ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

கேட்ஜெட்ஸ்

 டிஜிட்டல் உலகம்
பிரீமியம் ஸ்டோரி
News
டிஜிட்டல் உலகம்

டிஜிட்டல் உலகம்

ஓப்போ ரெனோ 3 ப்ரோ (Oppo Reno 3 Pro)

வசதிகள்:

 • 6.4 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே

 • Media Tek Helio P95 ப்ராசஸர்

 • 64 MP + 13 MP + 8 MP + 2 MP ரியர் கேமரா

 • 44 MP + 2 MP டூயல் செல்ஃபி கேமரா

 • 8 GB Ram + 128 GB ஸ்டோரேஜ்

 • 4025 mAh பேட்டரி

 • ஆண்ட்ராய்டு 10

ப்ளஸ்:

 • கேமரா

 • பேட்டரி

மைனஸ்:

 • ப்ராசஸர் இன்னும் சிறப்பாக இருக்கலாம்

கேட்ஜெட்ஸ்

ஒன்லைன் ரிவ்யூ:

தரமான மொபைல்தான் எனினும், விலைக்கேற்ற பர்ஃபாமன்ஸைத் தரவில்லை. இதைவிடக் குறைந்த விலையில் நல்ல வசதிகள் கொண்ட மொபைல்கள் கிடைக்கின்றன. அவற்றுடன் ஒப்பிடும்போது இந்த மாடல் கொஞ்சம் சுமார்தான்.

விலை:

8 GB Ram + 128 GB ஸ்டோரேஜ் -`31,990

ரியல்மீ 6 ப்ரோ (Realme 6 Pro)

வசதிகள்:

 • 6.6 இன்ச் Full HD+ டிஸ்ப்ளே

 • Qualcomm Snapdragon 720G ப்ராசஸர்

 • 64 MP + 12 MP + 8 MP + 2 MP ரியர் கேமரா

 • 16 MP + 8 MP டூயல் செல்ஃபி கேமரா

 • 6 GB Ram + 128 GB ஸ்டோரேஜ்

 • 4300 mAh பேட்டரி

 • ஆண்ட்ராய்டு 10

ப்ளஸ்:

 • நல்ல பேட்டரி

 • ஃபாஸ்ட் சார்ஜிங்

 • பவர்புல் ப்ராசஸர்

மைனஸ்:

 • லேசாக கணமாக இருப்பது

கேட்ஜெட்ஸ்

ஒன்லைன் ரிவ்யூ:

ரியல்மீ-யில் குறுகிய காலத்திலேயே பல மொபைல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொன்றிலும் விலைக்கேற்ப ப்ளஸ் மற்றும் மைனஸ் உண்டு,. ரியல்மீ X2-வுக்கும், 6 ப்ரோவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அமோலெட் டிஸ்ப்ளே மற்றும் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் சென்சார் X2-வி்ல் கூடுதலாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஒரு சில ஆயிரங்கள் செலவழிக்கத் தயார் என்றால் இதைவிட நல்ல போன் வாங்க முடியும்.

விலை:

6 GB Ram + 64 GB ஸ்டோரேஜ் - `17,999

6 GB Ram + 128 GB ஸ்டோரேஜ் - `18,999

8 GB Ram + 128 GB ஸ்டோரேஜ் - `19,999

ரெட்மீ நோட் 9 ப்ரோ (Redmi Note 9 Pro)

வசதிகள்:

 • 6.67 இன்ச் Full HD+ டிஸ்ப்ளே

 • Qualcomm Snapdragon 720G ப்ராசஸர்

 • 48 MP + 8 MP + 5 MP + 2 MP ரியர் கேமரா

 • 16 MP செல்ஃபி கேமரா

 • 4 GB Ram + 64 GB ஸ்டோரேஜ்

 • 5020 mAh பேட்டரி

 • ஆண்ட்ராய்டு பை 10

ப்ளஸ்:

 • நல்ல பேட்டரி

 • பவர்ஃபுல் ப்ராசஸர்

 • பர்ஃபாமன்ஸ்

மைனஸ்:

 • கனமாக இருப்பது

கேட்ஜெட்ஸ்

ஒன்லைன் ரிவ்யூ:

20,000 ரூபாய் விலைக்குள் ஒரு பவர்புல் ஆல்ரவுண்டராக இருக்கிறது இந்த ரெட்மீ 9 ப்ரோ. இதன் ஹை-எண்ட் வெர்ஷன் கொஞ்சம் விலை அதிகம் என்றாலும். லோ-எண்ட் மாடலே சிறப்பான பர்ஃபாமன்ஸ் கொடுக்கிறது. 20,000 ரூபாய் செக்மன்ட்டில் நம்பி வாங்க்கூடிய போன் இது.

விலை:

4 GB Ram + 64 GB ஸ்டோரேஜ் - `12,999

6 GB Ram + 128 GB ஸ்டோரேஜ் - `15,999

சாம்சங் கேலக்ஸி A51 (Samsung Galaxy A51)

வசதிகள்:

 • 6.4 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே

 • Exynos 9611 ப்ராசஸர்

 • 48 MP + 12 MP + 5 MP + 5 MP ரியர் கேமரா

 • 32 MP செல்ஃபி கேமரா

 • 6 GB Ram + 128 GB ஸ்டோரேஜ்

 • 4000 mAh பேட்டரி

 • ஆண்ட்ராய்டு 10

ப்ளஸ்:

 • ஸ்டைலான டிசைன்

 • குறைவான எடை

 • பேட்டரி

மைனஸ்:

 • விலைக்கேற்ற பர்ஃபாமன்ஸ் இல்லை

கேட்ஜெட்ஸ்

ஒன்லைன் ரிவ்யூ:

சாம்சங் மிட்-ரேஞ்ச் சீரிஸில் இது நல்ல மொபைல் என்றாலும் இதில் போட்டியாளரை விடக் கொஞ்சம் குறைவான வசதிகள்தான் உள்ளன.

சில ஆயிரங்கள் குறைவாகக் கொடுத்தாலே இதே வசதிகள் கொண்ட மொபைல்கள் கிடைக்கும் எனும்போது இதை ஏன் வாங்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இன்னும் விலைக்கேற்ற பர்ஃபாமன்ஸ் இருந்திருக்கலாம்.

விலை:

6 GB Ram + 128 GB ஸ்டோரேஜ் - `23,999