லாமல் நடுவில் நிற்கிறது ஒப்போவின் இந்த Enco Free இயர்பட்ஸ். 13.4 mm ஆடியோ டிரைவர் (Dynamic), புளூடூத் 5.0 சப்போர்ட்டுடன் வரும் இது, ஆடியோ தரத்தில் ப்ரீமியம் TWS இயர்போன்ஸுடன் போட்டி போடுகிறது. IPX4 வாட்டர் ரெசிஸ்டென்ஸ் ரேட்டிங்கும் இதில் உண்டு என்பது பெரிய ப்ளஸ்.

Oppo என்கோ ஃப்ரி
Oppo என்கோ ஃப்ரி

ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும்... இயர்போன்ஸ் 5 மணிநேரம் வரை தாக்குப் பிடிக்கிறது. சார்ஜிங் கேஸுடன் 20 மணிநேரம் வரை சார்ஜ் செய்ய முடியும். இதனால் பேட்டரியைப் பொறுத்தவரையில் எந்தப் பிரச்னையும் இல்லை.

Oppo என்கோ ஃப்ரி
Oppo என்கோ ஃப்ரி

ப்ளஸ்

 • IPX4 வாட்டர் ரெசிஸ்டென்ஸ் ரேட்டிங்

 • ஆடியோ தரம்

 • செம டிசைன்

மைனஸ்

 • Noise Cancellation வசதிகள் சிறப்பாக இல்லை.

விலை: 7,990

Redmi இயர்பட்ஸ் S

ஷாவ்மி, ரெட்மி பிராண்டில்... மிகவும் குறைந்த விலையில் எடுத்து வந்திருக்கும் TWS இயர்போன்ஸ் இது. சாதாரண இயர்போன்ஸைவிடக் கொஞ்சம்தான் விலை அதிகம். புளூடூத் 5.0 சப்போர்ட் இருக்கிறது. மற்றபடி SBC ஆடியோ codec மட்டுமே சப்போர்ட் செய்யப்படுகிறது. ஆடியோ தரம் மிகவும் சுமாராகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த விலையிலும் IPX4 வாட்டர் ரெசிஸ்டென்ஸ் ரேட்டிங் கொடுத்திருக்கிறார்கள். டிசைன் வசதியாக இருக்கிறது.

Redmi இயர்பட்ஸ் S
Redmi இயர்பட்ஸ் S

ஒருமுறை சார்ஜ் செய்தால், இயர்போன்ஸ் 4 மணிநேரம் வரை தாக்குப் பிடிக்கிறது. சார்ஜிங் கேஸ் வைத்து 12 மணிநேரம் வரை சார்ஜ் செய்ய முடியும். Micro-USB சார்ஜிங்தான். இந்த விலையில் இதைப் பெரிய பிரச்சனையாகக் கூற முடியாதுதான். ஆனால் சார்ஜிங் கேபிள்கூடக் கொடுக்காமல் விட்டது மோசம் பாஸ்!

ப்ளஸ்

 • பட்ஜெட் விலை

 • வசதியான டிசைன்

மைனஸ்

 • மிகவும் சுமாரான ஆடியோ

 • சார்ஜிங் கேபிள் இல்லை.

விலை: 1,799

Redmi இயர்பட்ஸ் S
Redmi இயர்பட்ஸ் S

இது வெறும் டிரெய்லர்தான்... உண்மையில் அடுத்த ஆறு மாதங்களில்தான் இந்த ஏரியாவில் இன்னும் சில முக்கிய அறிமுகங்கள் வரவிருக்கின்றன. விரைவில் பட்ஜெட் விலையில் ஏர்பாட்ஸ் ஒன்றை ஆப்பிள் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்ப்ளஸும் அடுத்த மாதம் அதன் முதல் TWS இயர்போன்ஸை அறிமுகப்படுத்தவிருக்கிறது. இதனால் இனிதான் TWS ஆட்டம் சூடுபிடிக்கப் போகிறது.

ரியல்மி வாட்ச்

வசதிகள்:

 • 1.4 இன்ச் கலர் டச் டிஸ்ப்ளே

 • இதயத் துடிப்புக் கண்காணிப்பு

 • ஆக்ஸிஜன் அளவுக் கண்காணிப்பு (SpO2)

 • 14 ஸ்போர்ட்ஸ் மோடுகள்

 • IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட்

 • ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன் (SMS, அழைப்புகள், வாட்ஸ்அப் மற்றும் பிற செயலிகள்)

 • 9 நாள் தாக்குப் பிடிக்கும் பேட்டரி

ப்ளஸ்:

 • குறைந்த பட்ஜெட்டில் நிறைவான வசதிகள்

 • நீடித்து தாக்குப் பிடிக்கும் பேட்டரி

ரியல்மி வாட்ச்
ரியல்மி வாட்ச்

மைனஸ்:

 • அதிக வெளிச்சம் இருக்கும் இடங்களில் டிஸ்ப்ளேவில் இருப்பதைப் பார்ப்பது சிரமமாக இருக்கிறது.

 • ஃபிட்னஸ் ட்ராக்கிங் சரியாக இல்லை.

ஒன்லைன் ரிவ்யூ:

‘ரியல்மி பேண்ட்’ மூலம் வியரபிள் செக்மென்ட்டில் களமிறங்கிய ரியல்மி நிறுவனத்துக்குத் தொடக்கமே சறுக்கலாகத்தான் அமைந்தது. ஆனால் இந்த வாட்ச், குறைந்த விலையில் நிறைவான வசதிகளுடன் பார்த்ததும் நம்மைக் கவர்கிறது. டிசைனும் பார்க்க ஸ்டைலிஷாக இருக்கிறது. ஃபிட்னஸ் ட்ராக்கிங் மட்டும் இன்னும் மேம்படுத்தப்படலாம். மற்றபடி, விலைக்கு ஏற்ற நல்ல கேட்ஜெட்தான் இந்த ‘ரியல்மி வாட்ச்’

விலை: 3,999